Untitled Document
November 11, 2026 [GMT]
"எதிர்க்கட்சி TRAPல் சிக்க வேண்டாம், கடும் நடவடிக்கை எடுப்பேன்" - விஜய் வார்னிங்!
[Wednesday 2026-11-11 16:00]

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "எதிர்க்கட்சியினர் உங்களுக்கு விரிக்கும் TRAPலோ.. வலைகளிலோ யாரும் சிக்கிவிடக் கூடாது. மக்கள் பணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்; தவறான பாதையில் யார் சென்றாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அண்மைக்காலமாக கட்சியின் சில முக்கியப் பிரதிநிதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து தீவிரமாகப் போராடி வருகின்றன. அதேபோல, துரையூர் தொகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மனு அளிக்க வந்த கார்த்திக் குமார் என்ற இளைஞரை, சட்டப்பேரவை துணை சபாநாயகரும் தவெக எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர் தாக்கியதாகக் கூறி வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கருதிய முதல்வர் விஜய், அனைத்து தவெக எம்.எல்.ஏ.க்களையும் நேரில் அழைத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும், மக்கள் பிரதிநிதிகளின் களச் செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய புகார்கள் குறித்து உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மிகத் தீவிரமாகவும் கோபமாகவும் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்: "நாம் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்கள் நம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாக்களித்து அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஆனால், நம்மை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்களை ஆத்திரமூட்டவும், உங்களை வம்பில் இழுத்து விடவும் பலவிதமான பொறிகளையும், வலைகளையும் அவர்கள் விரிப்பார்கள். அதற்குள் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சென்று மாட்டிக்கொள்ளக் கூடாது. நிதானமும் பொறுமையும் மக்கள் பிரதிநிதிக்கு மிக முக்கியம்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்: "பொதுமக்கள் நம்மிடம் குறைகளைக் கூற வரும்போது அவர்களிடம் கோபப்படுவதோ, அதிகாரத் தோரணையில் நடப்பதோ துளியும் ஏற்க முடியாது. மக்களின் குரலுக்குப் பணிவோடு செவிசாய்க்க வேண்டும். அரசு அதிகாரிகளிடம் கண்ணியத்துடன் பழக வேண்டும். எல்லை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் மன்னிக்கப்படாது. தவறான வழியில் யார் சென்றாலும், அவர்கள் அமைச்சராக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்கம்தான் நமது கட்சியின் முதல் அடையாளம்.

அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இடமில்லை" என்று நேரடியாகவே இறுதி எச்சரிக்கை விடுத்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதிப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தேவையின்றி ஊடகங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி எச்சரிக்கை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



"எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன" - தமிழக அரசு விளக்கம்!
[Wednesday 2026-11-11 16:00]

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி என்.செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ”ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.



தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதியின் பாதுகாவலர் என தகவல்!
[Wednesday 2026-11-11 16:00]

பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், ஜனாதிபதியின் பாதுகாவலர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் ஒருவரை, பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவரது பக்கத்து வீட்டுக்காரர். உத்தரப்பிரதேசத்திலுள்ள கோபல்பூர் கடானா என்னுமிடத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர் (26). குடும்பத்துடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சௌரப்.



ராஜிவ்காந்தியின் மரணத்தை முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல்!
[Wednesday 2026-11-11 16:00]

ராஜிவ்காந்தியின் மரணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்தி தந்தையின் இறுதிச்சடங்கிற்கு திரும்பி வரவேண்டியிருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்ததை சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய தனது 544 பக்க சுயசரிதை புத்தகம் 'Belonging: A Journey of Love' என்ற பெயரில் நேற்று வெளியானது. இதில், தனது கணவர் ராஜிவ் காந்தி உடனான காதல், அவர் கொல்லப்பட்டது, அதன் பின்னரான அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.



முதல்வர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!
[Wednesday 2026-11-11 07:00]

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும்.



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி? - அமித்ஷா கேட்ட திடீர் ரிப்போர்ட்!
[Wednesday 2026-11-11 07:00]

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தீபாவளி தினத்தில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கோரியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்துறை உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் தற்போது பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.



6,540 ரவுடிகளுக்கு வார்னிங், 467 பேர் கைது: 24 மணிநேரத்தில் தமிழக போலீஸ் அதிரடி!
[Wednesday 2026-11-11 07:00]

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 6,967 ரவுடிகளில் 6,540 பேருக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளதோடு, 467 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (நவம்பர் 9), நேற்று (நவம்பர் 10) ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஜாமீனில் சென்றவர்களுக்கு வார்னிங் விடுக்கப்பட்டது.



ஆரம்பகட்ட நிலையில் விசாரணை: அன்பில் மகேஷுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!
[Tuesday 2026-11-10 16:00]

திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஏற்படுத்தி, நெருக்கமான ஆதரவாளர்கள் சிலர் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



தி.மலை துயரச்சம்பவம்: ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
[Tuesday 2026-11-10 16:00]

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.



"சட்டம் - ஒழுங்கு ICU-வில், ஆட்சி நிர்வாகம் கோமாவில்" - மு. க ஸ்டாலின் விமர்சனம்!
[Tuesday 2026-11-10 16:00]

Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.



தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு!
[Tuesday 2026-11-10 16:00]

தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதி, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நிதியிலிருந்து பணம் வழங்கும் போது, வங்கிகளுக்கும் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரத்யேக இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம்!
[Tuesday 2026-11-10 16:00]

சத்தீஸ்கரில் 4 வயது அண்ணன் மகனை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை அறுத்து எடுத்த குற்றத்திற்காக 27 வயது கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் சன்னா கிராமத்தில் உள்ள ஆற்று அணையின் அருகே தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வந்த ராம்ஜீத் நாம்(36) என்ற கூலித் தொழிலாளி கடந்த நவம்பர் 6ம் திகதி தன்னுடைய 4 வயது சிறுவனை காணவில்லை என்பதை அறிந்து பீதியடைந்துள்ளனர்.



இரவு 7 மணி வரை மழை விடாது: தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களுக்கு அலர்ட்!
[Monday 2026-11-09 17:00]

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலோடு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் காலையில் இருந்தே மழை பெய்து வந்த நிலையில் இன்றும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.



"தவெக ஆட்சியை கவிழ்க்கவே முடியாது" - மாணிக்கம் தாகூர்!
[Monday 2026-11-09 17:00]

எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஊழல் சக்திகள் ஒன்றிணைந்து சதி செய்கின்றன என விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார். மதுரை திருநகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



மனைவியின் வீடியோவை கண்டு அதிர்ந்த அஜித்குமார்: திண்டுக்கல் சுவேதாவின் கடைசி நிமிடங்கள்!
[Monday 2026-11-09 17:00]

சந்தேகம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு திண்டுக்கல்லில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது... விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், கடைசியில் அவரையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நண்பர்கள் சொன்ன தகவல், செல்போனில் பார்த்த வீடியோக்கள் என சந்தேகம் வளர்ந்த நிலையில், தீபாவளி நாளில் நடந்தது என்ன? திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (28), தனது மனைவி சுவேதா (24)வின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தீபாவளியன்று ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.



பட்டாசு வெடிப்பதில் மோதல்: சமயபுரம் அருகே ஐடி ஊழியர் ஸ்பேனரால் குத்திக்கொலை!
[Monday 2026-11-09 17:00]

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, இருங்களூர் அருகே உள்ள புறத்தாக்குடி பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தனியார் ஐடி நிறுவன ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் லாரன்ஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (20). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை, கிறிஸ்டோபர் தனது நண்பர்களான ரஞ்சித் (26) மற்றும் லெனின் (21) ஆகியோருடன் இணைந்து புறத்தாக்குடி நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.



தீபாவளிக்காக சொந்த நாடு திரும்பிய நபர்: உயிரைப் பறித்த பார்க்கிங் பிரச்சினை!
[Monday 2026-11-09 17:00]

தீபாவளிக்காக இந்தியா திரும்பிய ஒருவர், பார்க்கிங் பிரச்சினை காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் ஒருவர், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இந்தியா திரும்பிய நிலையில், சிறிய பிரச்சினை ஒன்று அவரது உயிரையே பறித்துவிட்டது. பரம்ஜீத் தங்கர் (42), சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த நிலையில், குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இம்மாதம் 5ஆம் திகதி இந்தியா திரும்பியுள்ளார்.



பெரியார் அறிவுலக சர்ச்சை: பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு!
[Sunday 2026-11-08 16:00]

பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டு, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.



அதிமுக மாஜிகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி: ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்பீக்கர்!
[Sunday 2026-11-08 16:00]

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார். வரும் 17ஆம் தேதி தகுதிமிக்க விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடத்த உள்ளதாகவும், அதற்குப் பிறகு சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.



அதிவேகமாக பறந்த காரில் இருந்த கஞ்சா, பணம்: விரட்டிப் பிடித்த போலீசார்!
[Sunday 2026-11-08 16:00]

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோதனை சாவடியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியை ஒட்டியபடி, போலீசார் கண்களுக்கு மறைந்து தப்பிச்செல்ல முயன்ற காரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்றனர். காரை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், காரில் 7 கிலோ கஞ்சா, ரூ.4.40 லட்சம் பணம், கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் இருந்து காரில் மர்ம நபர்கள் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி!
[Sunday 2026-11-08 16:00]

ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 28 வயதான ஜனசேனா வேட்பாளர் கரபதி திவ்யா வாக்களித்த பின் உயிரிழந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி இணைந்து 95%க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா