Untitled Document
June 26, 2024 [GMT]
முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
[Monday 2024-06-17 17:00]


முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு  சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.

அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.

குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதுதவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



மாங்குளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி! Top News
[Wednesday 2024-06-26 17:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



கடன் மறுசீரமைப்பு இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது!
[Wednesday 2024-06-26 17:00]

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



இருதயபுரத்தில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது! Top News
[Wednesday 2024-06-26 17:00]

திருகோணமலை, மூதூர் இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! Top News
[Wednesday 2024-06-26 17:00]

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நாளையும் தொடர்கிறது ஆசிரியர் போராட்டம்- ஸ்டாலின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி.
[Wednesday 2024-06-26 17:00]

கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



ஆசிரியர்களின் போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!
[Wednesday 2024-06-26 17:00]

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.



நெல்லியடியில் புடவைக் கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Wednesday 2024-06-26 17:00]

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்று இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.



15 வயது சிறுமி துஷ்பிரயோகம்- 17 வயதுச் சிறுவன் கைது!
[Wednesday 2024-06-26 16:00]

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



போலிச் சாவி மூலம் 64 பவுண் நகைகள் ஆலயத்தில் திருட்டு!
[Wednesday 2024-06-26 16:00]

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன.



10 ஆயிரம் பாடசாலைகளை முடக்கிய ஆசிரியர், அதிபர் போராட்டம்!
[Wednesday 2024-06-26 16:00]

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டர்.



வங்குரோத்தில் இருந்து மீண்டதாக அறிவிக்கவுள்ளார் ரணில்!
[Wednesday 2024-06-26 06:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



ரணிலுக்கு ஆதரவளிப்பார் சம்பந்தன்!- வஜிர நம்பிக்கை.
[Wednesday 2024-06-26 06:00]

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.



நீதிபதிகள் இருவரை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்க வேண்டும்!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திஸாநாயக்க மற்றும் செயலாளர் இசுரு நெத்திகுமாரகே ஆகிய இருவரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்து ஒழுக்கயீனமாக செயற்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.



நீதித்துறையில் தலையிடக் கூடாது!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



யாழ்., கிளிநொச்சிக்கு பதில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!
[Wednesday 2024-06-26 06:00]

கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு புதிய மாவட்டச் செயலாளர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.



இன்று பிற்பகலுக்குப் பின்னர் வடக்கில் மழை!
[Wednesday 2024-06-26 06:00]

இன்று பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ. பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம்! Top News
[Wednesday 2024-06-26 06:00]

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சினால் செவ்வாய்க்கிழைமை திறந்து வைக்கப்பட்டது.



விஜயதாஸவுக்கு தடை நீடிப்பு!
[Wednesday 2024-06-26 06:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதை தடுத்து விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை, ஜூலை 9ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.



சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி!
[Wednesday 2024-06-26 06:00]

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.



மூதூரில் குளவி கொட்டி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday 2024-06-26 06:00]

மூதூரிலுள்ள பாடசாலையொன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர். 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா