Untitled Document
September 26, 2024 [GMT]
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது!
[Thursday 2024-09-26 05:00]


இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும்  ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்கவுக்கு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்கவுக்கு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  

இவ்விடயம் குறித்து தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை(25) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இடது சாரித்துவ சிந்தனையின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் சமூக சமநீதி கோட்பாட்டின் அடிப்படையை நோக்கு நிலையாகக் கொண்டு உருவாக்கிய கட்சி இடைக்காலத்தில் இனவாத சக்திக்குள் சிக்குண்டு பௌத்த தேசிய அடிப்படைவாத மகா வம்ச கருத்தியலை நடை முறையாக்க முனைந்ததே இனத்துவ சமூக கட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. மதவாதம், இனவாதம் தேசியவாதத்திற்கு எதிரானது. தேசியவாதம் என்பது தேசிய இனங்களின் சுயநிர்ணய சமத்துவ இருப்பியலை கேள்விக்கு உட் படுத்தாது, சமநீதிக்குட்பட்டதே. இடதுசாரி கோட்பாடு இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நீதி மறுக்கப்பட்டவர்களின் அற நிலை எதிர்பார்ப்பு ஆகும். துப்பாக்கி முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது எனும் மாக்சிச கோட்பாட்டிற்கு ஆகப் பிந்திய உதாரணம் தாங்கள் ஏழு தசாப்தம் கடந்த இன முரண்பாட்டிற்கு தங்கள் காலத்தில் என்றாலும் தீர்வு காணப்படுவது அவசியம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட இனத்தின் ஏதிலி நிலையின் வலி என்ன என்பதை தாங்களும் உணர்ந்தவர் என்பதால் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள். எவருக்கும் தீங்கற்ற பஞ்சசீல தம்மபதக் கொள்கை வழியை நடைமுறைப் படுத்தினாலேயே இந்த நாட்டில் சமத்துவம் ஏற்படும் நீர்த்துப்போன சனநாயகத்தில் வெற்று வாதங்களால் தான் முரண் நகை நீள்கிறது. அது கசப்புணர்வாக மாறி இனங்களுக்கு இடையே பசப்புக் கொள்கிறது.

தமிழர்கள் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். அடிப்படை வாழ்வுரிமை இருப்பில் பங்கம் நேருவதால் தான் மனக்கிலேசம் ஏற்படுகிறது சிங்கள மக்களை நாங்கள் எதிர்க்கவில்லை அவர்கள் எமக்கு எதிரிகளும் இல்லை சிங்கள அரசியல்வாதிகளின் தவறான மேட்டிமை வாத அடிமைத்துவ சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் இனத்துவ அடக்கு முறையை யே நாம் எதிர்க்கிறோம்.

எமது நீதி பூர்வமான கோரிக்கையை இதுவரை எந்த ஆட்சியாளரும் புரிந்து கொண்டதாக வரலாறு இல்லை என்பதே வேதனைக்குரிய கசப்பான உண்மை. ஆகவே பாதிக்கப்பட்ட தரப்புடன் இதயசுத்தியாக மனம் திறந்து பூச்சிய நிலையில் இருந்து பேசுங்கள் நீதி என்பது பாதிக்கப்பட்டவனின் பக்கம் நிற்பதே முதலாளித்துவ அதிகார வர்க்கத்துக்கு எதிரான பொதுவுடமை சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட தாங்கள் அடிப்படைவாத இனவாதத்தை முழுமையாக துறந்து விட வேண்டும்.

கடந்த காலத்தில் தங்களின் இனவாத இனக்குரோத வன்முறை வாத செயற்பாடுகளால் தமிழ் மக்கள் தங்கள் மீது அச்சத்திலும் வெறுப்பிலும் உள்ளனர். அதனால் தான் தமிழர் தாயகம் எங்கும் தங்களுக்கான ஆதரவு கிட்டவில்லை இதுதான் ராஜபக்ச குடும்பத்திற்கு நேர்ந்தது.

எனவே கடந்த கால கசப்புணர்வுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள். உலகத்தில் ஜனநாயகம் பெரு வளர்ச்சி அடைந்து விட்டது ஜப்பான் ஹிரோஷிமா நகர தாக்குதலுக்காக அமெரிக்கா வருந்துகிறது.

ஜனாதிபதியே மரியாதை செலுத்தும் அளவுக்கு தவறை உணர்ந்து விட்டனர். 1983ம் ஆண்டு இனக் கலவரத்திற்காகவும் கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் உடலை எரித்தமைக்காகவும் அண்மையில் நீதி அமைச்சர் மன்னிப்பு கோரி இருந்தார்.

தங்கள் கட்சியை கூட சிங்கள மக்கள் மன்னித்ததால் தான் நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர முடிந்திருக்கிறது. உங்கள் கடந்த காலத்தையும் நீங்கள் மீள்பார்வை செய்வது இன நல்லிணக்கத்திற்கு அவசியமாகும். அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த எந்த எல்லைக்கும் போகலாம். இதுதான் ஜனநாயகத்தின் உயர்ந்த நிலை எனவே வாக்களிக்காதவருக்கும் வாய்ப்பளித்து வெற்றி கொள்வதே ஜனநாயக மரபியல் தத்துவமாகும் அதை நடைமுறைப் படுத்துவீர்கள் என நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.

நவீன இலங்கையை உருவாக்க முற்போக்கு சிந்தனையுடன் நகருங்கள் முறைமை மாற்றத்தை ஏற்படுத்துங்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கங்கள், விவசாய, கடற்றொழில் புரட்சியை ஏற்படுத்துங்கள். கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். தற்போதைய அரசு இயந்திரம் முழுமையான ஊழலுக்குள் சிக்கித் தவிக்கிறது. தயவு தாட்சண்யமின்றி ஊழல்வாதிகளுக்கு நடவடிக்கை எடுங்கள். போதைப்பொருளை முற்றாக ஒழியுங்கள், வினைத்திறனற்ற பல இலட்சம் அரச ஊழியர்களை அகற்றுங்கள் ,காவல் துறையை முழுமையாக மறுசீர் அமையுங்கள்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள். வருமானத்தை மீறி சொத்து சேர்ந்தவர்களுக்கு நடவடிக்கை எடுங்கள். சொத்துக்களை அரசுடமை யாக்குங்கள் அரசின் அர்த்தமற்ற செலவினங்களை குறையுங்கள். வருமான வரி திணைக்களத்தை வினைத்திறனுடன் இயங்க நடவடிக்கை எடுங்கள் ஊழலை கட்டுப்படுத்த வலிமையான சட்டமும் கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள ஊழல்வாதிகளை கைது செய்தால் புதிதாக சிறைச்சாலைகளை அமைக்க வேண்டி வரலாம். அவ்வளவு ஊழல்வாதிகள் உள்ளனர். ஊழல் இல்லாத திணைக்களம் இந்த நாட்டில் இல்லை கடந்த காலத்தில் அரசியல் சூதாட்டத்திலும் ஊழலிலும் ஈடுபட்ட எந்த அரசியல்வாதிகளையும் உங்கள் அரசில் சேர்த்துக் கொள்ளாதீர்கள.

எமது சித்தாந்தம் கடந்து இவ்விதமான சீர்திருத்த முறைமை மாற்றத்திற்காக உங்கள் தெரிவை வரவேற்கிறோம்.வாழ்த்துகிறோம்.

மனித சிந்தனை தோற்றுவித்திருக்கும் யாவற்றையும் மறு பரிசீலனை செய் விமர்சனத்துக்கு உட்படுத்து மாற்றி அமை செயல்படு எனும் மாக்ஸ்சிச சித்தாந்தத்தை நடைமுறை படுத்துங்கள்.

மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்கி சமூக நீதியை நிலைநாட்டுங்கள். வடகிழக்கிலுள்ள அத்தியாவசிய நிரந்தர பிரச்சனையில் பௌத்த தேசியவாதம் கடந்து அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உணர்திறனும் வாழ்வியல் உரிமையும் உண்டு என்பதை உணர்ந்து உளத்தூய்மையுடன் செயலாற்றுங்கள் வரலாறு உங்களை பதிவு செய்யும் இல்லையேல் காலம் உங்களை காலாவதி ஆக்கி விடும் என்பது தங்களுக்கு புரியாமல் இல்லை.என குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Thursday 2024-09-26 16:00]

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றையதினம் யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.



தவறாக வழிநடத்திய இராணுவப் புலனாய்வு பிரிவு! - ஷானி சந்தேகம்.
[Thursday 2024-09-26 16:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.



மோட்டார் சைக்கிள் மீது மோதி பேருந்து - முதியவர் படுகாயம்!
[Thursday 2024-09-26 16:00]

வட்டுக்கோட்டை அராலி பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆதாரங்களை முன்வைக்காத அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!
[Thursday 2024-09-26 16:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.



85 எம்.பிக்களின் பென்சன் கனவு போச்சு!
[Thursday 2024-09-26 16:00]

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 எம்.பி.க்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.



மன்னாரில் தியாகி திலீபன் நினைவேந்தல்! Top News
[Thursday 2024-09-26 16:00]

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மத தலைவர்கள்,சமூக செயற்பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.



பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரிய!
[Thursday 2024-09-26 16:00]

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்!
[Thursday 2024-09-26 16:00]

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



மனோ அணியை சந்தித்த இந்தியத் தூதுவர்!
[Thursday 2024-09-26 16:00]

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.



பாராளுமன்றத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியது!
[Thursday 2024-09-26 15:00]

பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.



தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நாள் இன்று!
[Thursday 2024-09-26 05:00]

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு அவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10.45 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.



குத்துவிளக்கு கூட்டணி தனியாக போட்டி - பொதுக்கட்டமைப்பும் இன்று கூடுகிறது!
[Thursday 2024-09-26 05:00]

ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானித்துள்ளன.



சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு!
[Thursday 2024-09-26 05:00]

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.



வான் மோதி குடும்பஸ்தர் மரணம்!
[Thursday 2024-09-26 05:00]

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் வானுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது - 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ஒன்ராறியோ Finch West LRT தொடரி நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவு!
[Thursday 2024-09-26 05:00]

ஃபின்ச் மேற்கு சிறுதொடரி (Light Rail Transit - LRT) நிலையங்களினதும், அவற்றின் நிறுத்தங்களுக்குமான கட்டுமானப் பணிகளை ஒன்ராறியோ அரசு நிறைவு செய்துள்ளது, ரெக்ஸ்டேல், ஜேன்-ஃபின்ச் மற்றும் ரிவர்-பிளாக் கிறீக் போன்ற பகுதிகளுக்கான சிறந்த மாற்றமாகக் கொள்ளப்படுகின்றது.



புலமைப்பரிசில் பரீட்சை - மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை!
[Thursday 2024-09-26 05:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



வாகனங்களைக் கைவிட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை!
[Thursday 2024-09-26 05:00]

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



நிராகரிக்கப்பட்ட வாக்குகள் குறித்து பகுப்பாய்வு!
[Thursday 2024-09-26 05:00]

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து பகுப்பாய்வு நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஆனையிறவில் சிக்கிய கஞ்சா!
[Thursday 2024-09-26 05:00]

4 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சாப் பொதி மீட்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் 6 ஆக குறையும் எம்.பிக்கள்! - வன்னியில் 6 ஆக அதிகரிப்பு.
[Wednesday 2024-09-25 18:00]

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா