Untitled Document
November 25, 2026 [GMT]
சரியான இடத்தில் திருப்பரங்குன்றம் தீபம்: முறியடிக்கப்பட்ட பாஜக கும்பலின் சதி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடம் தான் மரபு. கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைத்தார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடம் தான் மரபு. கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைத்தார்.

  

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," திருப்பரங்குன்றம் தூண் மேல் தீபம் ஏற்றப்படவில்லை. மக்களுடைய உணர்வை புரிந்து கொண்டு, பக்தர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இதை செயல்படுத்தியிருக்கிறது. இந்த மண் எப்போதுமே ஆன்மீக மண் என சொல்லிக்கொள்வார்கள் மத்தியில், இது ஒரு மதச்சார்பற்ற மண். வன்னியரசு மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கின்ற அரசு, அதை நிலைநிறுத்தி இருக்கின்ற முதல்வருக்கு தமிழ்நாடு மக்கள் நன்றி சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். வன்முறை, பதற்றம், கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலின் முன்னெடுப்பு, அவர்களின் சதி.

பக்தர்கள் காலம் காலமாக அந்த இடத்தில் தான் தீபம் ஏற்றுகிறார்கள். எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமோ அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தான் நடைமுறை. கடந்த காலத்தில் இல்லாத முறையில் இந்த முறை அரசு, திராவிட அரசு மிக சிறப்பாக, மிக பொறுப்பாக, அரசியலமைப்பு சட்டத்தை உணர்ந்து மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தியிருக்கிறது. முதல்வர் நேற்று பேசும்போது என்ன சொன்னாரோ அதுதான் இன்று நடந்திருக்கிறது. முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ரிவியூ பெட்டிஷன், மேல்முறையீட்டை தாண்டி மறு சீராய்வு மனு போடப்பட்டுள்ளது. அந்த மறு சீராய்வு மனு இன்று கோர்ட் லீவ் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பிறகு தான் சொல்ல முடியும். அதற்கு இடையில் உயர்நீதிமன்றம் திடீரென வழக்கு எடுத்ததே உச்சநீதிமன்றத்துக்கு எதிராக தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை மதிக்கக்கூடிய அரசு திராவிட அரசு. மக்கள் உணர்வுகளை மதிக்கக்கூடிய அரசு நம்முடைய அரசு. சீராய்வு மனு போடப்பட்டிருக்கிறது. அந்த மனு வந்த பிறகு தான் பேச முடியும். சீராய்வு மனு போடும்போதே நானே எடுப்பேன் என சொல்வது உச்சநீதிமன்றத்தை மதிக்கும் போக்காக இல்லை.

பாஜக கும்பல் பெரும்பான்மை மக்களுடைய உணர்வு தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள் நில அளவைக்கல்லில் ஏற்ற சொல்லவில்லை. நில அளவைக்கல்லில் ஏற்ற சொல்வது பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பல் தான். தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தே தீபத்தூணில் தான் ஏற்றப்பட்டிருக்கு. தீபத்தூணில் ஏற்றப்படுவது மரபு, அதுதான் ஆகம விதி, அதுதான் திருப்பரங்குன்றம் கோயிலில் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கம். மதச்சார்பின்மை கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள்.

அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதட என கேட்ட சிவவாக்கியரின் மண் இது. திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என யாரும் சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் மலை தான். திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்தது. திருப்பரங்குன்றத்தை வைத்து திரிபுவாதம் செய்யும் கும்பல் திரிபுவாதம் செய்கிறதே தவிர இதில் உண்மை இல்லை. மக்களுக்காக நடத்தப்படும் அரசு தான் இன்று நீதியை, தர்மத்தை நிலைநாட்டியிருக்கிறது." என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும்.



கள்ளக்குறிச்சி MLA ஆபாச மெசேஜ்: இரவு முழுக்க 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!
[Wednesday 2026-11-25 07:00]

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஷாநவாஸ் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங்கிடம், இந்த விசாரணை ஆவணங்கள் அனைத்தும் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகின்றன.



நயினார் நாகேந்திரன் கைது: திருப்பரங்குன்றம் நோக்கி சென்றபோது போலீசார் அதிரடி!
[Tuesday 2026-11-24 16:00]

கார்த்திகை தீபத்திருநாளான இன்று (24-11-26) தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. 100 வருடங்களுக்கு மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில், தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கடந்தாண்டு கோரிக்கை வைத்தனர்.



'பகிரங்கமா மன்னிப்பு கேளுங்க விஜய்' - வானதி சீனிவாசன் காட்டம்!
[Tuesday 2026-11-24 16:00]

பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.



விபத்தில் உயிர்பலி வாங்கிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்!
[Tuesday 2026-11-24 16:00]

அரசியல்வாதி ஒருவரின் மகன் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியாகியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோஹல்பூர் என்னுமிடத்தில், உறவினர்களான உமேஷ் (Umesh Vilas Patharut, 32) மற்றும் கணேஷ் Ganesh Sunil Patharut, 34) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதியதில் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உமேஷும் கணேஷும் உயிரிழந்துவிட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்படும் பயங்கர காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
[Tuesday 2026-11-24 16:00]

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பெண் மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
[Tuesday 2026-11-24 07:00]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று இன்று அதிகாலையில் அண்ணாமலையார சன்னத்தில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என கோஷமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தார். தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடக்கும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்படும்.



இன்று கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?
[Tuesday 2026-11-24 07:00]

இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது முந்தைய திமுக அரசைப் போலவே தவெக அரசும் அதைத் தடுத்து நிறுத்துமா என்ற பெரும் கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஒருபுறம் இருக்க, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



கொளத்தூர் இடைத் தேர்தலில் ஸ்டாலினா? - ஒரே வார்த்தையில் முடித்த துரைமுருகன்!
[Tuesday 2026-11-24 07:00]

6 சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தக் தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.. மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்துத்துப் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.



கூட்டணி எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் விஜய் திடீர் ஆலோசனை!
[Monday 2026-11-23 16:00]

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பொதிகை வளாகத்தின் பாமணி இல்லத்தில், கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



சென்னை தூய்மை பணியாளர்களின் ஊதியம் திடீர் குறைப்பு: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!
[Monday 2026-11-23 16:00]

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து, 762 ரூபாயாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரை தினக்கூலியாக 832 ரூபாயாக நிர்ணயித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.



காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு!
[Monday 2026-11-23 16:00]

மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.



தமிழக மக்களின் உரிமைக்காக திரிஷா பெயரில் பேரவை தொடங்கிய ரசிகர்கள்!
[Monday 2026-11-23 16:00]

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல்வரான பின்னர், நடிகை திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்துள்ளது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் திரிஷா பங்கேற்றிருந்தார். விரைவில் த்ரிஷாக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.



கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தொல்லை: 7 நாட்கள் முடிந்தும் பதிலில்லை? - டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கேள்வி!
[Monday 2026-11-23 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. முதல் கடிதமும் 7 நாட்கள் கெடுவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.



பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது: புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு!
[Monday 2026-11-23 07:00]

நாம் வெளியில் செல்லும்போது தாகம் எடுத்தால், பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி உடனடியாக வாங்குவது பிஸ்லெரி போன்ற பாட்டில் குடிநீரைத்தான். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் குடிநீர், மனிதர்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



8 உயிரை காவு வாங்கிய கோர விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!
[Monday 2026-11-23 07:00]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கோர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக?
[Sunday 2026-11-22 18:00]

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்: மீனவர்களின் போராட்டம் வாபஸ்!
[Sunday 2026-11-22 18:00]

புயல் நேரத்தில் கடலுக்குச் சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக, கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் மீனவர்களுடன் இன்று (22.11.2026) பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.



தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஆவேசக் கேள்வி!
[Sunday 2026-11-22 18:00]

உயர்நீதிமன்ற மதுரை கிளை அலுவலர்களுக்கான பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒருவர் ஆபாச தகவல் அனுப்பிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.



பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது: நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை!
[Sunday 2026-11-22 18:00]

பிரதமர் மோடியால், ஒரு கிலோ தங்கத்தின் விலை ₹65 லட்சம் குறைந்துள்ளது. நவம்பர் 22 அன்று, இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி நன்றி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களிடம் தங்கக் கொள்முதல்களைக் கட்டுப்படுத்துமாறு அவர் விடுத்த வேண்டுகோள், வர்த்தகர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க உதவியதாக அந்த வர்த்தக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தங்களின் கடிதத்தில், காத்திருந்த நகை வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தைப் பாதுகாத்துள்ளனர் என்றும் CTI கூறியுள்ளது. தேவையற்ற தங்கக் கொள்முதலைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டு, பிரதமர் மோடி கடந்த மே மாதம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா