Untitled Document
June 28, 2024 [GMT]
வெலிக்கடைச் சிறையில் கம்பி எண்ணுகிறார் ஞானசார தேரர்! - இரண்டு நாட்களில் வெளிவருவாராம்.
[Wednesday 2016-01-27 07:00]

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில்  அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

  

காணாமல் போனதாகக் கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஞானசார தேரர், திறந்த நீதிமன்றத்தில் வைத்து திங்கட்கிழமை ஏசியதாக நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே, அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டதை அறிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தேரர்கள் உள்ளடங்கலாக 200 பேர், தங்களையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கோஷமிட்டனர். 'எங்களைக் கைது செய்', 'பசங்களா வாங்கடா' என்று, தேரர்கள் கோஷமிட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனத்துக்கு அண்மையில் வந்த தேரர்கள், வாகனத்துக்கு முன்பாகவும் டயர்களுக்கு கீழேயும் படுத்துக் கொண்டனர், இன்னும் சில தேரர்கள், புரண்டு, புரண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்னும் சில தேரர்கள், நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு முயன்றபோதும், அங்கு கடமையிலிருந்த பொலிஸார், நீதிமன்றத்தின் பிரதான வாயில் மற்றும் ஏனைய வாயில்கள், கதவுகளை மூடிவிட்டனர். அதன்பின்னர், மதில் மீதேறி குதித்த தேரர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள் தேரர்கள் குழப்பம் விளைவித்தமையால், கடமைகளுக்காக மேலும் 300 பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் விரைந்தனர்.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேரர்களில் சிலர், மயங்கிவிழுந்துவிட்டனர். அவர்களை, ஏனைய தேரர்கள் சிலர், தூக்கிச்சென்று முதலுதவியளித்தனர். இன்னும் சிலர், நீதிமன்றத்தின் வாயிலுக்கு முன்பாக அமர்ந்து பிரித் ஓதினர். நீதிமன்ற வளாகத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டமையால், நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருந்த சகல வழக்குகளையும், பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ரங்க திஸாநாயக்க, நீதிமன்ற நடவடிக்கைகளை 11.30 முதல் 12.20வரை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டார்.

அந்த எதிர்ப்பு நடவடிக்கை, உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சகல நடவடிக்கைகளையும், பிற்பகல் 2.20க்கு, முற்றுமுழுதாக நிறுத்தி விட்டார். 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர், மாலை 5.30 மணியளவில், விசேட அதிரடிப்படையினரின், விசேட கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் இருந்து இரண்டு நாட்களில் தான் விடுதலை பெற்று வந்து விடுவதாக ஞானசார தேரர் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் பதினான்கு நாட்கள் விளக்கமறியல் தண்டனை அளிக்கப்பட்டது. இதன்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட முன்னர் ஞானசார தேரர் தனது ஆதரவாளர்கள் முன்பாக சில நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.

நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அவர், சட்டம் தன் கடமையை செய்யட்டும். நாம் சட்டத்திற்கு எதிராக செயற்பட முடியாது.ஆனாலும் இரண்டு நாட்களுக்குள்ளாக நான் விளக்கமறியலில் இருந்து வெளியே வந்து விடுவேன். அதுவரை பொறுத்திருங்கள் என்று தன் ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட முன்பதாகவே பொதுபல சேனா அமைப்பினர் ஞானசார தேரருக்கு இரண்டு வாரங்கள் விளக்கமறியல் தண்டனை வழங்கப்படவுள்ளதாக பிரசாரப்படுத்தியிருந்தனர். தற்போது அவர் தான் இரண்டு நாட்களில் வெளியே வந்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2024-06-28 16:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.



இலங்கையில் பறவைக்காய்ச்சல் நோயாளி?
[Friday 2024-06-28 16:00]

பறவை காய்ச்சல் நோயாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தொற்று நோய் மருத்துவமனையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



வாகன உரிமத் தகடுகளை தானாகவே புதுப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது ஒன்ராறியோ அரசு!
[Friday 2024-06-28 16:00]

"ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.



தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவித்தது ஆணைக்குழு!
[Friday 2024-06-28 16:00]

தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்கள அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.



மஹிந்தவைச் சந்தித்தார் சீன துணை வெளியுறவு அமைச்சர்!
[Friday 2024-06-28 16:00]

சீன வெளியுறவுத் துணை அமைச்சர் சன் வெய்டாங்கை, பெய்ஜிங்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர், அவரை சீனாவின் பழைய நண்பர் என்று அழைத்தார்.



பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம்!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி ஒன்று காணப்பட்டது தொடர்பான வழக்கில் மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.



மூதூரில் கைதுசெய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுவிப்பு!
[Friday 2024-06-28 16:00]

மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் இன்று மூதூர் நீதிமன்றால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



கசிப்பு வேட்டைக்கு சென்றவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிய குளவிகள்!
[Friday 2024-06-28 16:00]

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.



கைக்குண்டு, வாள்களுடன் வன்முறைக் கும்பலை சேர்ந்தவர் கைது!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் மரணம்!
[Friday 2024-06-28 16:00]

யாழ்ப்பாணம்- இளவாலை விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் விளான் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.



வெறும் கையுடன் திரும்புகிறது இலங்கை குழு!
[Friday 2024-06-28 06:00]

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் விவகாரத்தில் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இருதரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர்.



கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டில் சிக்கல்கள்!
[Friday 2024-06-28 06:00]

சர்வதேச நாணய நிதிய திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் புதன்கிழமை வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். என்றாலும் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மாணவர்களின் கல்வியை பாழாக்காதீர்கள்!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதியின் நற்செய்தியை திசை திருப்பவே மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவை மீறியதாலே பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.



மூன்றாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!
[Friday 2024-06-28 06:00]

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளனர்.



அநாதரவாக நின்ற கார் மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர்.



நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது!
[Friday 2024-06-28 06:00]

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



எதிர்க்கட்சிகளுக்கு கெட்ட செய்தி!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தியுடன் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் வங்குராேத்து நிலையிலிருந்த நாடு மீண்டும் சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.



சீனாவுக்குப் பறந்தார் மஹிந்த!
[Thursday 2024-06-27 16:00]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.



கடன் மறுசீரமைப்பு உடன்பாடு- வரவேற்கிறது ஜப்பான்!
[Thursday 2024-06-27 16:00]

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழுவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா