Untitled Document
November 4, 2026 [GMT]
"என் அம்மாவே என்னை தப்பா பேசுறாங்க" - இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி!
[Wednesday 2026-11-04 16:00]

கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.

கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.

  

சென்னை துரைப்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரி கண்ணகி நகர் பகுதியில் உள்ள கபடி விளையாட்டு அரங்கில் கபடி விளையாட்டு வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் எனது தந்தை பாட்டி மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தாயுடன் நான் இல்லை. எனது தாய் எங்களிடம் இருந்து பிரிந்து சென்று 6 ஆண்டுகள் ஆகிறது. என் அம்மாவே, என்னை பற்றி தவறாக பேசி வருகிறார். என்னுடைய விளையாட்டை தவறாக சொல்லி வருகின்றார். எனது குடும்பத்தில் தனிப்பட்ட பல விவகாரங்கள் உள்ளதால் அதனை தற்போது பொது வெளியில் சொல்ல முடியவில்லை.

அரசு எனக்கு கொடுத்த பணத்தை, ஏற்கனவே எனக்கு உதவி செய்தவர்களுக்கு ஒரு நன்றி கடனாக கொடுத்தேன். அது ஆவணமாக உள்ளது. கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். என்னை வழி அனுப்ப என் அம்மா ஏன் வரவில்லை. இப்போது என் பெயரை கெடுப்பதற்காகவே முயற்சிக்கின்றார். எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது அபாண்டமாக என் அம்மா பழி போடுகிறார். சில வழக்குகள் காரணமாக அம்மாவுக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

சட்டப்படி அதனை நாங்கள் சந்தித்து வருகிறோம். நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றோம். சட்டப்படி தான் நடக்கிறோம். தனது குடும்பத்தில் தனிப்பட்ட பல விவகாரங்கள் உள்ளதால் அதனை தற்பொழுது பொது வெளியில் சொல்ல முடியவில்லை. அரசு எனக்கு கொடுத்த பணத்தை, ஏற்கனவே எனக்கு உதவி செய்தவர்களுக்காக, அந்த அணிக்காக ஒரு நன்றி கடனாக கொடுத்தேன். அது ஆவணமாக உள்ளது. நான் கொடுத்த தொகை, பணம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய பணமும் இல்லை. இந்த பிரச்சனையால் எனக்கு நிறைய தொந்தரவு ஏற்படுகிறது.

பொறாமையால் என்னை முடக்க பார்க்கிறார்கள். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். தொடர்ச்சியாக என் அம்மா என்னை குறித்து பேசுவது, என்னை விளையாட்டில் கவனம் செலுத்துவதை தடுக்கிறது" இவ்வாறு கார்த்திகா கூறினார். முன்னதாக கார்த்திகாவின் தாயார், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் , என் பொண்ணை மிரட்டி வச்சுஇருக்காங்க. என்னிடம் பேசமாட்டீங்குது.. என் பெண் நல்ல நிலைமைக்கு வந்த உடனே, பணத்தை அவர்கள் திருடுவதற்கு பிளான் போடுகிறார்கள். என் மகளை நான் பார்த்து ஏழு மாதம் ஆகிவிட்டது. என்னிடம் பேசுவதே இல்லை . என்னை பற்றி பொதுவெளியில் தவறாக பேசிவிட்டார்கள்" என்று ஆதங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



கூண்டோடு தூக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்: விஜய் அலுவலகத்திலும் புதிய அதிகாரிகள்?
[Wednesday 2026-11-04 16:00]

தமிழக அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் முதலமைச்சரின் நேரடிச் செயலாளர்கள் குழுவிலும் புதிய முகங்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.



‘தவெகவினர் பணம் வாங்கி எங்களை மிரட்டுகின்றனர்’ - குமுறும் திருவண்ணாமலை கடைக்காரர்கள்!
[Wednesday 2026-11-04 16:00]

திருவண்ணாமலை மாநகரத்தின் புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை அதிகமாக இருக்கிறது என பாதிக்கும் மேற்பட்ட கடைகளை ஒப்பந்தத்தின் வழியாக யாரும் எடுக்கவில்லை மூடி வைக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி மற்றும் பேருந்துகள் வெளியேறும் பகுதியில், திடீரென கண்டெய்னர் பெட்டிகளை வைத்து டிசைன் செய்யப்பட்ட மூன்று பெரிய பங்க் கடைகள் முளைத்து பேருந்து நிலைய கடைக்காரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - மத்திய அரசிடம் ஸ்ட்ரிக்டாக கூறிய முதல்வர் விஜய்!
[Wednesday 2026-11-04 16:00]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.



விஜய்யிடம் பரிசு வாங்கும் 5 மாவட்ட மாணவர்கள்: பெற்றோருக்கும் அழைப்பு!
[Wednesday 2026-11-04 07:00]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருகிறார்.



முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
[Wednesday 2026-11-04 07:00]

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சிரமம் இனிமேல்இல்லை. அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாதந்தோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று (நவம்பர் 4), நாளை (நவம்பர் 5) ஆகிய 2 நாட்களில் இல்லம் தேடி வழங்கப்பட உள்ளன.



புகார் அளித்த சிறுமியை குத்திய போக்சோ குற்றவாளி: கேரளாவில் அதிர்ச்சி!
[Wednesday 2026-11-04 07:00]

கேரளாவில் போக்சோ வழக்கில் பிணையில் வெளிவந்த கைதி புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் என்ற 22 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் பிணையில் வெளியே வந்துள்ளார்.



செஞ்சி சிறுமி: குற்றவாளி பகீர் வாக்குமூலம் - கூட்டாளி அரவிந்தை காட்டுக்கு தூக்கி சென்ற CBCID!
[Tuesday 2026-11-03 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 23 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, தப்பியோடிய சாமியார், விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.



"எங்களுக்கு பாதுகாப்பே இல்ல" - விஜய்யை பார்க்க வந்த பெண் வேதனை!
[Tuesday 2026-11-03 16:00]

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவரக்கூடிய நிலையில், ஈரோடு பெருந்துறையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த அவரது ரசிகர்கள், ரசிகைகளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர், "பெண்கள் பாதுகாப்பை மட்டும் மேம்படுத்திக்கொடுங்கள்.. இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்" என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.



முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை குடிமகனுக்கு உண்டு: நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்!
[Tuesday 2026-11-03 16:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-ஆவது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.



சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்: புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல்!
[Tuesday 2026-11-03 16:00]

சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது பயண தூரம் 73 நிமிடமாக குறையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் நேற்று முன் தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்​தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.



டாஸ்மாக் கடைகள் மூடியதுமே மனமகிழ் மன்றங்களில் திரண்ட குடிமகன்கள்!
[Tuesday 2026-11-03 07:00]

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒருபக்கம் பார் நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்றால், இன்னொருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் கவனம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் என்ன? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.



அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்: ஆந்திராவில் பலத்த மழை!
[Tuesday 2026-11-03 07:00]

வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது.



முரசு புயலால் கொட்டும் கனமழை: கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
[Tuesday 2026-11-03 07:00]

கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முரசு புயல் கரையை கடந்த நிலையில் கடலூர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.



திமுகவிடம் காட்டிய உக்கிரம் தவெக அரசு மீது இல்லையே? - அண்ணாமலையின் விமர்சனத்தை கவனித்தீர்களா!
[Monday 2026-11-02 16:00]

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது என வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.



முதல்வர் விஜய் திறந்து வைத்த புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் என்ன வசதிகள்?
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலைல் 23 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைத்து கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலைத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் காத்திருப்பு அறைகள், பார்க்கிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.



"விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்” - கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
[Monday 2026-11-02 16:00]

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. ஏற்கெனவே தன் தரப்பு வாதங்களை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.



நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்: தமிழகத்தில் வெளுக்கும் கனமழை!
[Monday 2026-11-02 16:00]

முரசு புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசாப்பூர் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.



முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்!
[Monday 2026-11-02 07:00]

புதுக்கோட்டைக்கு முதல் முறையாக இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக இன்று இந்த பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நெருங்கி வரும் முரசு புயல்: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
[Monday 2026-11-02 07:00]

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல வலுப்பெற்ற புயலாக மாறியது. இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் இருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.



ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு: அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்!
[Monday 2026-11-02 07:00]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணியின் காவலாளி சீனிவாசனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான வழக்கு குறித்த விவரங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைப்பதாக இருக்கிறது.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா