Untitled Document
October 23, 2026 [GMT]
தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு... கனமழை எச்சரிக்கை!
[Wednesday 2026-10-21 07:00]

தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

  

இது உள்நாட்டைக் கடந்து கேரளம் வழியாக அரபிக் கடலை நோக்கி நகரும். இதனால் தென் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வேளையில் வெய்யிலாக இருந்த போதும், இரவில் குறிப்பிட்ட இடங்களில் தீவிரமாக மழை பெய்யும். மாலை முதல் இரவு வரை படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து அதிகாலை வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் இரவு முதல் விடிய விடிய மழை பெய்யும்.

அதேபோல் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்ப்யு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
[Friday 2026-10-23 07:00]

அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது எனவும், மீறி விமர்சிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்: கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
[Friday 2026-10-23 07:00]

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் போதிய கருவி இல்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீருடன் அந்த குழந்தையின் தாத்தா, இந்த மருத்துவமனையில் 150 வகை நோய்களை கண்டறியும் கருவி இல்லையாம். அதை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைப்பதாக கூறினார்.



"உடலை வாங்க மாட்டோம்" - கோவை மாணவரின் பெற்றோர் திட்டவட்டம்!
[Friday 2026-10-23 07:00]

சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவை மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர். கோவையில் பட்டியலின மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், அவரது பெற்றோரிடம் பீளமேடு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவரின் பெற்றோர் ஆசியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலனை, சக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.



மர்மமாய் மயமான செஞ்சி சிறுமி: தாய் பக்கம் திரும்பிய சிபிசிஐடி விசாரணை வளையம்!
[Thursday 2026-10-22 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணையின் வேகம் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள ஆலம்பூண்டி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் மகள் ஹேமலதா என்ற இந்த சிறுமி, கடந்த 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் அவரது வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.



”இரு கைதிகள் தப்பிய விவகாரம்” - 6 காவலர்கள் சஸ்பெண்ட்!
[Thursday 2026-10-22 16:00]

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து சுரேஷ் (41) மற்றும் சுதீப் போகதி (21) ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பினர். மிக அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையாகக் கருதப்படும் புழல் சிறையிலிருந்து, அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.



தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
[Thursday 2026-10-22 16:00]

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.



ரேஷன் அரிசிக்குப் பதில் வங்கி கணக்கில் பணம் வரவு: அரசு அறிவிப்பு!
[Thursday 2026-10-22 16:00]

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.35.71 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோவும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால், கடந்த 6 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை.



நெல்லை, தென்காசி, குமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
[Thursday 2026-10-22 07:00]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார். மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால், தற்போது 3 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.



அமைச்சர்கள் கார் வாங்க ரூ.26 லட்சம், எம்எல்ஏ-வுக்கு ரூ.15 லட்சம்: உச்சவரம்பு நிர்ணயித்த தமிழக அரசு!
[Thursday 2026-10-22 07:00]

அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோர் கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது பற்றி சட்டமன்ற போக்குவரத்து படி விதிகளில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்எல்ஏ-க்கள் கார் வாங்க ரூ.15 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சட்டசபையில் 110 விதிகளின் கீழ் முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார்.



10-வது நாளாக தேடும் போலீசார்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு!
[Thursday 2026-10-22 06:00]

விழுப்புரம் செஞ்சி சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செஞ்சி சிறுமியை தொடர்ந்து 10-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போயிருந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம் பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வரும் வடிவேலு - பவானி தம்பதியின் 2-வது மகள் 7 வயது சிறுமி.



கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
[Wednesday 2026-10-21 16:00]

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. இந்நிலையில், கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியினர் 9 பேரை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. இவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்கள்: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
[Wednesday 2026-10-21 16:00]

லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.



விபரீத முடிவெடுத்த நிதி ஆலோசகர்: மற்றொரு யூடியூபர் மீது வழக்குப் பதிவு!
[Wednesday 2026-10-21 16:00]

பைனான்ஸ் வித் ஹரிஷ் (Finance with Harish) என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ஹரிஷ், நிதி ஆலோசனைகள் தொடர்பான உள்ளடக்கங்களைப் பகிர்ந்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வசித்து வந்த யூடியூபர் ஹரிஷ், நேற்று (20.10.2026) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக கடற்கரைப் பகுதியில் உருவாகிய காற்றழுத்தம்: 22 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
[Wednesday 2026-10-21 16:00]

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.



தவெக பெண்களுக்கு மட்டுதான் மாண்பா? - மேயர் பிரியா கேள்வி!
[Wednesday 2026-10-21 07:00]

தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக் கொண்டு விர்ச்சியல் அப்யூசர்ஸை முதல்வர் விஜய் உருவாக்குவது நியாயமா என்று சென்னை மேயர் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்துகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



விஜய் எழுதிய ரகசிய கடிதம்: சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு?
[Wednesday 2026-10-21 07:00]

சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது - தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி முதல்வர் விஜய் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ரகசிய கடிதம் எழுதி இருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை தனியாருக்கு ஒப்படைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் ஒன்றை எழுதிருந்தார்.



"இரும்புகரத்தால் அடக்குங்க" - விஜய்க்கு அண்ணாமலை அறிவுரை!
[Tuesday 2026-10-20 17:00]

பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறினார். புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். வீ தி லீடர்ஸ் என்கிற அமைப்பின் மூலம் களத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டனர். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். தவெகவுக்கு அவகாசம் வழங்கி விமர்சிக்க மாட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவுடன் ஒப்பிட்டு தவெக மற்றும் விஜயை அண்ணாமலை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.



தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்? - முதல்வர் விஜய் போட்ட திட்டம்!
[Tuesday 2026-10-20 17:00]

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் விவாதித் திருக்கிறார் முதல்வர் விஜய். அனேகமாக, ஏப்ரல் மாதம் இந்த தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் அண்மைக்காலத்தில் 1996, 2001, 2006, 2011 ஆகிய வருடங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடந்தன. 2016 -ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.



நாதக வேட்பாளர் கார்த்திகா கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
[Tuesday 2026-10-20 17:00]

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ சென்ற பகுதியில், நாதக சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவும் செல்ல, அவரை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது அவர் அங்கு தனது கட்சி கொடியை தூக்கிக் காட்டி போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திகா உட்பட பலர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.



சாலை என நினைத்து 3D ஓவியம் வரையப்பட்ட சுவற்றில் லாரியை மோதிய ஓட்டுநர்!
[Tuesday 2026-10-20 17:00]

டெல்லி - டேராடூன் விரைவு சாலையில், ண்டெய்னர் லாரி ஓட்டுநர் சுவரில் வரையப்பட்டிருந்த 3D சாலை ஓவியத்தை உண்மையான சாலை என நினைத்து அதில் லாரியை மோதியுள்ளார். பொதுவாக நெடுஞ்சாலையில் உள்ள சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் காண்போரின் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டிருக்கும். தற்போது அப்படியான ஓவியமே ஒரு சாலை விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா