Untitled Document
June 30, 2024 [GMT]
சீனாவுடனும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
[Thursday 2024-06-27 05:00]


இலங்கை நேற்று முற்பகல் பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

இலங்கை நேற்று முற்பகல் பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

  

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை எட்டியதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது.

இந்த இணக்கப்பாடுகளுடன், இலங்கை தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கின. அவுஸ்திரேலியா, ஒஸ்டிரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, ஹொங்கேரியா, கொரியா, நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இருந்தன.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா எக்ஸிம் வங்கி மூலம் மறுசீரமைக்கப்பட வேண்டிய கடனின் ஒருங்கிணைந்த மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அந்நிய செலாவணிக் கையிருப்பை இழந்தது. இதனால் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தது.

இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டது. கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடுகளுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு முடியாது என்பதால் இலங்கை தனது அரச கடன் மறுசீரமைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு (Debt Sustainability Analysis – DSA) ஆரம்பத்தில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் கடன் நிவாரண அளவு தீர்மானிக்கப்படுகிறது.

அதன் பின்னர், இந்த கடன் வழங்குநர்கள் மற்றும் கடனில் உள்ள நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு மூலம் காட்டப்படும் இலக்கை அடையத் தேவையான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்தது.

சர்வதேச நாணய நிதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் நிவாரணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும்.

கடன் வழங்கும் நாடுகள் வெவ்வேறு வழிகளில் கடன் நிவாரணம் வழங்குகின்றன. உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி போன்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் இவற்றை வெவ்வேறாக தீர்மானிக்கின்றன.

காலத்தை நீடித்தல், விதிமுறைகளை தளர்த்துதல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்க கணிசமான கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பொருளாதாரம் மீளவும் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்காலத்தில் கடன் சேவைத் திறன் மேம்படும் வரை குறுகிய காலத்தில் இலங்கைக்கான தற்போதைய கட்டணச் சுமையை இது குறைக்கும்.

இதை மதிப்பிடுவதற்காக உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் ஊடாக ஐஎம்எப் உடனான நிகழ்ச்சி நிரல் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், செலுத்த வேண்டிய குறித்த கடனில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு கடன் வழங்குநருடனும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது ஐஎம்எப் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். அத்துடன், ஏனைய கடன் வழங்குநர்களுடன் எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடப்படும் வகையில் இது இருக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களுடனான இறுதிக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டுவதை இலங்கை துரிதப்படுத்தும். முறையான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பது இந்த செயல்முறையை எளிதாக்கும்.

நேற்று எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் பின்வரும் நன்மைகளை உள்ளடக்கியது:

1. நிதி நிவாரணம்:

இலங்கையின் வரி வருவாயை கடனை செலுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொது சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கால அவகாசத்தை வழங்குகிறது.

2. வெளிநாட்டு நிதி:

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இருதரப்பு நிதியுதவி வசதிகளைப் பெறுவதை மீண்டும் தொடங்கலாம். வரவு செலவுத்திட்டத்தின் மூலதன செலவினங்களை ஆதரிக்க குறுகிய கால வெளிநாட்டு நிதி கிடைப்பதில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது நிர்மாணத்துறை போன்ற துறைகளில் சாதகமான விளைவுகளையும், முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நடுத்தர முதல் நீண்ட கால சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

3. கடன் தரப்படுத்தல்:

இலங்கையின் கடன் தரப்படுத்தலை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவு அமையும். வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களின் கடன்களும் விரைவாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர், அது கடன் தரப்படுத்தலின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவானது வெளிநாட்டு நிதியுதவிக்கான எளிதான பிரவேசம் என்பதுடன் குறைந்த செலவு போன்ற வழிகளின் ஊடாக குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். இது வர்த்தக நிதியிலிருந்து வங்கிகளுக்கு இடையேயான நிதியுதவி வரை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  
   Bookmark and Share Seithy.com



தேர்தலுக்கு தயாராகுமாறு அரச செயலகங்களுக்கு அறிவிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது.



மொட்டுவின் முடிவுக்காக காத்திருக்கும் தம்மிக்க பெரேரா!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவுக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.



போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை புலனாய்வு அதிகாரிகள் கைது!
[Sunday 2024-06-30 17:00]

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.



இன்று இரவு எரிபொருள் விலை திருத்தம்!
[Sunday 2024-06-30 17:00]

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



வான் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Sunday 2024-06-30 17:00]

மோட்டார் சைக்கிள் - வான் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.



வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து பின்னரே முடிவு!
[Sunday 2024-06-30 17:00]

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் பங்கேற்போம் என்று அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கும் என்றும் அறிவித்துள்ளது.



மிளகாய் ஐஸ்கிரீம் - கொஞ்சம் காரம், கொஞ்சம் இனிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.



கடலில் மர்ம திரவம் அருந்திய ஐந்தாவது மீனவரும் மரணம்!
[Sunday 2024-06-30 17:00]

சர்வதேச கடலில் ஆபத்தான நிலையில் இருந்த 6 மீனவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மீனவரை காப்பாற்ற கடற்படை வைத்தியர் உட்பட கடற்படை குழு முயற்சித்து வருவதாக கடற்படை பேச்சாளர் ​கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.



இரணைமடுக் குளத்தில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு!
[Sunday 2024-06-30 17:00]

கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!
[Sunday 2024-06-30 16:00]

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஒருவரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



தமிழ் தேசிய பேரவையை உருவாக்க முடிவு!
[Sunday 2024-06-30 05:00]

தமிழ் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்ற பொது கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.



சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியில் வியாழேந்திரன்! விமல் கட்சியும் உடைந்தது.
[Sunday 2024-06-30 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத்தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.



பட்டப்பகலில் வாள்களுடன் நடமாட முடியுமென்றால் பொலிசார் என்ன செய்கின்றனர்?
[Sunday 2024-06-30 05:00]

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாட முடியும் என்றால் யாழ்ப்பாணத்தில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.



திருகோணமலையில் காணாமல்போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மீட்பு!
[Sunday 2024-06-30 05:00]

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.



இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
[Sunday 2024-06-30 05:00]

ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இந்தியர்களை அடுத்து சீனர்கள் - தெற்கில் தொடர்கிறது வேட்டை!
[Sunday 2024-06-30 05:00]

ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர்!
[Saturday 2024-06-29 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



மாங்குளம் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
[Saturday 2024-06-29 17:00]

முல்லைத்தீவு மாங்குளத்துக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



மடு விபத்தில் இளைஞன் பலி!
[Saturday 2024-06-29 17:00]

மன்னா் - மடு இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.



ரஷ்ய பிரஜைகளாக மாறிய இலங்கை கூலிப்படையினர்!
[Saturday 2024-06-29 17:00]

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா