Untitled Document
November 5, 2026 [GMT]
செஞ்சி சிறுமி மாயம்: உளவுத்துறையை களமிறக்கிய விஜய்!
[Thursday 2026-11-05 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 25 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 25 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

  

தாய் பவானி, தந்தை வடிவேலு, சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், சாமியார், பூசாரி, சுடுகாடுகள், காடுகள் மற்றும் நள்ளிரவில் கடந்த 14 நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்கள் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது. இதற்கிடையே, "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தாதகிரி முருகன் கோவிலில் ஹேமலதாவைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட சிறுமியைப் பார்த்தேன்" என்று அரசுப் பள்ளி சமையலர் பவானி என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து நாமக்கல் பகுதிக்கு விசாரணை பாய்ந்த நிலையில், அங்கு தாதகிரி முருகன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரச் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. தற்போது இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து, தமிழகத்தின் மிக முக்கியமான உளவு அமைப்புகளும் நாமக்கல்லில் அதிகாரப்பூர்வமாகக் களமிறக்கப்பட்டு முகாமிட்டுள்ளன. நாமக்கல்லில் முகாமிட்டுள்ள முக்கிய உளவு அமைப்புகள் வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, சிபிசிஐடி தனிப்படையுடன் இணைந்து மூன்று முக்கிய உளவுப் பிரிவுகள் ஒரே நேரத்தில் தீவிர கள விசாரணையில் இறங்கியுள்ளன:

OCIU (Organised Crime Intelligence Unit - திட்டமிட்ட குற்றங்கள் உளவுப் பிரிவு) மாநிலங்களுக்கு இடையேயான ஆட்கடத்தல் நெட்வொர்க்குகள், குழந்தைகளைக் கடத்தி சட்டவிரோதமாக தத்து கொடுக்கும் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட ரவுடி நெட்வொர்க்குகளைக் கண்காணிக்கும் சிறப்பு உளவுப் பிரிவான OCIU அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். உள்ளூர் அளவில் குழந்தைகள் கடத்தல் புரோக்கர்கள் அல்லது முதிய தம்பதியினருக்குக் குழந்தைகளை விற்றுவிடும் சட்டவிரோத ஏஜென்ட்டுகள் ஏதேனும் நாமக்கல்லில் செயல்படுகிறார்களா என்ற கோணத்தில் இந்த அமைப்பு முழுமையாகத் தரவுகளைத் திரட்டி வருகிறது.

SBCID (Special Branch CID - மாநில சிறப்புப் புலனாய்வு பிரிவு) தமிழகக் காவல் துறையின் முதன்மை உளவுப் பிரிவான SBCID அதிகாரிகள், சேந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாறுவேடத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி சமையலர் அளித்த தகவல், அவர் அடையாளம் காட்டிய முதிய தம்பதியினர் யார், அவர்கள் தங்கியிருந்த இடம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைகளில் உள்ள சந்தேக நபர்களின் பட்டியலை இவர்கள் ரகசியமாகச் சேகரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட எஸ்பியின் சிறப்பு உளவுப் பிரிவு (District SP Special Intelligence Wing) நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்பு உளவுப் பிரிவு போலீசாரும் இவர்களுடன் கைகோர்த்துள்ளனர். உள்ளூர் தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், கோவில் அன்னதானக் கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களில் அனுமதிக்கப்பட்ட அல்லது அழைத்து வரப்பட்ட பெண் குழந்தைகளின் விபரங்களை உள்ளூர் உளவுத்துறை முழுமையாகத் துருவி வருகிறது. சேந்தமங்கலம் பகுதியில் சல்லடை போடும் தனிப்படைகள் இந்த மூன்று உளவு அமைப்புகளும் சேந்தமங்கலம் தாதகிரி முருகன் கோவில் அடிவாரம், காளிப்பட்டி, கொல்லிமலை அடிவாரப் பகுதிகள் மற்றும் நாமக்கல் நகரின் முக்கிய தங்குமிடங்களில் முகாமிட்டுள்ளன.

தகவல் அளித்த பெண்மணி அடையாளம் காட்டியபடி, முதிய தம்பதியினருடன் சிறுமி ஏதேனும் வாடகை வீடுகளிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்க வைக்கப்பட்டுள்ளாரா? செஞ்சியிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் உள்ள சட்டவிரோத நபர்களிடம் கைமாற்றப்பட்டதா? நள்ளிரவு நெடுஞ்சாலைகளில் பயணித்த லாரிகள் மூலமாக நாமக்கல் எல்லைக்குள் சிறுமி கொண்டுவரப்பட்டாரா? என்ற அத்தனை கேள்விகளுக்கும் விடை தேடி, ரகசிய இன்ஃபார்மர்கள் மற்றும் அதிநவீன செல்போன் டவர் கண்காணிப்பு மூலம் உளவுத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் ரகசிய ஆப்பரேஷனை நடத்தி வருகின்றனர்.

"என் குழந்தை கண்டிப்பாக உயிரோடு எங்கோ இருக்கிறாள்.. அவளை மீட்டுத் தாருங்கள்" என்று தாய் பவானி தொடர்ந்து கதறி அழுது வரும் நிலையில், உளவு அமைப்புகள் ஒட்டுமொத்தமாக நாமக்கல்லில் குவிந்திருப்பது வழக்கை மிக முக்கியமான இறுதித் திருப்புமுனையை நோக்கி நகர்த்தியுள்ளது. சிபிசிஐடி மற்றும் உளவுத்துறையினரின் இந்த அதிரடி கூட்டு வேட்டை, 25 நாட்களாக நீடித்து வரும் செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான மர்மத்தை உடைத்து, குழந்தையைப் பத்திரமாக மீட்க உதவும் என்ற பலத்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள்: ஆந்திராவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
[Thursday 2026-11-05 16:00]

முரசு புயலின் போது காணாமல் போன மீனவர்கள், ஆந்திராவில் அவர்களது உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ‘முரசு’ புயலாக மாறியது. இந்த புயல் கடந்த 2ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடந்தது.



விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? - முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
[Thursday 2026-11-05 16:00]

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, ரூ. 75,000 வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாக எப்போது தள்ளுபடி என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.



அஜித் குமார் லாக் அப் மரணம்: விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
[Thursday 2026-11-05 16:00]

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் 9.5 சவரன் தங்க நகையும், ரூ.2500 பயணமும் திருடப்பட்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் காவல் பணியில் இருந்த 29 வயது அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் அடுத்த நாளே அஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.



STAR 3.0 திட்டத்தில் மாற்றம்: 4 வகை பத்திரங்களுக்கு புதிய வசதி!
[Thursday 2026-11-05 07:00]

தமிழகத்தில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட STAR 3.0 திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஒருபக்கம் 4 வகையான குடும்ப சொத்து பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, ஒரு மணி நேரத்தில் அசல் பத்திரத்தைப் பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது. இன்னொருபக்கம், புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் வெப்சைட்டில் விடுபட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பொதுமக்களால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி முறைகேடு புகார்: இன்று ஜாமீன் கிடைக்குமா?
[Thursday 2026-11-05 07:00]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை அமைந்தகரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



இன்று முதல் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு: எங்கே கிடைக்கும் தெரியுமா?
[Thursday 2026-11-05 07:00]

தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான 10 வகையான காய்கறிகளை ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு வாங்கலாம். "வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த சலுகை விற்பனை, இன்றைய தினம் தொடங்குகிறது. இந்த தொகுப்பில் என்னென்ன காய்கறிகள் கிடைக்கும், எங்கே வாங்கலாம், எத்தனை நாட்களுக்கு விற்பனை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை ஆரம்பமாகிறது.



"என் அம்மாவே என்னை தப்பா பேசுறாங்க" - இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி!
[Wednesday 2026-11-04 16:00]

கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.



கூண்டோடு தூக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்: விஜய் அலுவலகத்திலும் புதிய அதிகாரிகள்?
[Wednesday 2026-11-04 16:00]

தமிழக அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் முதலமைச்சரின் நேரடிச் செயலாளர்கள் குழுவிலும் புதிய முகங்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.



‘தவெகவினர் பணம் வாங்கி எங்களை மிரட்டுகின்றனர்’ - குமுறும் திருவண்ணாமலை கடைக்காரர்கள்!
[Wednesday 2026-11-04 16:00]

திருவண்ணாமலை மாநகரத்தின் புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை அதிகமாக இருக்கிறது என பாதிக்கும் மேற்பட்ட கடைகளை ஒப்பந்தத்தின் வழியாக யாரும் எடுக்கவில்லை மூடி வைக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி மற்றும் பேருந்துகள் வெளியேறும் பகுதியில், திடீரென கண்டெய்னர் பெட்டிகளை வைத்து டிசைன் செய்யப்பட்ட மூன்று பெரிய பங்க் கடைகள் முளைத்து பேருந்து நிலைய கடைக்காரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - மத்திய அரசிடம் ஸ்ட்ரிக்டாக கூறிய முதல்வர் விஜய்!
[Wednesday 2026-11-04 16:00]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.



விஜய்யிடம் பரிசு வாங்கும் 5 மாவட்ட மாணவர்கள்: பெற்றோருக்கும் அழைப்பு!
[Wednesday 2026-11-04 07:00]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருகிறார்.



முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
[Wednesday 2026-11-04 07:00]

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சிரமம் இனிமேல்இல்லை. அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாதந்தோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று (நவம்பர் 4), நாளை (நவம்பர் 5) ஆகிய 2 நாட்களில் இல்லம் தேடி வழங்கப்பட உள்ளன.



புகார் அளித்த சிறுமியை குத்திய போக்சோ குற்றவாளி: கேரளாவில் அதிர்ச்சி!
[Wednesday 2026-11-04 07:00]

கேரளாவில் போக்சோ வழக்கில் பிணையில் வெளிவந்த கைதி புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் என்ற 22 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் பிணையில் வெளியே வந்துள்ளார்.



செஞ்சி சிறுமி: குற்றவாளி பகீர் வாக்குமூலம் - கூட்டாளி அரவிந்தை காட்டுக்கு தூக்கி சென்ற CBCID!
[Tuesday 2026-11-03 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 23 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, தப்பியோடிய சாமியார், விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.



"எங்களுக்கு பாதுகாப்பே இல்ல" - விஜய்யை பார்க்க வந்த பெண் வேதனை!
[Tuesday 2026-11-03 16:00]

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவரக்கூடிய நிலையில், ஈரோடு பெருந்துறையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த அவரது ரசிகர்கள், ரசிகைகளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர், "பெண்கள் பாதுகாப்பை மட்டும் மேம்படுத்திக்கொடுங்கள்.. இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்" என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.



முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை குடிமகனுக்கு உண்டு: நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்!
[Tuesday 2026-11-03 16:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-ஆவது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.



சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்: புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல்!
[Tuesday 2026-11-03 16:00]

சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது பயண தூரம் 73 நிமிடமாக குறையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் நேற்று முன் தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்​தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.



டாஸ்மாக் கடைகள் மூடியதுமே மனமகிழ் மன்றங்களில் திரண்ட குடிமகன்கள்!
[Tuesday 2026-11-03 07:00]

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒருபக்கம் பார் நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்றால், இன்னொருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் கவனம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் என்ன? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.



அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்: ஆந்திராவில் பலத்த மழை!
[Tuesday 2026-11-03 07:00]

வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது.



முரசு புயலால் கொட்டும் கனமழை: கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
[Tuesday 2026-11-03 07:00]

கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முரசு புயல் கரையை கடந்த நிலையில் கடலூர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா