Untitled Document
May 20, 2026 [GMT]
அம்மா உணவகங்களைச் சீரமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். அதோடு பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் விஜய்
உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். அதோடு பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

  

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகிறது!
[Wednesday 2026-05-20 07:00]

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முன்னதான நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். முடிவுகளை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உரிய நேரத்தில் நேரத்தில் முடிவுகள் வெளியிடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் பேசப்பட்டிருந்தது.



10 நாட்களாக விஜய்யின் செயல்பாடுகள் எப்படி? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி!
[Wednesday 2026-05-20 07:00]

முதல்வராக பதவியேற்றது முதல் விஜய்யின் செயல்பாடுகளுக்கு 100க்கு 100 மதிப்பெண் கொடுப்பேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என்று மக்களுக்கு தேவையானதை விஜய் முதலில் செய்திருப்பதாக கூறியுள்ளார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 10 நாட்களாகி இருக்கிறது. இந்த 10 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி இருக்கிறார்.



9 To 5: விஜய் டைமிங்கால் ஆச்சரியத்தில் தலைமைச் செயலகம்!
[Wednesday 2026-05-20 07:00]

தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவை அலுவலகத்திலேயே அமர்ந்து அருந்திவிட்டு பணிகளை தொடரும் விஜய், தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து வருகிறார்.



தவெகவில் இணையப் போகும் சகாயம் ஐஏஎஸ்?
[Tuesday 2026-05-19 16:00]

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் சகாயம் போட்டியிடலாம் என்பதோடு, மாநிலங்களவை உறுப்பினருக்கான ரேஸ் பட்டியலிலும் அவரது பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது.



அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து மீட்டிங்? - தவெக எம்.எல்.ஏ கனிமொழி விளக்கம்!
[Tuesday 2026-05-19 16:00]

அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து மீட்டிங் நடத்தியதாக கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீது விமர்சனம் எழுந்த நிலையில், விளக்கம் அளித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ கனிமொழி, ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்திருப்பதும், அவரைச் சந்திக்க வந்த அதிகாரிகள் பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அவரே பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.



நாளை மருந்து கடைகள் இயங்காது: என்ன காரணம்?
[Tuesday 2026-05-19 16:00]

இந்தியாவில் நாளை மருந்தகங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. கொரோனா காலத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தற்காலிக அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது இந்த அனுமதி தொடரும் நிலையில், முறையான மருந்துச் சீட்டு மற்றும் சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதாகவும், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகள், தூக்க மருந்துகள், மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் எளிதாகக் கிடைப்பதாக குற்றம்சாட்டு உள்ளது.



யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதியவர்!
[Tuesday 2026-05-19 16:00]

முதியவர் ஒருவர் யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவின் ஆங்கினார் கிராமத்த்தை சேர்ந்தவர் 75 வயதான பூல் பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. மும்பையில் பணியாற்றிய இவர், குழந்தைகளுக்கு திருமணம் செய்து தனது இல்லற கடமைகளை முடித்த பின்னர், அவரது மனைவி இறந்து விட்டார்.



"உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை" - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
[Tuesday 2026-05-19 07:00]

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து மீண்டும் பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட புதிய அவசர வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. தமிழக சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையிலேயே அவர் பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு இப்பவே தொற்றியுள்ளது.. தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாதது என்றாலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.



அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா!
[Tuesday 2026-05-19 07:00]

இந்தியா, தனது எரிசக்தி பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, அமெரிக்காவின் தடைகள் அல்லது விலக்குகளைப் பொருட்படுத்தாமல் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பல நாடுகள் அந்த தடைகளை பின்பற்றினாலும், இந்தியா தனது தேவைகளை முன்னிலைப்படுத்தி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



"முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்" - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்!
[Tuesday 2026-05-19 07:00]

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே 18ம் தேதி ஈழப்போரின் இறுதிநாளில் முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழினப்படுகொலையாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், நினைவு கூர்ந்து வருகின்றனர்.



முதல்வர் விஜய்யின் செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் (CMO) பல்வேறு அரசுத் துறைகளைக் கவனிக்கும் பொறுப்புகள், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளருக்குப் பிரித்து வழங்கி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் / செயலாளர்-I ஆக நியமிக்கப்பட்டுள்ள பி. செந்தில்குமாரிடம் நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உள்ளிட்ட 10 முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
[Monday 2026-05-18 18:00]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். அதோடு பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இன்று (18.05.2026) அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.



யானைகளுக்கு இடையேயான மோதலில் சென்னையை சேர்ந்த பெண் உயிரிழப்பு!
[Monday 2026-05-18 18:00]

யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி, சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்த 33 வயதான பெண் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பாட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். குளிப்பாட்டப்படும் போது, கஞ்சன் என்ற யானை, மார்த்தாண்டா என்ற மற்றொரு யானையைத் தாக்கியது. யானையை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.



ரயிலில் அநாதரவாகக் கிடந்த பெட்டி: திடுக்கிடவைத்த காட்சி!
[Monday 2026-05-18 18:00]

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ரயில் ஒன்றில் அநாதரவாகக் கிடந்த பெட்டி மற்றும் பையை சோதனையிட்ட பொலிசார் அதிர்ச்சியடைய நேர்ந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில், கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றை துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, ரயில் பெட்டி ஒன்றிலுள்ள கழிவறை ஒன்றின் அருகே தகரப் பெட்டி ஒன்றும் பை ஒன்றும் அநாதரவாகக் கிடப்பதைக் கண்ட அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அதிகாரிகள் பொலிசாரை அழைத்துள்ளனர்.



ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்' - தூக்கப்படும் திமுகவின் டாப் தலைகள்?
[Sunday 2026-05-17 07:00]

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தலைநகர வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுகவின் முக்கியப் புள்ளிகளைக் குறிவைத்து ஒரு ரகசிய அதிரடி திட்டத்தைத் தீட்டியுள்ளதாகத் தற்போதைய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன. 'ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்' (Operation Blue Giant) என்று ரகசியப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், திமுகவின் 5 முதல் 6 வரையிலான மிக முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இரவோடு இரவாக உடையும் அதிமுக: தவெக அள்ளித்தரும் முக்கிய இலாக்காக்கள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதிய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான ரகசிய தகவல் கசிந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 அமைச்சர்களின் பட்டியலைத் தாண்டி, மீதமுள்ள முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள் அனைத்தும், தங்களுக்கு ஆதரவளிக்க முன்வரும் அதிமுக உறுப்பினர்களுக்காகவே ரகசியமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பத்திரப்பதிவு டூ போக்குவரத்து: அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ்நாட்டின் தவெக ஆட்சி அமைந்து ஒரு வாரமாகிவிட்ட சூழலில், 9 அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், இன்னும் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. அது எந்தெந்த துறைகள் என்பதையும், அதற்கான காரணம் குறித்தும் விரிவாக பார்க்கலாம். தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பின் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்திருக்கிறது.



"கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால்..." - அடுத்த ரெய்டுவிட்ட முதல்வர் விஜய்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.



வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்திய அரசு!
[Sunday 2026-05-17 07:00]

இந்திய அரசு, மே 16, 2026 முதல் வெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. Directorate General of Foreign Trade (DGFT) வெளியிட்ட அறிவிப்பின் படி, ITC HS Code 71069221 மற்றும் 71069229 உட்பட்ட வெள்ளி பொருட்கள் (99.9% தூய்மையான வெள்ளி பட்டைகள், பிற வகை வெள்ளி பார்கள்) “Free” வகையிலிருந்து “Restricted” வகைக்கு மாற்றப்பட்டுள்ளன.



தமிழ்நாடு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு!
[Saturday 2026-05-16 18:00]

026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 10 ஆம் திகதி சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், பொது நிர்வாகம், உள்துறை, காவல், இளைஞர் நலன், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், முதியோர், மாற்று திறனாளிகள் நலன், சிறப்பு திட்ட செயலாக்கம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா