Untitled Document
November 9, 2026 [GMT]
மனைவியின் வீடியோவை கண்டு அதிர்ந்த அஜித்குமார்: திண்டுக்கல் சுவேதாவின் கடைசி நிமிடங்கள்!
[Monday 2026-11-09 17:00]

சந்தேகம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு திண்டுக்கல்லில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது... விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், கடைசியில் அவரையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நண்பர்கள் சொன்ன தகவல், செல்போனில் பார்த்த வீடியோக்கள் என சந்தேகம் வளர்ந்த நிலையில், தீபாவளி நாளில் நடந்தது என்ன? திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (28), தனது மனைவி சுவேதா (24)வின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தீபாவளியன்று ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

சந்தேகம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு திண்டுக்கல்லில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது... விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், கடைசியில் அவரையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நண்பர்கள் சொன்ன தகவல், செல்போனில் பார்த்த வீடியோக்கள் என சந்தேகம் வளர்ந்த நிலையில், தீபாவளி நாளில் நடந்தது என்ன? திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (28), தனது மனைவி சுவேதா (24)வின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தீபாவளியன்று ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

  

நடத்தை சரியில்லை என்று அவரது நண்பர்கள் சொன்னார்கள்.. இதை கேட்டதுமே, அதிர்ச்சியடைந்த கணவர், உடனே வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.. இந்த தகராறு வலுத்து மிகப்பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த கணவர், அரிவாளால் மனைவியை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டார்.. சுவேதாவின் சடலம் கீழே கிடந்ததுமே, நேராக காவல் நிலையம் சென்ற அஜித்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் கூடுதலாக வெளியாகி வருகின்றன.. அதில் இந்த தம்பதி பற்றின தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவராம் சுவேதா.. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த டிரைவர் அஜித்குமாருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் 2 பேருமே உயிருக்கு உயிராக காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே சுவேதா, சோஷியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அஜித்குமார் கோபப்பட்டுள்ளார்.. அத்துடன் சுவேதா மீதும் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.. இதன் காரணமாக இருவருக்கும் மீண்டும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. செல்போனால் வந்த சந்தேகம் இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மனைவியைப் பார்க்க வந்துள்ளார். அப்போது சுவேதாவின் செல்போனை பார்த்த அவருக்கு மறுபடியும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனைவியிடம் விளக்கம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நண்பர்கள் சிலர் சுவேதாவின் நடத்தை குறித்து அஜித்குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் கடுமையான ஆத்திரத்தில் அஜித்குமார் இருந்தாராம். இந்நிலையில், சுவேதாவின் செல்போனை, பார்த்ததுமே ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டிலிருந்த அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதற்கு பிறகுதான், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார். போலீசார் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட சுவேதாவின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போஸ்ட் மார்ட்டம் நடந்தபோது, சுவேதாவின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரே வருடத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவரே அவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

  
   Bookmark and Share Seithy.com



இரவு 7 மணி வரை மழை விடாது: தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களுக்கு அலர்ட்!
[Monday 2026-11-09 17:00]

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலோடு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் காலையில் இருந்தே மழை பெய்து வந்த நிலையில் இன்றும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.



"தவெக ஆட்சியை கவிழ்க்கவே முடியாது" - மாணிக்கம் தாகூர்!
[Monday 2026-11-09 17:00]

எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஊழல் சக்திகள் ஒன்றிணைந்து சதி செய்கின்றன என விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார். மதுரை திருநகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



பட்டாசு வெடிப்பதில் மோதல்: சமயபுரம் அருகே ஐடி ஊழியர் ஸ்பேனரால் குத்திக்கொலை!
[Monday 2026-11-09 17:00]

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, இருங்களூர் அருகே உள்ள புறத்தாக்குடி பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தனியார் ஐடி நிறுவன ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் லாரன்ஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (20). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை, கிறிஸ்டோபர் தனது நண்பர்களான ரஞ்சித் (26) மற்றும் லெனின் (21) ஆகியோருடன் இணைந்து புறத்தாக்குடி நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.



தீபாவளிக்காக சொந்த நாடு திரும்பிய நபர்: உயிரைப் பறித்த பார்க்கிங் பிரச்சினை!
[Monday 2026-11-09 17:00]

தீபாவளிக்காக இந்தியா திரும்பிய ஒருவர், பார்க்கிங் பிரச்சினை காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் ஒருவர், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இந்தியா திரும்பிய நிலையில், சிறிய பிரச்சினை ஒன்று அவரது உயிரையே பறித்துவிட்டது. பரம்ஜீத் தங்கர் (42), சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த நிலையில், குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இம்மாதம் 5ஆம் திகதி இந்தியா திரும்பியுள்ளார்.



பெரியார் அறிவுலக சர்ச்சை: பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு!
[Sunday 2026-11-08 16:00]

பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டு, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.



அதிமுக மாஜிகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்பீக்கர்!
[Sunday 2026-11-08 16:00]

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார். வரும் 17ஆம் தேதி தகுதிமிக்க விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடத்த உள்ளதாகவும், அதற்குப் பிறகு சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.



அதிவேகமாக பறந்த காரில் இருந்த கஞ்சா, பணம்: விரட்டிப் பிடித்த போலீசார்!
[Sunday 2026-11-08 16:00]

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோதனை சாவடியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியை ஒட்டியபடி, போலீசார் கண்களுக்கு மறைந்து தப்பிச்செல்ல முயன்ற காரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்றனர். காரை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், காரில் 7 கிலோ கஞ்சா, ரூ.4.40 லட்சம் பணம், கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் இருந்து காரில் மர்ம நபர்கள் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி!
[Sunday 2026-11-08 16:00]

ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 28 வயதான ஜனசேனா வேட்பாளர் கரபதி திவ்யா வாக்களித்த பின் உயிரிழந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி இணைந்து 95%க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது.



நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்: பூஜை செய்ய உகந்த நேரம் எது?
[Sunday 2026-11-08 06:00]

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்துப் பண்டிகையை வரவேற்றுள்ளனர். அதிகாலை கங்கா ஸ்நானம் முதல் வழிபாடுகள் வரை தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்தனர். புத்தாடைகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து இறைவனை வணங்கி குடும்பத்தோடு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அண்டை வீட்டாருக்கும் உறவினர்களுக்கும் விதவிதமான பலகாரங்களைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



டவர் இல்லாமலயே இயங்க போகும் ஸ்மார்ட்போன்கள்: டிராய் மெகா பிளான்!
[Sunday 2026-11-08 06:00]

செல்போன் சிக்னல்கள் இல்லாத பகுதிகளிலும் கூட எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் அழைப்புகளையும், இணயவசதியையும் பெறக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், சேட்டிலைட் அடிப்படையிலான சேவையை வழங்குவதற்கான புதிய கட்டமைப்பை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம்.



ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த ஷாக்: சாட்சியாக இருக்கும் சிறுமி புதிய பாலியல் புகார்!
[Sunday 2026-11-08 06:00]

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 8 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக வழக்கில் சாட்சியாக இருக்கும் சிறுமி ஒருவர் ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 82. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டுள்ளன.



செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர்!
[Saturday 2026-11-07 17:00]

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதானதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் ஊசி போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தீபாவளி பண்டிகை கொண்டாட்டமா? - மீண்டும் கனமழை எச்சரிக்கை!
[Saturday 2026-11-07 17:00]

நாடு முழுவதும் நாளை (08-11-26) தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதேகாரணமாகவே, கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகன நெரிசல், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களுக்கு பெரும் சிரமாக மாறியுள்ளது.



"பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்" - முழுமையான விசாரணை வேண்டி போராட்டம்!
[Saturday 2026-11-07 17:00]

கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என்பது மட்டுமல்லாமல் தவறான தரவுகள் அடங்கிய போலியான புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரூ.2000 கோடி வெற்றி மடிக்கணினி திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
[Saturday 2026-11-07 17:00]

வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் விஜய், யாருக்கெல்லாம் மடிக்கணினி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகளின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில், வெற்றி இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.



"பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே" - வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
[Saturday 2026-11-07 08:00]

கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரும் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பெரியாரின் புனித பெயரை சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது எனவும், இதில் முறைகேடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். கோவை காந்திபுரத்தில் தி.மு.க ஆட்சியில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



சீனாவை மிஞ்சும் இந்தியாவின் இமாலய ரயில் திட்டம்!
[Saturday 2026-11-07 08:00]

இந்த உலகில் அதிசயங்கள் மற்று வியக்க வைக்கும் இடங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று தான் இந்தியாவின் லடாக். உலகின்மிக உயரமான இடங்களில் ஒன்றான லடாக்கில் இந்தியா செய்யும் போகும் சம்பவம் பக்கத்தில் உள்ள சீனாவையே மிளர வைக்க போகிறது. ஆம்.. இமயமலையில் உலகின் மிக உயரமான ரயில் நிலையத்தை லடாக்கில் இந்தியா உருவாக்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி உயரத்தில் இந்த லடாக் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சீனாவின் 'டாங்குலா' ரயில் நிலையத்தை இந்த ரயில் நிலையம் முறியடிக்கும் என்கிறார்கள்.



ஆபரேசன் துரைமுருகன்: 2வது ஃபைலை ஓபன் செய்த விஜய்?
[Saturday 2026-11-07 08:00]

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க நான் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது விஜய் அரசு. தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு 4000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக கூறி தொழிலதிபர் ரத்தினம் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மனைவியின் தலையை மடியில் வைத்துக்கொண்டு காளி கோயிலில் அமர்ந்த கணவர்!
[Friday 2026-11-06 16:00]

மேற்கு வங்கத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு காளி கோயிலுக்கு சென்றாராம் கணவர்.. அங்கே என்ன நடந்தது தெரியுமா? மனைவியின் தலையை தன்னுடைய மடியில் வைத்து கொண்டாராம்.. பக்கத்தியே அவர்களது 2 குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்களாம். இந்த கோலத்தை பார்த்து மொத்த உறவினர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.. என்ன நடந்தது?



கரூரில் த.வெ.க. பெயரில் பணம் வசூல் செய்த நபர் பிடிப்பு!
[Friday 2026-11-06 16:00]

கரூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதி ஈஸ்வரர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வணிகர்கள் வந்து தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா