Untitled Document
November 27, 2026 [GMT]
தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் கொலையில் இன்று தீர்ப்பு!
[Friday 2026-11-27 07:00]

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், மாறாத காட்சியாக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதைத்தடுப்பதற்கு காவல்துறை திணறி வருகிறது. கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது இன்று தீர்ப்பு அறிவிக்கவுள்ளது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், மாறாத காட்சியாக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதைத்தடுப்பதற்கு காவல்துறை திணறி வருகிறது. கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது இன்று தீர்ப்பு அறிவிக்கவுள்ளது.

  

கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தவெக. மே 10 ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும், சிங்க பெண் பாதுகாப்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இரண்டே வாரங்களில், கோவையில் நடந்த அந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. மே 21 ஆம் தேதி.. கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மாயமானார். பெற்றோர், உறவினர், காவல்துறையினர் தேடினர். மே 22 ஆம் தேதி சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , மோகன் என்கிற இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யததை வாக்குமூலம் அளித்தனர். அன்றைக்கு தொடங்கி தற்போதுவரை, கடந்த 6 மாத தவெக ஆட்சியில் ஏராளமான பாலியல் குற்றங்கள் அரங்கேறிவிட்டன. சிங்க பெண் படைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள்.

பல்வேறு திருப்பங்களை சந்தித்த கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்னர். 221 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக, பல்வேறு சாட்சிகள் அடிப்படையில் வாதம், பிரதிவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. நவம்பர் 27 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 16 ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றவாளி கார்த்திக், எனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இதை தமிழகமே உற்று நோக்கியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு இன்று விசாரணை!
[Friday 2026-11-27 07:00]

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



5 தொகுதி இடைத்தேர்தல் தடை வழக்கில் இன்று தீர்ப்பு!
[Friday 2026-11-27 07:00]

தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 6 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க தவெக தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கவுள்ளது.



இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு, மாதாந்திர பணக்கொடை உயர்வு: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!
[Thursday 2026-11-26 16:00]

கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை திறந்து வைத்த முதல்வர் விஜய், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



7 மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும்!
[Thursday 2026-11-26 16:00]

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 1.5 கி மீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.



அரசு ஆண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
[Thursday 2026-11-26 16:00]

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.



"தவெக அரசு மீது நம்பிக்கையில்லை" - ஆளுநரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு!
[Thursday 2026-11-26 16:00]

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், மனு அளிக்க வந்த நபரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.



கார்த்திகை தீபத்தில் கருகிய உயிர்: சென்னையை உலுக்கிய சோகம்!
[Thursday 2026-11-26 07:00]

சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு சுமார் 85 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள ந்லையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் குறுகிய சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்காக விளக்குகள் ஏற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.



ஏஐ போலி புத்தக விவகாரம்: ஐகோர்ட் அதிருப்தி!
[Thursday 2026-11-26 07:00]

நூலகங்களில் ஏஐ புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை இப்போது நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இனி முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஜி. வெங்கட்ராமன் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏஐ புத்தகங்கள் தொடர்பாகவும் சில முக்கிய வாதங்கள் நடந்தன. கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட போலியான புத்தகங்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு போலி பெயர்களில் புத்தகங்கள் எழுதப்பட்டதாகவும் இதில் மிக பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.



ஆபாச மெசேஜ் விவகாரத்தை கையில் எடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்!
[Thursday 2026-11-26 07:00]

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது.



கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு வக்காலத்து வாங்கியதால் சிக்கல்?
[Wednesday 2026-11-25 15:00]

கள்ளக்குறிச்சி சர்ச்சைகளில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. பாவம் என்று வக்காலத்து வாங்கியிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர். அவரது ஸ்டேட்மெண்ட் அப்போதே கடும் அதிர்ப்திகளை காங்கிரஸ் கட்சியில் வெளிப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான போது, ஆளும் தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ் பாவம்.



தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!
[Wednesday 2026-11-25 15:00]

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது.



உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: 'கரப்பான் பூச்சி' கட்சி போட்டியா?
[Wednesday 2026-11-25 15:00]

உத்தர பிரதேச மாநிலத்தின் தேர்தல் என்பது தேசிய அளவில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியே, ஒன்றியத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் ஒன்றாகும். எனவே தான், இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் மிகவும் கவனிக்கத் தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.



தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை!
[Wednesday 2026-11-25 15:00]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.



திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும்.



கள்ளக்குறிச்சி MLA ஆபாச மெசேஜ்: இரவு முழுக்க 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!
[Wednesday 2026-11-25 07:00]

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஷாநவாஸ் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங்கிடம், இந்த விசாரணை ஆவணங்கள் அனைத்தும் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகின்றன.



சரியான இடத்தில் திருப்பரங்குன்றம் தீபம்: முறியடிக்கப்பட்ட பாஜக கும்பலின் சதி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடம் தான் மரபு. கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைத்தார்.



நயினார் நாகேந்திரன் கைது: திருப்பரங்குன்றம் நோக்கி சென்றபோது போலீசார் அதிரடி!
[Tuesday 2026-11-24 16:00]

கார்த்திகை தீபத்திருநாளான இன்று (24-11-26) தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. 100 வருடங்களுக்கு மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில், தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கடந்தாண்டு கோரிக்கை வைத்தனர்.



'பகிரங்கமா மன்னிப்பு கேளுங்க விஜய்' - வானதி சீனிவாசன் காட்டம்!
[Tuesday 2026-11-24 16:00]

பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.



விபத்தில் உயிர்பலி வாங்கிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்!
[Tuesday 2026-11-24 16:00]

அரசியல்வாதி ஒருவரின் மகன் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியாகியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோஹல்பூர் என்னுமிடத்தில், உறவினர்களான உமேஷ் (Umesh Vilas Patharut, 32) மற்றும் கணேஷ் Ganesh Sunil Patharut, 34) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதியதில் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உமேஷும் கணேஷும் உயிரிழந்துவிட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்படும் பயங்கர காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
[Tuesday 2026-11-24 16:00]

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பெண் மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா