Untitled Document
September 28, 2024 [GMT]
இலங்கையில் மத சுதந்திரம் கரிசனைக்குரிய மட்டத்தில்!- அமெரிக்கா சுட்டிக்காட்டு.
[Thursday 2024-05-23 05:00]

இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

  

சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் இலங்கையில் மதசுதந்திரம் மீதான சவால்கள் தொடர்பில் அண்மையில் நிகழ்நிலை முறைமையிலான கருத்துக்கோரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பிரதி தவிசாளர் பிரெடெரிக் ஏ.டேவி, ஆணையாளர்களான டேவிட் ஹரி மற்றும் ஸ்டீபன் ஸ்னெக் ஆகிய மூவரடங்கிய குழாம் இதற்குத் தலைமைதாங்கியது.

அதன்படி இலங்கையின் மதசுதந்திர நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்குழாமில் உள்ளடங்கும் பிரதிநிதிகள், 'போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை அதன் இன, மத வன்முறை வரலாற்றுடனான சமரசத்தைத் தொடர்கின்றது. இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான நிலைவரம் கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான அமைதியின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

பயங்கரவாத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் என்பன உள்ளடங்கலாக மத சிறுபான்மையினரை இலக்குவைக்கக்கூடியவாறான பல்வேறு கொள்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தீவிர அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளன' எனச் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மத சுதந்திர செயற்பாட்டாளர்கள், இன-மத சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மத சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டிய பட்டியலில் வைக்கவேண்டுமெனப் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து இக்கருத்துக்கோரலில் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம், இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகர் ஷ்ரீன் ஸரூர் மற்றும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் ஆகியோர் பங்கேற்று சாட்சியம் அளித்தனர். இலங்கையின் மத சுதந்திர நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல எனவும், மாறாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை நினைவுகூர்ந்த அவர், சிறுபான்மை மதத்தை அவமதித்தமைக்காக பௌத்த தேரர் ஒருவருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார்.

இருப்பினும் ஞானசார தேரரினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளையும், அவற்றுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஹிஜாஸ், இருப்பினும் ஞானசாரர் நீண்டகாலமாக கைதுசெய்யப்படவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன பயன்படுத்தப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் மத சுதந்திரம் வெகுவாக ஒடுக்கப்பட்டமை குறித்தும் விரிவாக விளக்கமளித்த அவர், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமும் மத சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தக்கூடும் என சந்தேகம் வெளியிட்டார்.

மதுரா ராசரத்னம்

'இலங்கை அரசியலமைப்பின் ஊடாக சகல மதங்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், அதில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே முதலிடம் அளிக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அரச கட்டமைப்புக்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மிகத்தீவிரமாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்நடவடிக்கைகளே மூன்று தசாப்தகால யுத்தத்துக்குத் தூண்டுதலாக அமைந்தன. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களை அரச அனுசரணையுடன் சிங்கள, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன' என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம் சுட்டிக்காட்டினார்.

மைக் கேப்ரியல்

இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல் இலங்கையில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துவரும் மதரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். '2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படாததைப்போன்று மேற்படி ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையோரும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் எனவும், அன்றேல் வழிபாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன' என அவர் தெரிவித்தார்.

அலன் கீனன்

'அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான அழுத்தங்கள் அண்மையகாலங்களில் வெகுவாக அதிகரித்துவருகின்றன' எனக் குறிப்பிட்ட சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் ஆகிய இரண்டையும் அண்மையகால உதாரணங்களாக சுட்டிக்காட்டினார்.

  
   Bookmark and Share Seithy.com



சிறுவர் தினத்தன்று வவுனியாவில் போராட்டத்துக்கு அழைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.



வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!
[Saturday 2024-09-28 17:00]

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படுகிறது.



இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறேன் - அறிவித்தார் விக்கி!
[Saturday 2024-09-28 17:00]

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.



சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாது!
[Saturday 2024-09-28 17:00]

சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



குமார வெல்கம காலமானார்!
[Saturday 2024-09-28 17:00]

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். காலமாகும் போது அவருக்கு வயது 74 ஆகும்.



பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது! - பறந்தது உத்தரவு.
[Saturday 2024-09-28 17:00]

பாடசாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.



அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடிவு!
[Saturday 2024-09-28 17:00]

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தையில் விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.



7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



லெபனானில் இலங்கையர்கள் பாதுகாப்பான நிலையில்!
[Saturday 2024-09-28 17:00]

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.



முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக்குழு!
[Saturday 2024-09-28 17:00]

பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். இவ்வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இராணுவத்தினரால் வாழ்வாதாரம் பாதிப்பு!
[Saturday 2024-09-28 06:00]

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சிறீதரனுக்கு முதலிடம்!
[Saturday 2024-09-28 06:00]

நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2020 தொடக்கம் 2024 வரையான நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுள் சிறப்பாக செயல்பட்ட முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



வேட்புமனுவில் பழையவர்களை கழற்றி விட சுமந்திரன் திட்டம்!
[Saturday 2024-09-28 06:00]

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இல்லை!
[Saturday 2024-09-28 06:00]

பாராளுமன்ற தேர்தலில் இணைந்துபோட்டிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடலில் நாங்கள் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரி கொள்கையுடவர்களை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே முயற்சிக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.



750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்முதல் நிறுத்தம்!
[Saturday 2024-09-28 06:00]

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.



ரணிலுடன் இணைந்தவர்களை அழைக்கிறார் நாமல்!
[Saturday 2024-09-28 06:00]

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.



ஹக்கீமுடன் இந்தியத் தூதுவர் ஆலோசனை!
[Saturday 2024-09-28 06:00]

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார். இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



வடக்கு ஆளுநருக்கு இந்திய துணைத் தூதுவர் வாழ்த்து!
[Saturday 2024-09-28 06:00]

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



புதிய சின்னத்தில் புதிய கூட்டணி!
[Saturday 2024-09-28 06:00]

பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.



246 மில்லியன் ரூபா நட்டஈடு கிடைத்தது - 62 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டது!
[Saturday 2024-09-28 06:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 246 மில்லியன் ரூபாய் நட்டஈடு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 62 மில்லியன் ரூபாய் உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா