Untitled Document
November 13, 2026 [GMT]
"சிறுமிக்கு பாலியல் தொல்லை, வெட்கமா இல்லையா?" - விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!
[Friday 2026-11-13 16:00]

குழந்தைகள் நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

குழந்தைகள் நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

  

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்? பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள். திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் கூறியிருப்பதாவது: தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்?​பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை. திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை.. நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.

இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி, மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி? Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே! இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா? நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல் முதல்வர் அவர்களே! உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா? எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: விசாரிக்க எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை - வன்னி அரசு சொன்ன வார்த்தை!
[Friday 2026-11-13 16:00]

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் அறிக்கை கேட்டால், விசாரிக்க தயாராக உள்ளேன் என்று கூறிய வன்னி அரசு, ஆட்சியர் பத்மஜா சட்டத்தின் படி செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



செஞ்சி சிறுமி பெற்றோரின் வங்கிக் கணக்கு, செல்போன்கள் ஆய்வு!
[Friday 2026-11-13 16:00]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் சென்றது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்த வழக்கைக் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு!
[Friday 2026-11-13 16:00]

மத்தியபிரதேச மாநிலத்தில், தனக்கு ரசகுல்லா எனக்கூறி வழங்கபட்டை வெடிகுண்டை கடித்த 35 வயதான ராஜேந்திர பரோதியா உயிரிழந்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சந்தா கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரோதியா குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் அமர்ந்து தீ மூட்டியுள்ளார். இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த ராம்பகத் பரோதியா என்ற கிராமவாசி, அவருக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.



விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்: திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்!
[Friday 2026-11-13 07:00]

அரசு ஊழியர்கள் பலர், விஜய் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.. நிர்வாகத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சந்தித்த சிக்கல்களை இப்போது விஜய் சந்திக்கிறார். கட்சியை நடத்துவதைப் பொறுத்தவரையில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களும் இப்போது விஜய்க்கு இருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "2026 பொதுத்தேர்தலில் விஜய்க்கு வாக்களித்த அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று விஜய் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் பதிவான தபால் வாக்குகள்.



பாலியல் தொல்லை + ஜாதி சொல்லி திட்டுகிறார்: கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி புகார்!
[Friday 2026-11-13 07:00]

கோவை காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ஆசைக்கு இணங்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாதி ரீதியாக திட்டி கட்சியை விட்டு செல்லும்படி மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த தவெக பெண் நிர்வாகி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ''நான் தவெகவில் காரமடை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றின் செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தவெகவில் முதல் மீட்டிங் நான் தான் செய்தேன். தேர்தல் முடிந்து ஒரு மாதம் இருக்கும். காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார்.



IPS அருண் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் வழக்கில் சேர்ப்பு: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ட்விஸ்ட்!
[Friday 2026-11-13 07:00]

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான 'போக்சோ' வழக்கில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்பட 2 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார்கள். இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு: 'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபரான ஜெம் வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



எஸ்பி வேலுமணிக்கு சிக்கல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிய மத்திய அரசு கிரீன் சிக்னல்!
[Thursday 2026-11-12 18:00]

மிக நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் எஸ்பி வேலுமணி. தற்போது அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.



அம்பை தொகுதியில் நானே களமிறங்குவேன்: விஜய்க்கு கண்டிஷன் போட்ட ஹரி நாடார்!
[Thursday 2026-11-12 18:00]

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ள நிலையில், அதே தொகுதியில் தானும் போட்டியிடுவேன் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள ஹரி நாடார் அது நிறைவேற்றப்படாவிட்டால் களமிறங்குவது உறுதி என்றார். ஹரி நாடார் வைத்த கோரிக்கை என்ன? என்பது பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம். தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா.



ரூ.3,230 கோடியில் டெல்லியில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்!
[Thursday 2026-11-12 18:00]

டெல்லியில் ரூ.3,230 கோடி மதிப்பீட்டில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள ரெய்சினா ஹில் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்கள் உள்ளன. இங்கு செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அமைச்சக செயலகங்கள், புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்கு உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை இந்தியா திறக்க உள்ளது.



தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு. க ஸ்டாலின்!
[Thursday 2026-11-12 18:00]

தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே, அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், மாவட்டப் பெண் ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்கு அத்துமீறிச் சென்று தொந்தரவு கொடுத்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



"எதிர்க்கட்சி TRAPல் சிக்க வேண்டாம், கடும் நடவடிக்கை எடுப்பேன்" - விஜய் வார்னிங்!
[Wednesday 2026-11-11 16:00]

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "எதிர்க்கட்சியினர் உங்களுக்கு விரிக்கும் TRAPலோ.. வலைகளிலோ யாரும் சிக்கிவிடக் கூடாது. மக்கள் பணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்; தவறான பாதையில் யார் சென்றாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அண்மைக்காலமாக கட்சியின் சில முக்கியப் பிரதிநிதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.



"எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன" - தமிழக அரசு விளக்கம்!
[Wednesday 2026-11-11 16:00]

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி என்.செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ”ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.



தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதியின் பாதுகாவலர் என தகவல்!
[Wednesday 2026-11-11 16:00]

பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், ஜனாதிபதியின் பாதுகாவலர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் ஒருவரை, பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவரது பக்கத்து வீட்டுக்காரர். உத்தரப்பிரதேசத்திலுள்ள கோபல்பூர் கடானா என்னுமிடத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர் (26). குடும்பத்துடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சௌரப்.



ராஜிவ்காந்தியின் மரணத்தை முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல்!
[Wednesday 2026-11-11 16:00]

ராஜிவ்காந்தியின் மரணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்தி தந்தையின் இறுதிச்சடங்கிற்கு திரும்பி வரவேண்டியிருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்ததை சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய தனது 544 பக்க சுயசரிதை புத்தகம் 'Belonging: A Journey of Love' என்ற பெயரில் நேற்று வெளியானது. இதில், தனது கணவர் ராஜிவ் காந்தி உடனான காதல், அவர் கொல்லப்பட்டது, அதன் பின்னரான அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.



முதல்வர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!
[Wednesday 2026-11-11 07:00]

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும்.



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி? - அமித்ஷா கேட்ட திடீர் ரிப்போர்ட்!
[Wednesday 2026-11-11 07:00]

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தீபாவளி தினத்தில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கோரியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்துறை உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் தற்போது பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.



6,540 ரவுடிகளுக்கு வார்னிங், 467 பேர் கைது: 24 மணிநேரத்தில் தமிழக போலீஸ் அதிரடி!
[Wednesday 2026-11-11 07:00]

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 6,967 ரவுடிகளில் 6,540 பேருக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளதோடு, 467 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (நவம்பர் 9), நேற்று (நவம்பர் 10) ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஜாமீனில் சென்றவர்களுக்கு வார்னிங் விடுக்கப்பட்டது.



ஆரம்பகட்ட நிலையில் விசாரணை: அன்பில் மகேஷுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!
[Tuesday 2026-11-10 16:00]

திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஏற்படுத்தி, நெருக்கமான ஆதரவாளர்கள் சிலர் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



தி.மலை துயரச்சம்பவம்: ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் விஜய் அறிவிப்பு!
[Tuesday 2026-11-10 16:00]

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.



"சட்டம் - ஒழுங்கு ICU-வில், ஆட்சி நிர்வாகம் கோமாவில்" - மு. க ஸ்டாலின் விமர்சனம்!
[Tuesday 2026-11-10 16:00]

Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா