Untitled Document
November 24, 2026 [GMT]
கொளத்தூர் இடைத் தேர்தலில் ஸ்டாலினா? - ஒரே வார்த்தையில் முடித்த துரைமுருகன்!
[Tuesday 2026-11-24 07:00]

6 சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தக் தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.. மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்துத்துப் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

6 சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தக் தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.. மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்துத்துப் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

  

அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் இன்னும் வந்து தமிழக அரசு மௌனம் காத்துக் கொண்டுள்ளது. காவிரி விவகாரத்தை தமிழக வெற்றிக் கழக அரசு ஏனோ தானோ என்று நினைத்துச் செயல்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனை. இன்றைக்குத் தஞ்சையில் சர்வமும் நாசமாகி சம்பாவும் போய், குறுவையும் போய், எல்லாம் போய் கடன்காரர்களாக இன்றைக்குத் தஞ்சை மாவட்டத்திலே விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். துரைமுருகன் முதலில் இந்த விவசாயத்தை, இந்த வழக்கினுடைய தத்துவத்தை, இதனுடைய ஆழத்தைப் புரிந்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைச்சர் இருக்க வேண்டும்.

இதனுடைய ஆழம் எவ்வளவு, இத்தனை ஆண்டு காலம் நடந்திருக்கிறதே, அதில் தொடுக்கப்பட்ட விவகாரங்கள் என்ன என்பதெல்லாம் அமைச்சர் தலைகீழ் பாடமாக வைத்திருக்க வேண்டும். அதெல்லாம் தெரிந்ததாகத் தெரியவில்லையே எனக்கு. ஆகையினால் இன்றைக்குத் தண்ணீர் விடுவது என்பது இமாலயப் பிரச்சனையாகியிருக்கிறது. தஞ்சையிலே இன்றைக்குப் பத்திரிகையிலே படம் போட்டு இருக்கிறார்கள், காய்ந்து போன நிலங்களைப் பார்க்க. அதையாவது போய் தஞ்சை தரணியிலே நின்று பார்க்கிற தைரியமாவது இந்த அமைச்சகத்திற்கு இருக்கா என்றால், அதுவும் இல்லை.

ஆக என்னைப் பொறுத்தவரையில் திறக்க வேண்டிய நேரத்திலே திறக்காததாலும், திறக்கக் கூடாத நேரத்திலே திறந்ததாலும் இருபுறமும் அடிபட்டு போய்விட்டது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை விடுகிறார்கள். இதற்கு ஒரு வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். தஞ்சாவூரிலே இருக்கிற விவசாயியைக் கேட்டால் கூட இந்த காவிரிப் பிரச்சனையைத் துல்லியமாகச் சொல்லுவான். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரத்த்தில் தமிழக அரசு மௌனம் காத்துக் கொண்டு உள்ளது. அதிலிருந்தே தெரிகிறது.

அது உண்மையான செய்தின்னு. ஆகையினால அவங்க கொஞ்சம் தயங்குறாங்க அவ்வளவுதான். அந்த விவகாரத்திலேயே அ.தி.மு.க வழக்கறிஞர் ஒருத்தர் வந்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம் பதிலைப் பெற்று நாளை பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு இல்லை. கொளத்தூர் இடைத்தேர்தல் அதிகாரிகளிடையே சட்டமன்ற உறுப்பினர் ஆபாச நிகழ்ச்சியைப் பரிமாறுகிற அல்லது அனுப்புகிற அளவுக்கு ஒழுக்கமும் நாணயமும் கெட்டுப் போயிருக்கிறது. 6 சட்டமன்றத் தொகுதி காலியான தொகுதியா அறிவிச்சிருக்காங்க. தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு, மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்குறதுக்கு வாய்ப்பு இருக்கா? என்றால் மு.க. ஸ்டாலின் கிட்ட தான் கேட்க வேண்டும். அவர்தான் தலைவர். அவர்தான் சொல்ல வேண்டும். அது கட்சியின் முடிவு ஒன்று கூடிதான் எடுக்க முடியும்" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



நயினார் நாகேந்திரன் கைது: திருப்பரங்குன்றம் நோக்கி சென்றபோது போலீசார் அதிரடி!
[Tuesday 2026-11-24 16:00]

கார்த்திகை தீபத்திருநாளான இன்று (24-11-26) தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. 100 வருடங்களுக்கு மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில், தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கடந்தாண்டு கோரிக்கை வைத்தனர்.



'பகிரங்கமா மன்னிப்பு கேளுங்க விஜய்' - வானதி சீனிவாசன் காட்டம்!
[Tuesday 2026-11-24 16:00]

பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.



விபத்தில் உயிர்பலி வாங்கிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்!
[Tuesday 2026-11-24 16:00]

அரசியல்வாதி ஒருவரின் மகன் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியாகியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோஹல்பூர் என்னுமிடத்தில், உறவினர்களான உமேஷ் (Umesh Vilas Patharut, 32) மற்றும் கணேஷ் Ganesh Sunil Patharut, 34) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதியதில் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உமேஷும் கணேஷும் உயிரிழந்துவிட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்படும் பயங்கர காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
[Tuesday 2026-11-24 16:00]

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பெண் மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
[Tuesday 2026-11-24 07:00]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று இன்று அதிகாலையில் அண்ணாமலையார சன்னத்தில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என கோஷமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தார். தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடக்கும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்படும்.



இன்று கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?
[Tuesday 2026-11-24 07:00]

இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது முந்தைய திமுக அரசைப் போலவே தவெக அரசும் அதைத் தடுத்து நிறுத்துமா என்ற பெரும் கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஒருபுறம் இருக்க, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



கூட்டணி எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் விஜய் திடீர் ஆலோசனை!
[Monday 2026-11-23 16:00]

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பொதிகை வளாகத்தின் பாமணி இல்லத்தில், கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



சென்னை தூய்மை பணியாளர்களின் ஊதியம் திடீர் குறைப்பு: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!
[Monday 2026-11-23 16:00]

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து, 762 ரூபாயாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரை தினக்கூலியாக 832 ரூபாயாக நிர்ணயித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.



காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு!
[Monday 2026-11-23 16:00]

மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.



தமிழக மக்களின் உரிமைக்காக திரிஷா பெயரில் பேரவை தொடங்கிய ரசிகர்கள்!
[Monday 2026-11-23 16:00]

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல்வரான பின்னர், நடிகை திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்துள்ளது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் திரிஷா பங்கேற்றிருந்தார். விரைவில் த்ரிஷாக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.



கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தொல்லை: 7 நாட்கள் முடிந்தும் பதிலில்லை? - டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கேள்வி!
[Monday 2026-11-23 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. முதல் கடிதமும் 7 நாட்கள் கெடுவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.



பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது: புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு!
[Monday 2026-11-23 07:00]

நாம் வெளியில் செல்லும்போது தாகம் எடுத்தால், பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி உடனடியாக வாங்குவது பிஸ்லெரி போன்ற பாட்டில் குடிநீரைத்தான். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் குடிநீர், மனிதர்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



8 உயிரை காவு வாங்கிய கோர விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!
[Monday 2026-11-23 07:00]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கோர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக?
[Sunday 2026-11-22 18:00]

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்: மீனவர்களின் போராட்டம் வாபஸ்!
[Sunday 2026-11-22 18:00]

புயல் நேரத்தில் கடலுக்குச் சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக, கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் மீனவர்களுடன் இன்று (22.11.2026) பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஆவேசக் கேள்வி!
[Sunday 2026-11-22 18:00]

உயர்நீதிமன்ற மதுரை கிளை அலுவலர்களுக்கான பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒருவர் ஆபாச தகவல் அனுப்பிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.



பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது: நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை!
[Sunday 2026-11-22 18:00]

பிரதமர் மோடியால், ஒரு கிலோ தங்கத்தின் விலை ₹65 லட்சம் குறைந்துள்ளது. நவம்பர் 22 அன்று, இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி நன்றி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களிடம் தங்கக் கொள்முதல்களைக் கட்டுப்படுத்துமாறு அவர் விடுத்த வேண்டுகோள், வர்த்தகர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க உதவியதாக அந்த வர்த்தக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தங்களின் கடிதத்தில், காத்திருந்த நகை வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தைப் பாதுகாத்துள்ளனர் என்றும் CTI கூறியுள்ளது. தேவையற்ற தங்கக் கொள்முதலைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டு, பிரதமர் மோடி கடந்த மே மாதம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.



நாளை மறுநாள் கார்த்திகை தீபம்: தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்குமா?
[Sunday 2026-11-22 07:00]

திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கிறது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு தவெகவுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. நவ.24ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோன்ற கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாரிக்கொண்டிருந்தபோதுதான், இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் விஷயத்தை கிளப்பின.



சென்னையில் வரப்போகும் மிகப்பெரிய மால்!
[Sunday 2026-11-22 07:00]

சென்னை மாநகரின் ஐடி நிறுவனங்கள் நிறைந்த முக்கியப் பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் மிகப்பிரம்மாண்டமான மால் ஒன்று உருவாகி வருகிறது. ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமம் இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சாதாரணமாக ஒரு ஷாப்பிங் மால் என்றால் கடைகள், சினிமா தியேட்டர்கள் மட்டுமே இருக்கும்.



போலி நூல்களை பரிந்துரைத்ததே பெருமாள் முருகன் தானா? - ஹைகோர்ட்டில் பரபர வாதம்!
[Sunday 2026-11-22 07:00]

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், முதலில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களை வாங்க பரிந்துரை செய்தவரே பெருமாள் முருகன் தான் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபர வாரத்தை முன் வைத்துள்ளார் வழக்கறிஞர் ராகவாச்சாரி.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா