Untitled Document
November 10, 2024 [GMT]
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பிலும் ரத்நாயக்க விளக்கமளிக்கையில்;

ஒரு வேட்பாளருக்கு தனது வாக்கை அளிக்கவும், அதனைத் தொடர்ந்து ஏனைய இரு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கையும் அளிக்கமுடியும்.

நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.

அதன்பின்னர் ‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களைக் குறியிட்டு, தனக்கு விருப்பமான ஏனைய வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கை அளிக்கலாம் .

வாக்காளர் எக்ஸ் (X) என மட்டுமே குறிப்பிட்டிருந்தால் அது வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்காக கருதப்படும்.

நிராகரிக்கப்படும் விருப்புத் தேர்வுகள்

01. எந்த வேட்பாளருக்கும் எந்த வாக்கும் குறிக்கப்படாதபோது

02. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு தவறான முறையில் வாக்குகள் குறிக்கப்படும் போது;

03.ஒரு வேட்பாளருக்கு ‘1’ மற்றும் மற்றொரு வேட்பாளருக்கு ‘X’ குறிக்கப்பட்டால் அது செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

04.இரண்டாவது விருப்பம் அல்லது மூன்றாவது விருப்பம் மட்டுமே குறிக்கப்படும் போதும் செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

05.வாக்காளரை அடையாளப்படுத்த ஏதாவது எழுதுவது அல்லது வரைதல்

06.’2′ மற்றும் ‘3’ ஆகியவை ‘1’ தவிர வேறு ஒரு குறியுடன் முன்னுரிமையாகக் குறிக்கப்படும் போது

07.வாக்குகள் மற்றும் விருப்பத் தேர்வுகள் 1, 2, 3 க்கு மேல் குறிக்கப்படும் போது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் விருப்புத் தேர்வுகள் நிராகரிக்கப்படும்.

  
   Bookmark and Share Seithy.com



கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி!
[Sunday 2024-11-10 17:00]

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். வேலா என்ற நீர்மூழ்கிக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 53 மாலுமிகளுடன் வந்துள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை இங்கு தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு விஜயம்!
[Sunday 2024-11-10 17:00]

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



குழந்தை தூக்கி வீசி சுன்னாகம் பொலிஸ் அட்டகாசம்!
[Sunday 2024-11-10 17:00]

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.



வவுனியாவில் பெண் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
[Sunday 2024-11-10 17:00]

பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது. வவுனியா ஈச்சங்குளத்தில் அம்மிவைத்தான் பகுதியில் வசித்த 58 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.



கோப்பாயில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
[Sunday 2024-11-10 17:00]

யாழ். கோப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுன்னாகம் சம்பவம் - விசேட பொலிஸ் குழு விசாரணை!
[Sunday 2024-11-10 17:00]

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.



தோட்டத் தொழிலாளர்களிடம் ஜேவிபி மன்னிப்புக் கேட்க வேண்டும்!
[Sunday 2024-11-10 17:00]

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த ஜே.வி.பி அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



மண்டபம் முகாமில் இருந்த 9 பேர் நெடுந்தீவு திரும்பினர்!
[Sunday 2024-11-10 17:00]

இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் ​நேற்று மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்,மனைவி சுட்டுக்கொலை!
[Sunday 2024-11-10 17:00]

காலி வீதி, அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில், இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



லசந்த, தாஜூதீன் கொலைகளும் விசாரிக்கப்படும்!
[Sunday 2024-11-10 17:00]

வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



14 ஆம் திகதிக்குப் பின் போராட்டம் வெடிக்கும்!
[Sunday 2024-11-10 06:00]

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டத்தை ரத்து செய்தது கனடா!
[Sunday 2024-11-10 06:00]

கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



இடதுசாரி என்று தேசியவாத கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள்!
[Sunday 2024-11-10 06:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரப் பகுதியில் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். வைரவ புளியங்குளம் பகுதியில் ஆரம்பமான இந்த பிரச்சார நடவடிக்கைகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.



பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?
[Sunday 2024-11-10 06:00]

14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு.



மின்கட்டணம், எரிபொருள் விலையைக் குறைப்போம்!
[Sunday 2024-11-10 06:00]

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படும்!
[Sunday 2024-11-10 06:00]

தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது



தேர்தல் கண்காணிப்பில் 50 ஆயிரம் பேர்!
[Sunday 2024-11-10 06:00]

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



திரிபோஷா நிறுவனத்தை மூடவில்லை!
[Sunday 2024-11-10 06:00]

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கில் இன்று இடைக்கிடையே மழை!
[Sunday 2024-11-10 06:00]

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



வாக்களிக்க அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை!
[Sunday 2024-11-10 06:00]

பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனைத்து தனியார் மற்றும் பொது வங்கி மற்றும் நிதி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா