Untitled Document
July 4, 2024 [GMT]
சம்பந்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
[Monday 2024-07-01 16:00]


மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரங்கல்

தமிழ்ச் சமூகத்தின் அசைக்க முடியாத அரசியவாதியும் உயர்ந்த ஆளுமையுமான ஆர்.சம்பந்தனின் மறைவு ஆழ்ந்த கவலலை அளிக்கிறது. ஜனநாயகம் மற்றும் அதிகாரப் பகிர்வு மீதான அவரது உறுதியான நம்பிக்கை, எப்போதும் "பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள்" என்றென்றும் எதிரொலிக்கும். அவரது நினைவாக, அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடுவோம், நமது பன்முகத்தன்மையை வலிமையின் ஆதாரமாக ஏற்றுக்கொள்வோம். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இரங்கல்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

அவர் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரங்கல்

இலங்கையில் நீண்டகாலம் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீண்டகாலம் தலைமை தாங்கியவருமான ஆர்.சம்பந்தன் காலமானதை அறிந்து நான் மிகுந்த கவலை அடைகிறேன். 6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இரங்கல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைவு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. அவரை பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியுள்ளேன். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பிற்காகவும், இந்தியா மீதான அவரது நல்லெண்ணத்திற்காகவும் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது பிரிவால் வடும் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் குகதாசன் இரங்கல்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்திய இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்காண அயராது உழைத்து வந்தவருமான இரா. சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாதன் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இரங்கல்.

இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது எக்ஸ் பக்கத்தின் ஊடாக இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும். என பதிவிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



சம்பந்தன் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Thursday 2024-07-04 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.



தேர்தலை பிற்போட வேண்டும்! - மீண்டும் வலியுறுத்துகிறார் விக்கி.
[Thursday 2024-07-04 16:00]

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.



ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான்!- ரணில் திட்டவட்டம்.
[Thursday 2024-07-04 16:00]

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.



சுங்க தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
[Thursday 2024-07-04 16:00]

இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து சுகயீன விடுமுறை அறிக்கை மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுங்க ஒன்றிய சம்மேளனம் தீர்மானித்துள்ளது.



இடைநிறுத்தப்பட்ட ஸாஹிரா மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!
[Thursday 2024-07-04 16:00]

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.



ஜே.ஆரின் பேரன் சஜித்துடன் இணைந்தார்!
[Thursday 2024-07-04 16:00]

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.



12 பில்லியன் டொலர்கள் பிணைமுறி முதலீட்டாளருடன் கடன் மறுசீரமைப்பு உடன்பாடு!
[Thursday 2024-07-04 16:00]

சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் மறுசீரமைப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்த பத்திரப்பதிவுதாரர்களின் வழிநடத்தல் குழுவுடன் இலங்கை அரசாங்கம் உடன்பாட்டை எட்டியுள்ளது.



ஹிருணிகாவின் பிணைக்கோரிக்கை - சட்டமா அதிபர் எதிர்ப்பு!
[Thursday 2024-07-04 16:00]

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார்.



யுவதியைக் காணவில்லை - காதலனால் கிணற்றில் புதைக்கப்பட்டாரா?
[Thursday 2024-07-04 15:00]

திருகோணமலை - தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சிலாபம் விபத்தில் ஒருவர் பலி- 35 பேர் காயம்! Top News
[Thursday 2024-07-04 15:00]

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இன்று யாழ்ப்பாணம் வருகிறது சம்பந்தனின் பூதவுடல்!
[Thursday 2024-07-04 05:00]

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.



தேர்தலை தடுக்கும் சதியில் ஜனாதிபதி!
[Thursday 2024-07-04 05:00]

கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கி வந்தனர். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என மக்களை நம்பவைக்கும் வகையில் அரசியல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமான குழுக்களும் முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்!
[Thursday 2024-07-04 05:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி, இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.



வெண்மையாக்கும் கிறீம்களால் சிறுநீரக நோய் அதிகரிப்பு!
[Thursday 2024-07-04 05:00]

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



சம்பந்தன் உடல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி! Top News
[Thursday 2024-07-04 05:00]

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் இறுதி அஞ்சலிக்காக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



பிரித்தானியா பொதுதேர்தலில் தமிழ் மக்களின் பங்களிப்பும் வாக்களித்தலின் அவசியமும்!
[Thursday 2024-07-04 05:00]

தமிழ் மக்களாகிய நாங்கள் வாழும் நாடுகளில் எம்மை தகவமைத்து கொண்டு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றோம்.



தெல்லிப்பளையில் உள்ள மகளிர், சிறுவர் இல்லங்களை மூட வடமாகாண ஆளுநர் உத்தரவு!
[Thursday 2024-07-04 05:00]

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.



சம்பந்தன் இறந்ததும் ரணில் அதிகாரப்பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா?
[Thursday 2024-07-04 05:00]

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இறந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.



புலோலி காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு!
[Thursday 2024-07-04 05:00]

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை - புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் நேற்று மீட்கப்பட்டன. ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பனவே மீட்கப்பட்டன. சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



பண்டத்தரிப்பில் குளவி கொட்டி பெண் மரணம்!
[Thursday 2024-07-04 05:00]

பண்டத்தரிப்பில் செவ்வாய்க்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் புதன்கிழமை தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா