Untitled Document
July 7, 2024 [GMT]
தெல்லிப்பளையில் உள்ள மகளிர், சிறுவர் இல்லங்களை மூட வடமாகாண ஆளுநர் உத்தரவு!
[Thursday 2024-07-04 05:00]


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

  

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது.

அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநருக்கு களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்பெண் குத்திக் கொலை!- கணவன் கைது.
[Sunday 2024-07-07 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலேயே நேற்று இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.



வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்கும்!
[Sunday 2024-07-07 05:00]

இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி- 3 பேர் காயம்.
[Sunday 2024-07-07 05:00]

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



நான் யாசகன் அல்ல, சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல!- என்கிறார் ரணில்.
[Sunday 2024-07-07 05:00]

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



தொழிற்கட்சியின் வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்!
[Sunday 2024-07-07 05:00]

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.



ஜெனிவா தீர்மானத்துக்கு ஒரு வருட நீடிப்பு?
[Sunday 2024-07-07 05:00]

இவ்வருடம் இலங்கையில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடகாலத்துக்கு நீடிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜெனிவாவில் ஆராயப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.



சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம்- நாளை கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!
[Sunday 2024-07-07 05:00]

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய மருத்துவ அதிகாரிக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் மருத்துவமனையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தேசிய அரசுக்கு மொட்டு கட்சியும் எதிர்ப்பு!
[Sunday 2024-07-07 05:00]

தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது.



மருத்துவரைத் தாக்கிய மருத்துவர் குழு- விசாரணை நடத்தப்படும் என்கிறார் பணிப்பாளர்!
[Sunday 2024-07-07 05:00]

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார்.



4 நாட்களில் 21,298 சுற்றுலாப்பயணிகள் வருகை!
[Sunday 2024-07-07 05:00]

இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



முன்னாள் போராளி பிறேம் மர்ம மரணம்!
[Saturday 2024-07-06 20:00]

மன்னார்- அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வருடம் சம்பள அதிகரிப்பு இல்லை - கைவிரித்தார் ஜனாதிபதி!
[Saturday 2024-07-06 20:00]

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



சர்வஜன பலயவின் மூலோபாய திட்ட வரைவு வெளியீடு!
[Saturday 2024-07-06 20:00]

சர்வஜன அதிகார கூட்டணியின் மூலோபாயத் திட்டத்தின் முதல் வரைவு இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. பொதுமக்களின் கருத்தை சேகரித்த பிறகு இதன் இறுதி திட்டம் வெளியிடப்படும். "மகிழ்ச்சியான நாடு - தொழில் முனைவோர் நாடு". இந்த திட்டத்தின் கருப்பொருளாகும்.



வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம்!
[Saturday 2024-07-06 20:00]

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கறுப்பு உடையடைந்து கறுப்புக் கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



காணாமல் போன பெண்ணின் சடலம் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்பு!
[Saturday 2024-07-06 20:00]

மூதூர் - கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காணாமல் போயிருந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமும், அவரது கைப்பையும் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.



சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞன் கைது!
[Saturday 2024-07-06 20:00]

ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



உரிய திகதியில் தேர்தல்! - தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தினார் ஜனாதிபதி.
[Saturday 2024-07-06 05:00]

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் புதைகுழி வீதி வரை விஸ்தரிப்பு! - நிலத்துக்குள் தென்படும் சீருடைகள். Top News
[Saturday 2024-07-06 05:00]

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது நேற்று இடம்பெற்றது.



உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.3 சதவீதம் அதிகரிப்பு!
[Saturday 2024-07-06 05:00]

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.3 சதவீதம் அதிகரித்து 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்!
[Saturday 2024-07-06 05:00]

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா