Untitled Document
November 23, 2026 [GMT]
போலி நூல்களை பரிந்துரைத்ததே பெருமாள் முருகன் தானா? - ஹைகோர்ட்டில் பரபர வாதம்!
[Sunday 2026-11-22 07:00]

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், முதலில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களை வாங்க பரிந்துரை செய்தவரே பெருமாள் முருகன் தான் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபர வாரத்தை முன் வைத்துள்ளார் வழக்கறிஞர் ராகவாச்சாரி.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், முதலில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களை வாங்க பரிந்துரை செய்தவரே பெருமாள் முருகன் தான் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபர வாரத்தை முன் வைத்துள்ளார் வழக்கறிஞர் ராகவாச்சாரி.

  

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "கடநத 2024ல் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் இந்த புத்தகக் கொள்முதல் நடைபெற்றுள்ளது.

எனவே இதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "இந்த வழக்கில் சில அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பொதுநூலக இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றிய நூலகர் காமாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் பணியினை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர " என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நூலகர் காமாட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, காமாட்சிக்கு நூல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்பில்லை எனவும், நூல் கொள்முதல் விவகாரத்தில் நூலகர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன்? முடிவெடுத்த உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் அகல்விளக்கு பதிப்பகத்தின் சில நூல்களை வாங்குவதற்கு பரிந்துரை செய்ததே நூல் பரிந்துரை குழுவில் இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எனவும் வாதிட்டார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் பெருமாள் முருகன் அத்தகைய நூல்களை பரிந்துரைக்க வாய்ப்பு இல்லை என்றனர். இதற்கு பதில் அளித்த ராகவாச்சாரி பெருமாள் முருகன் அந்த நூல்களை பரிந்துரைக்கவில்லை என்றால் அதனை அவர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், பொது நூலக இயக்குனர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தொல்லை: 7 நாட்கள் முடிந்தும் பதிலில்லை? - டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கேள்வி!
[Monday 2026-11-23 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. முதல் கடிதமும் 7 நாட்கள் கெடுவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.



பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது: புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு!
[Monday 2026-11-23 07:00]

நாம் வெளியில் செல்லும்போது தாகம் எடுத்தால், பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி உடனடியாக வாங்குவது பிஸ்லெரி போன்ற பாட்டில் குடிநீரைத்தான். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் குடிநீர், மனிதர்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



8 உயிரை காவு வாங்கிய கோர விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!
[Monday 2026-11-23 07:00]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கோர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக?
[Sunday 2026-11-22 18:00]

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்: மீனவர்களின் போராட்டம் வாபஸ்!
[Sunday 2026-11-22 18:00]

புயல் நேரத்தில் கடலுக்குச் சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக, கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் மீனவர்களுடன் இன்று (22.11.2026) பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஆவேசக் கேள்வி!
[Sunday 2026-11-22 18:00]

உயர்நீதிமன்ற மதுரை கிளை அலுவலர்களுக்கான பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒருவர் ஆபாச தகவல் அனுப்பிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.



பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது: நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை!
[Sunday 2026-11-22 18:00]

பிரதமர் மோடியால், ஒரு கிலோ தங்கத்தின் விலை ₹65 லட்சம் குறைந்துள்ளது. நவம்பர் 22 அன்று, இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி நன்றி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களிடம் தங்கக் கொள்முதல்களைக் கட்டுப்படுத்துமாறு அவர் விடுத்த வேண்டுகோள், வர்த்தகர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க உதவியதாக அந்த வர்த்தக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தங்களின் கடிதத்தில், காத்திருந்த நகை வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தைப் பாதுகாத்துள்ளனர் என்றும் CTI கூறியுள்ளது. தேவையற்ற தங்கக் கொள்முதலைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டு, பிரதமர் மோடி கடந்த மே மாதம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.



நாளை மறுநாள் கார்த்திகை தீபம்: தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்குமா?
[Sunday 2026-11-22 07:00]

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கிறது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு தவெகவுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. நவ.24ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோன்ற கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாரிக்கொண்டிருந்தபோதுதான், இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் விஷயத்தை கிளப்பின.



சென்னையில் வரப்போகும் மிகப்பெரிய மால்!
[Sunday 2026-11-22 07:00]

சென்னை மாநகரின் ஐடி நிறுவனங்கள் நிறைந்த முக்கியப் பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் மிகப்பிரம்மாண்டமான மால் ஒன்று உருவாகி வருகிறது. ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமம் இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சாதாரணமாக ஒரு ஷாப்பிங் மால் என்றால் கடைகள், சினிமா தியேட்டர்கள் மட்டுமே இருக்கும்.



‘முதல்வருக்கு அரோகரா’ - அமைச்சர் மற்றும் பாடகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!
[Saturday 2026-11-21 18:00]

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் 'முதல்வருக்கு அரோகரோ' என கோஷம் எழுப்பிய விவகாரத்தில் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் பாடகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, ஒலிபெருக்கி வழியாக நேரடி வர்ணனை செய்தவர்கள் மற்றும் பக்திப் பாடல் குழுவினர் முருகப்பெருமானுக்கு 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர்.



விஜய் ஆட்சி தானாகவே கவிழும்: எடப்பாடி பழனிசாமி சூசகம்!
[Saturday 2026-11-21 18:00]

தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.. அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவிடம் 41 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது, நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக ஆட்சி மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக கைடன்ஸ் அமைப்பில் இருந்து ஒரே நேரத்தில் ஊழியர்கள் பணி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கைடன்ஸ் அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் ஆந்திரா அரசுக்காக பணியாற்றி வருகின்றனர்.



மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழப்பு!
[Saturday 2026-11-21 18:00]

இந்தியாவின் வட கிழக்கு மாகாணம் மணிப்பூரில் நச்சுத்தன்மை கொண்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 180 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? - உச்சநீதிமன்றம் பரிந்துரை!
[Saturday 2026-11-21 18:00]

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்குமாறு கோரிய மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்தை மகன், மாமா மகள் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால், இத்தகைய திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, மரபணு நோய்கள், பிறவிக் குறைபாடுகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



"செஞ்சி சிறுமி சீக்கிரம் கிடைக்கணும்" - யாகம் நடத்திய போலீஸ்!
[Saturday 2026-11-21 07:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்களாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் யாகம் நடத்தி பூஜை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.



திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் - மாணிக்கம் தாகூர்!
[Saturday 2026-11-21 07:00]

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தவெக கூடணி அரசு நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 24 கார்த்திகை தீப நாளன்று தீபம் ஏற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீபத்தை ஏற்ற தேவஸ்தான நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது? - நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு!
[Saturday 2026-11-21 07:00]

காவல்துறை காவலில் எடுக்கப்பட்டிருந்த நிஷாந்த் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார். மதுரை பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், கடந்த நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு சுமார் ₹15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கட்டிடத்தின் லிஃப்ட் பகுதி வழியாக உள்ளே புகுந்து, சிசிடிவி கேமராக்களை மறைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்.



விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்: உடலை சுமந்து சென்று மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!
[Friday 2026-11-20 16:00]

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலகத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரை விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.



அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
[Friday 2026-11-20 16:00]

Guidance Tamilnadu விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது Guidance Tamilnadu அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.



நகை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன சம்பந்தம்? - வாய்திறந்த நிஷாந்த்!
[Friday 2026-11-20 16:00]

மதுரை நகைக்கடை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நிஷாந்த் கூறியுள்ளதை குறித்து தெரிந்து கொள்வோம். மதுரை காளாவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை சுமார் 3 மணிக்கு அரங்கேறிய கொள்ளையில் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலிசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது, ஒரு மாதமாக இளைஞர் ஒருவர் பல கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் கையில் இருந்த டாட்டூ இளைஞரைக் காட்டி கொடுத்தது.



டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி!
[Friday 2026-11-20 16:00]

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தனக்கு எதிராக ஏதேனும் 'லுக்-அவுட் சுற்றறிக்கை' (LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், அமலாக்க இயக்குநரகம் (ED), குடிவரவு பணியகம் (Bureau of Immigration) மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஆகிய அமைப்புகளிடம் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் கோரியுள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா