Untitled Document
November 8, 2026 [GMT]
நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்: பூஜை செய்ய உகந்த நேரம் எது?
[Sunday 2026-11-08 06:00]

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்துப் பண்டிகையை வரவேற்றுள்ளனர். அதிகாலை கங்கா ஸ்நானம் முதல் வழிபாடுகள் வரை தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்தனர். புத்தாடைகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து இறைவனை வணங்கி குடும்பத்தோடு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அண்டை வீட்டாருக்கும் உறவினர்களுக்கும் விதவிதமான பலகாரங்களைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்துப் பண்டிகையை வரவேற்றுள்ளனர். அதிகாலை கங்கா ஸ்நானம் முதல் வழிபாடுகள் வரை தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்தனர். புத்தாடைகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து இறைவனை வணங்கி குடும்பத்தோடு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அண்டை வீட்டாருக்கும் உறவினர்களுக்கும் விதவிதமான பலகாரங்களைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். வட மாநிலங்களிலும் அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றி உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பண்டிகை நாளான இன்று காலை முதலே காய்கறி சந்தைகள், பூ மார்க்கெட்டுகள் மற்றும் இனிப்புக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதிகளில் மலர்கள், அருகம்புல், வாழைக்கன்றுகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். இதேபோல் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் கடைவீதிகளும் காலையிலேயே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. கடைசி நேரப் புத்தாடை மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய முக்கிய சாலைகளில் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி திருநாளில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை வழிபடுவது கூடுதல் நன்மைகளையும் வளம் தரும் யோகத்தையும் தரும் என்பது நம்பிக்கை. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு மாலை நேரமே மிகச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. மாலை 05:40 மணி முதல் இரவு 08:15 மணி வரை. இந்த நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபடலாம். மாலை 06:05 மணி முதல் இரவு 08:08 மணி வரை. நிலைத்த லக்னமான ரிஷப லக்னத்தில் பூஜை செய்வது வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றும் நிலைக்க உதவும். பூஜை அறையைச் சுத்தப்படுத்தி, லட்சுமி தேவியின் திருவுருவப் படத்திற்கு வாசனை மலர்கள் மற்றும் நாணயங்கள் வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் பண வரவையும் பெருக்கும்.

பாதுகாப்பான கொண்டாட்டம் மாசு இல்லாத மற்றும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருந்து கண்காணிக்க வேண்டும் எனவும், தீக்காயம் ஏற்படாமல் கவனமுடன் பட்டாசுகளைக் கையாள வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெளிச்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்த இனிய நாளில் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு அமைதியோடும் மகிழ்ச்சியோடும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



பெரியார் அறிவுலக சர்ச்சை: பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு!
[Sunday 2026-11-08 16:00]

பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டு, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.



அதிமுக மாஜிகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்பீக்கர்!
[Sunday 2026-11-08 16:00]

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார். வரும் 17ஆம் தேதி தகுதிமிக்க விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடத்த உள்ளதாகவும், அதற்குப் பிறகு சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.



அதிவேகமாக பறந்த காரில் இருந்த கஞ்சா, பணம்: விரட்டிப் பிடித்த போலீசார்!
[Sunday 2026-11-08 16:00]

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோதனை சாவடியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியை ஒட்டியபடி, போலீசார் கண்களுக்கு மறைந்து தப்பிச்செல்ல முயன்ற காரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்றனர். காரை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், காரில் 7 கிலோ கஞ்சா, ரூ.4.40 லட்சம் பணம், கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் இருந்து காரில் மர்ம நபர்கள் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி!
[Sunday 2026-11-08 16:00]

ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 28 வயதான ஜனசேனா வேட்பாளர் கரபதி திவ்யா வாக்களித்த பின் உயிரிழந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி இணைந்து 95%க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது.



டவர் இல்லாமலயே இயங்க போகும் ஸ்மார்ட்போன்கள்: டிராய் மெகா பிளான்!
[Sunday 2026-11-08 06:00]

செல்போன் சிக்னல்கள் இல்லாத பகுதிகளிலும் கூட எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் அழைப்புகளையும், இணயவசதியையும் பெறக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், சேட்டிலைட் அடிப்படையிலான சேவையை வழங்குவதற்கான புதிய கட்டமைப்பை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம்.



ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த ஷாக்: சாட்சியாக இருக்கும் சிறுமி புதிய பாலியல் புகார்!
[Sunday 2026-11-08 06:00]

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 8 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக வழக்கில் சாட்சியாக இருக்கும் சிறுமி ஒருவர் ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 82. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டுள்ளன.



செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர்!
[Saturday 2026-11-07 17:00]

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதானதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் ஊசி போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தீபாவளி பண்டிகை கொண்டாட்டமா? - மீண்டும் கனமழை எச்சரிக்கை!
[Saturday 2026-11-07 17:00]

நாடு முழுவதும் நாளை (08-11-26) தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதேகாரணமாகவே, கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகன நெரிசல், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களுக்கு பெரும் சிரமாக மாறியுள்ளது.



"பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்" - முழுமையான விசாரணை வேண்டி போராட்டம்!
[Saturday 2026-11-07 17:00]

கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என்பது மட்டுமல்லாமல் தவறான தரவுகள் அடங்கிய போலியான புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரூ.2000 கோடி வெற்றி மடிக்கணினி திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
[Saturday 2026-11-07 17:00]

வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் விஜய், யாருக்கெல்லாம் மடிக்கணினி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகளின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில், வெற்றி இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.



"பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே" - வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
[Saturday 2026-11-07 08:00]

கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரும் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பெரியாரின் புனித பெயரை சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது எனவும், இதில் முறைகேடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். கோவை காந்திபுரத்தில் தி.மு.க ஆட்சியில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



சீனாவை மிஞ்சும் இந்தியாவின் இமாலய ரயில் திட்டம்!
[Saturday 2026-11-07 08:00]

இந்த உலகில் அதிசயங்கள் மற்று வியக்க வைக்கும் இடங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று தான் இந்தியாவின் லடாக். உலகின்மிக உயரமான இடங்களில் ஒன்றான லடாக்கில் இந்தியா செய்யும் போகும் சம்பவம் பக்கத்தில் உள்ள சீனாவையே மிளர வைக்க போகிறது. ஆம்.. இமயமலையில் உலகின் மிக உயரமான ரயில் நிலையத்தை லடாக்கில் இந்தியா உருவாக்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி உயரத்தில் இந்த லடாக் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சீனாவின் 'டாங்குலா' ரயில் நிலையத்தை இந்த ரயில் நிலையம் முறியடிக்கும் என்கிறார்கள்.



ஆபரேசன் துரைமுருகன்: 2வது ஃபைலை ஓபன் செய்த விஜய்?
[Saturday 2026-11-07 08:00]

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க நான் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது விஜய் அரசு. தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு 4000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக கூறி தொழிலதிபர் ரத்தினம் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மனைவியின் தலையை மடியில் வைத்துக்கொண்டு காளி கோயிலில் அமர்ந்த கணவர்!
[Friday 2026-11-06 16:00]

மேற்கு வங்கத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு காளி கோயிலுக்கு சென்றாராம் கணவர்.. அங்கே என்ன நடந்தது தெரியுமா? மனைவியின் தலையை தன்னுடைய மடியில் வைத்து கொண்டாராம்.. பக்கத்தியே அவர்களது 2 குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்களாம். இந்த கோலத்தை பார்த்து மொத்த உறவினர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.. என்ன நடந்தது?



கரூரில் த.வெ.க. பெயரில் பணம் வசூல் செய்த நபர் பிடிப்பு!
[Friday 2026-11-06 16:00]

கரூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதி ஈஸ்வரர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வணிகர்கள் வந்து தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.



தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்: முன்னாள் துணை மேயர் மன்னன் கைது!
[Friday 2026-11-06 16:00]

தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக நிர்வாகி மன்னன் தன்னை அணுகியதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Friday 2026-11-06 16:00]

வங்கக்கடலில் வருகிற 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வானிலை மையம் கூறுகையில்.., அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், வருகிற 13ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.



தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு இன்று லீவு இல்லை!
[Friday 2026-11-06 07:00]

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக வரும் திங்கள்கிழமை அன்று விடுப்பு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.



மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்!
[Friday 2026-11-06 07:00]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தர்கா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. சுமார் 1,050 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலை உச்சி பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவ்லியா தர்காவும் அமைந்துள்ளன. தர்காவுக்கு அருகே காசி விஸ்வநாதர் கோயிலும், அதற்கு கீழே உச்சி பிள்ளையார் கோயிலும் உள்ளன.



புயல் நேரத்தில் மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதித்தது யார்? - தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்
[Friday 2026-11-06 07:00]

ஆந்திராவில் சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா