Untitled Document
September 28, 2024 [GMT]
வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது!
[Thursday 2024-05-23 15:00]


தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அதேவேளை இந்தியாவின் பின்னணியில் சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே பொது வேட்பாளர் ஒரு நாடகம் ஒரு சதி  என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அதேவேளை இந்தியாவின் பின்னணியில் சிவில் அமைப்புக்கள் செயற்படுகின்றன எனவே பொது வேட்பாளர் ஒரு நாடகம் ஒரு சதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு மேல்மாடி வீதியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே 1949ம் ஆண்டிற்கு பிறகு இருக்கின்ற ஒற்றையாட்சி கட்டமைப்பை அகற்றிவிட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழர்கள் இந்த தீவிலே நிம்மதியாக வாழவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எமது கோரிக்கையாகும்.

அதன் அடிப்படையில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் கடந்த 75 வருடமாக தமிழ் மக்கள் தொடர்சியாக அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் போராடிவந்து இன்று ஆயுத போராட்டம் பாரிய ஒரு உயிர்சேதங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நிற்கின்ற சூழ்நிலையிலே மீண்டும் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போகின்றோமா? அல்லது சமஸ்டி கட்டமைப்புக்காக குரல் கொடுக்கப் போகின்றோமா? என்ற விடயத்தை நாங்கள் தெளிவடைய வேண்டும்.

கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு இனங்கி அவர்கள் மக்களுக்கு தமிழ் தேசியத்தை கூறிக்கொண்டு மாறாக 2016ம் ஆண்டு அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டது அதில் 6 பேர் கொண்ட குழுவில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் ஊடக பேச்சாளர் எம். சுமந்திரன் இருந்தனர்.

அதில் அவர்கள் ஏக்கிய ராஜ்சிய என்ற வார்த்தையை பிரயோகித்து மக்களை ஏமாற்றி ஒற்றியாட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவந்த அந்த நிலையை மாற்றி அவர்களாகவே ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் ஒரு பச்சை துரோகத்தை செய்கின்ற போது அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் எழுக தமிழர் என்ற மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இது தான் என மக்கள் எழுச்சி மூலம்; தெரியப்படுத்தினர்.

அன்றைய நேரத்தில் இந்த சிவில் அமைப்புக்கள் நித்திரை கொண்டதா? அல்லது கோமாவில் இருந்தனரா? என்பது தான் எனது கேள்வி ஆகவே எங்களை பொறுத்தமட்டிலே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் எல்லாம் ஒரு நாடகம் ஒரு சதி இதற்கு பின்னணியில் இந்தியா நிற்கின்றது.

இந்தியா விரும்புகின்ற நபர்களே அரசியல் தரப்புக்களையே காட்டினால் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் அவர்களின் சொல்லை கேட்கமாட்டார்கள் என்பதற்காக இப்படிப்பட்ட சிவில் அமைப்புக்கள் போன்றவற்றை தங்களின் நிகழ்சி நிரலை நிறைவேற்றுவதற்காக இப்படிப்பட்ட கைங்கரியங்களை இந்தியா செய்கின்றது.

தேர்தல் பகிஸ்கரிப்பு விடயத்தில் மூன்று விடயங்களை சொல்ல இருக்கின்றோம் அதில் முதலாவது ஜனாதிபதியாக வார விரும்புவருக்கு ஒரு செய்தியை சொல்ல இருக்கின்றோம் அவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்கள் ஏனையவர்களுக்கு வாக்களித்திருந்தால் தான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது என்ற விடையத்தையும்.

இரண்டாவதாக ஜனாதிபதியாக வராமல் தோற்றவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் கொடுத்திருந்தால் நாங்கள் ஜனாதிபதியாக வந்திருக்கலாம் என்ற விடயத்தையும்.

மூன்றாவதாக இந்த தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூலோக அரசியல் நலனை இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டுவந்த இந்த வல்லரசுகள் இனிமேலும் வந்து தமிழர்களை நாங்கள் பகடக்காயாக பயன்படுத்த முடியாது அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய பிறகுதான் தாங்கள் விரும்பிய தலைவர்களை கொண்டுவர இந்த மக்களிடம் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்காகதான் இந்த தேர்தல் பகிஸ்கரிப்பை நாங்கள் அறிவித்தோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சிறுவர் தினத்தன்று வவுனியாவில் போராட்டத்துக்கு அழைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.



வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!
[Saturday 2024-09-28 17:00]

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படுகிறது.



இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறேன் - அறிவித்தார் விக்கி!
[Saturday 2024-09-28 17:00]

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.



சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாது!
[Saturday 2024-09-28 17:00]

சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



குமார வெல்கம காலமானார்!
[Saturday 2024-09-28 17:00]

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். காலமாகும் போது அவருக்கு வயது 74 ஆகும்.



பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது! - பறந்தது உத்தரவு.
[Saturday 2024-09-28 17:00]

பாடசாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.



அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடிவு!
[Saturday 2024-09-28 17:00]

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தையில் விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.



7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



லெபனானில் இலங்கையர்கள் பாதுகாப்பான நிலையில்!
[Saturday 2024-09-28 17:00]

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.



முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக்குழு!
[Saturday 2024-09-28 17:00]

பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். இவ்வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இராணுவத்தினரால் வாழ்வாதாரம் பாதிப்பு!
[Saturday 2024-09-28 06:00]

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சிறீதரனுக்கு முதலிடம்!
[Saturday 2024-09-28 06:00]

நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2020 தொடக்கம் 2024 வரையான நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுள் சிறப்பாக செயல்பட்ட முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



வேட்புமனுவில் பழையவர்களை கழற்றி விட சுமந்திரன் திட்டம்!
[Saturday 2024-09-28 06:00]

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இல்லை!
[Saturday 2024-09-28 06:00]

பாராளுமன்ற தேர்தலில் இணைந்துபோட்டிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடலில் நாங்கள் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரி கொள்கையுடவர்களை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே முயற்சிக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.



750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்முதல் நிறுத்தம்!
[Saturday 2024-09-28 06:00]

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.



ரணிலுடன் இணைந்தவர்களை அழைக்கிறார் நாமல்!
[Saturday 2024-09-28 06:00]

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.



ஹக்கீமுடன் இந்தியத் தூதுவர் ஆலோசனை!
[Saturday 2024-09-28 06:00]

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார். இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



வடக்கு ஆளுநருக்கு இந்திய துணைத் தூதுவர் வாழ்த்து!
[Saturday 2024-09-28 06:00]

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



புதிய சின்னத்தில் புதிய கூட்டணி!
[Saturday 2024-09-28 06:00]

பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.



246 மில்லியன் ரூபா நட்டஈடு கிடைத்தது - 62 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டது!
[Saturday 2024-09-28 06:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 246 மில்லியன் ரூபாய் நட்டஈடு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 62 மில்லியன் ரூபாய் உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா