Untitled Document
November 19, 2026 [GMT]
"தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின்!
[Thursday 2026-11-19 16:00]

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கை குறிப்பிட்டுள்ளார். கேம் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 இன்று வெளியான நிலையில் டிரெண்டில் இணைந்து இதனை அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கை குறிப்பிட்டுள்ளார். கேம் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 இன்று வெளியான நிலையில் டிரெண்டில் இணைந்து இதனை அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  

அவர் கூறியதாவது.., TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!

சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.

இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?

பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.

தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.

இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?

முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?

த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!

  
   Bookmark and Share Seithy.com



தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழப்பு!
[Thursday 2026-11-19 16:00]

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ-வான வி.எஸ். பாபு இன்று மாரடைப்பினால் காலாமாகியுள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் தவெக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் 75 வயதான வி.எஸ். பாபு. இவரது வெற்றி ஒட்டுமொத்த தமிகமே கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் ஸ்டாலிக்கு இவர் காட்டிய செய்கை இன்று வரை சரியான செயலாக மக்கள் செயல்படுத்தி வருகின்றனர்.



இலங்கைக்குக் கடத்தவிருந்த பீடி இலை மூட்டைகள்: க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

இலங்கைக்கு கடத்தவிருந்த 60 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்; க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை. கடந்த நவம்பர் 17 அன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜகுமார், இசக்கிமுத்து காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதனை மீறி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.



நிஷாந்த்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
[Thursday 2026-11-19 07:00]

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திமுக தலைவர்கள் குறித்து ஆபாச பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி!
[Thursday 2026-11-19 07:00]

திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி திமுக சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.



“தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே கடனை செலுத்திய விவசாயிகள் அக்கவுண்டில் பணம் வரும்” - அரசு அறிவிப்பு!
[Thursday 2026-11-19 07:00]

விவசாயிகள் அனைவரும் முழுமையாகப் பயனடையும் வகையில் கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி ரூ. 75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதி வரை கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.



அண்ணன் சீர்: விண்ணப்பிப்பது எப்படி? - விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
[Tuesday 2026-11-17 16:00]

அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு புடவை வழங்கப்படும்.



கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்பும் கேரள முதன்மை ஏஜெண்ட் கைது: எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி!
[Tuesday 2026-11-17 16:00]

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டி.எஸ்.பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், 'ஐஷர்' (Eicher) ரக சரக்கு வாகனத்தில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது தெரியவந்தது.



தமிழகத்தில் ஆரஞ்சு அலெர்ட்!
[Tuesday 2026-11-17 16:00]

தமிழகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மழை தொடரும். இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோவில்: மத்திய அரசு பரிந்துரை!
[Tuesday 2026-11-17 16:00]

தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க உள்ளதாக சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத்​துக்​கான நாடாளு​மன்ற நிலைக் குழுத் தலை​வரும், எம்.பி.யுமான சஞ்​சய்​குமார் ஜா தெரிவித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.



நகைகளை பிரித்து பதுக்கி வைத்திருந்த இடத்தை சொன்ன நிஷாந்த்!
[Tuesday 2026-11-17 07:00]

கைது செய்து விசாரித்தபோது பதுக்கி வைத்திருந்த இடத்தை நிஷாந்த் கூறியதை அடுத்து, எஞ்சிய 6.2 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பிரித்துப் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.



சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
[Tuesday 2026-11-17 07:00]

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நவம்பர் 17, 20, 21, 24 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் (EMU) சேவையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் 17, 20, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை மின்சாரத் தடை செய்யப்படுகிறது.



ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணம் என்ன?
[Tuesday 2026-11-17 07:00]

டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் ஆதவ் - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவுமான திலகவதி கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.



“புயல் எப்போது கரையைக் கடக்கும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்!
[Monday 2026-11-16 16:00]

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (16.11.2026) மதியம் 01:15 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



செக்கானூரணி காவல் நிலைய சம்பவம்: மருத்துவ பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்கள்!
[Monday 2026-11-16 16:00]

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான பாலகிருஷ்ணன், செக்கானூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.



விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது: மு.க.ஸ்டாலின்!
[Monday 2026-11-16 16:00]

திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்துள்ளதாகக் கூறினார்.



அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி விவாகரத்து!
[Monday 2026-11-16 16:00]

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் ஆதவ் அர்ஜூனா. இவர் லொட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதியின் மகள் டெய்சி என்பவரை 2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்திருந்தார். Arise Investments நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வரும் டெய்சியின் சொத்து மதிப்பு, ரூ.162.14 கோடி என ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.



மதுரை போலீஸிடமே கண்ணாமூச்சி ஆடும் 21 கோடி கொள்ளையன்!
[Monday 2026-11-16 07:00]

மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காதலியும், தந்தையும் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மட்டும் இடத்தை மாற்றி மாற்றி பதுங்கி வருகிறார். 4 நாட்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததால், தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர். மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது.



கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்!
[Monday 2026-11-16 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்திருக்கும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கட்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்து குறித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.



புத்தக கொள்முதல் முறைகேடு: கமிட்டியில் இடம்பெற்றிருந்த 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
[Monday 2026-11-16 07:00]

புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய பெயர்களில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா