Untitled Document
November 19, 2026 [GMT]
பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண்!
[Thursday 2026-11-19 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றி வளர்ப்பதற்கு தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண், தனது வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் இவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றி வளர்ப்பதற்கு தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண், தனது வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் இவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

  

இதனால் வீட்டில் பன்றிகளைத் வளர்ப்பதற்கு தொடர்ந்து தடை விதித்து வந்துள்ள நிலையில், ஒரு கட்டத்தில் பன்னி வளர்க்கும் தனது ஆசைக்கு தடையாக இருக்கும் கணவரால் அதிருப்தி அடைந்துள்ளார் கெய்லா.

பின்பு தனது கணவருடன் வாழ்வதிலும் அர்த்தமே இல்லை என்று முடிவு எடுத்துள்ளார். இதனால் தனக்கும் கணவருக்கும் இடையே இருந்த 10 ஆண்டு கால திருமண வாழ்க்கையினை முறித்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையை முறித்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்த உடனே தனது ஆசையை நிறைவேற்ற நினைத்தவர் பன்றிக்குட்டியை ஒன்றினை சொந்தமாகத் தத்தெடுத்துள்ளார். மேலும் அதற்கு டெய்ஸி என்று பெயரும் வைத்துள்ளார்.

மேலும் குறித்த பெண் தத்தெடுத்த பன்றிக்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவரை பன்றிக்கு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதாவது அவர் கொடுத்துள்ள பதிவில், என் வாழ்க்கையில் இருந்து ஒரு பன்றியை நீக்கிவீட்டு, அதற்கு பதில் உண்மையான பன்றி ஒன்றினை தத்தெடுத்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

கெய்லா கிண்டலாக தனது முன்னாள் கணவருக்கு பகிரங்கமாக கொடுத்த பதிலடி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

கெய்லா தாம்சன் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பன்றிக்குட்டியை தனது மடியில் போட்டு விட்டு மற்றொரு கையில் அதற்கான பால் பாட்டிலையும் தனது கையில் வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தினை கேள்விப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் திருமண வாழ்க்கையில் பெண்கள் எடுக்கும் முடிவுகள் வினோதமாக இருப்பதாகவும், பன்றிக்காக 10 ஆண்டுகள் வாழ்ந்த கணவரை இப்படியா விவாகரத்து செய்வது என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



25000 எலிகள் நிறைந்த கோவில்: பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு!
[Monday 2026-11-16 16:00]

இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் பல கோவில்கள் தனித்துவமான வரலாறு, வியக்க வைக்கும் கட்டடக்கலை மற்றும் வித்தியாசமான வழிபாட்டு மரபுகளால் புகழ்பெற்றவை என்றால் மிகையாகாது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இவை அனைத்தையும் தாண்டி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதற்குக் காரணம், அந்தக் கோவிலில் தாராளமாகச் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். சற்று வியப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.



வெளி உலக மக்கள் போனால் கதை முடிந்தது: இந்தியாவில் இருக்கும் மர்ம தீவு!
[Saturday 2026-11-14 16:00]

மின்சாரம் கிடையாது.. இண்டர்நெட் கிடையாது.. அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது.. சொல்லப்போனால் வெளி உலக மக்கள் தொடர்பு அறவே இல்லாமல் இந்தியாவில் ஒரு தீவில் மக்கள் வசிக்கிறார்கள்.. யாராவது அந்த தீவுக்கு செல்ல முயன்றாலும் உயிர் மிஞ்சாது.. இப்படி ஒரு மர்மமான தீவு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகின் மர்மமான பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தீவு இந்தியாவில் எங்கே இருக்கிறது?, இந்த தீவில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தனியாக வசிக்கும் மக்கள் வங்காள விரிகுடா கடலில் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் அருகே வடக்கு சென்டினல் தீவு உள்ளது.



தூங்கினால் இவ்வளவு பணமா? - 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!
[Wednesday 2026-11-11 16:00]

தூங்குவதற்கே சம்பளம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இது வெறும் கற்பனை அல்ல, உண்மையாகவே இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், 60 நாட்கள் நடைபெற்ற வித்தியாசமான தூக்கப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையையும் இலவச சுற்றுலா பேக்கேஜையும் வென்றுள்ளார். இந்த வினோதப் போட்டியை இந்தியாவின் பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனமான Wakefit நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர்.



போருக்கு மத்தியிலும் 250 பேருக்கு திருமண விழா!
[Tuesday 2026-11-10 16:00]

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் - யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல தசாப்த கால போர் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பு அம்சமாகும்.



இந்தியாவில் மாந்திரீகத்திற்கு பெயர் பெற்ற கிராமம்!
[Monday 2026-11-09 17:00]

இந்தியாவில், மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியத்திற்குப் பெயர் பெற்ற ஒரு கிராமம் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் மாயோங் கிராமம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் "கருப்பு மந்திரத்தின் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக மாந்திரீக மரபுகள், பழங்கால மருத்துவ முறைகள் மற்றும் மர்மமான நாட்டுப்புற கதைகளுக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.



கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு!
[Sunday 2026-11-08 16:00]

லாட்டரி சீட்டுக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இணைந்த நான்கு நண்பர்கள், தற்போது கனடாவின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான லொட்டோ மெக்ஸ் ஜக்பாட் பரிசான 90 மில்லியன் டொலர் தொகையை வென்று தங்களது கனவை நனவாக்கியுள்ளனர். ஐடெல்சன் எல்சிகோ, லவ்லின் மால்வர், ஹேஸலின் ஓங் மற்றும் வெல்னா ராமிரெஸ்ஆகிய நால்வரும் அக்டோபர் 20-ஆம் திகதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குலுக்கலில் இமாலயப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர்.



இறந்தவர்களின் சாம்பலில் சூப்: குடும்பமாக குடிக்கும் பழங்குடியினர்!
[Saturday 2026-11-07 08:00]

தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடியினர் மிகவும் வினோதமான சடங்கினை பின்பற்றி வருவது விசித்திரமாக உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுக்கென தனித்துவமான பழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கடைபிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் பழங்குடி இன மக்கள் கடைபிடிக்கும் பழக்கம் சற்று விசித்திரமாகவே இருக்கும். ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் யனோமாமி பழங்குடி இன மக்களைக் குறித்து பல விடயங்களை தெரிந்து கொள்வோம்.



2 மாத குழந்தையின் வயிற்றில் இருந்த முழு வளர்ச்சியடைந்த கரு!
[Monday 2026-10-26 16:00]

2 மாத குழந்தையின் வயிற்றில், முழு வளர்ச்சியடைந்த கரு இருந்த அரிதான நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்துனூரை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தையின் வயிறு வழக்கத்தை விட அதிகமாக வீங்கியிருந்தது. மேலும், சாப்பிட்டதை ஜீரணிக்க முடியாததால், குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததால் கவலையடைந்த பெற்றோர், சிகிச்சைக்காக குழந்தையை சிந்தானூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



நீல நிறத்தில் ஒளிரும் கடல்: மும்பை அருகே ஒரு அரிய காட்சி!
[Friday 2026-10-23 17:00]

மும்பை அருகிலுள்ள கடல் ஒன்று இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிர்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள மும்பையின் அருகே அமைந்துள்ள கடல் ஒன்றின் நீர், இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிரும் காட்சிகள் வைரலாகிவருகின்றன. மும்பை அருகிலுள்ள அர்னாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல் நீர், இரவு நேரத்தில் நீல நிற மின்மினிப்பூச்சிகள் நீந்துவதைபோல் ஒளிர்வதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.



உலகிலே முதல்முறை: இந்திய சிறுவனுக்கு கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்!
[Tuesday 2026-10-20 17:00]

இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, வரலாற்றில் முதல்முறையாக கண்ணுக்கு மேல் வளர்ந்த பல் வளர்ந்துள்ளது. இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள கண் குழியின் மேற்பகுதியில் கடந்த சில மாதங்களாக வலியற்ற வீக்கம் இருந்து வந்தது. முதலில் ஒரு லேசான கட்டியாக இருந்தது, விரைவில் இரண்டு கடினமான, வெள்ளை நிறப் புள்ளிகள் தோலைத் துளைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியது.



60 ஆண்டுகளாக வெட்டப்படாத பாட்டியின் 6 மீட்டர் நீள முடி!
[Saturday 2026-10-17 17:00]

வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் நீண்டு ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 மீற்றர் நீளத்திற்கு வளர்த்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமைச் சேர்ந்த நெஹூயென் தி தின் என்ற பெண், தனது 19 வயதில் ஏற்பட்ட தலைவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.



90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்!
[Friday 2026-10-09 16:00]

ஜப்பானில் நடைபெற்ற 90 நிமிட தூக்க போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளார். ஜப்பான், பொதுவாக நீண்ட வேலை நேரம், நீண்ட பயண நேரம் மற்றும் பரபரப்பான இரவு நேரப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட நாடாக உள்ளதால் அந்த நாட்டு மக்கள் குறைந்த நேரமே தூங்குவதாக கூறப்படுகிறது.



3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்!
[Saturday 2026-09-26 17:00]

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.



தெஹ்ரான் வானில் இரவு நேரத்தில் தெரிந்த மர்ம பொருள்!
[Tuesday 2026-09-22 16:00]

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.



1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா!
[Saturday 2026-09-19 07:00]

பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது. இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



முதுகு சொறிவதற்கே 300 யுவான்: சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்!
[Friday 2026-09-04 16:00]

சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார். இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்!
[Sunday 2026-08-16 05:00]

கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள துவாலு, அந்த அச்சுறுத்தலை நிஜமாக எதிர்கொண்டு வருகிறது. உலகின் கடல் மட்ட உயர்வால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தச் சிறிய தீவு நாடு, எதிர்காலத்தில் தனது நிலத்தையும் வாழ்விடத்தையும் கடலிடம் இழக்கும் அபாயத்தில் உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு வெறும் 26 சதுர கிலோமீட்டர்.



வெளியே வந்தால் உடல் எரியும்: மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்!
[Tuesday 2026-08-11 16:00]

இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக். இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.



ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்: 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை!
[Monday 2026-08-10 16:00]

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது. அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.



40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட கோவில்!
[Sunday 2026-08-09 17:00]

இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள பண்டசார் சமணக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 550 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா