Untitled Document
September 27, 2024 [GMT]
திங்கட்கிழமை கபொத சாதாரண தர பெறுபேறு!
[Friday 2024-09-27 05:00]


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

பெறுபேறுகள் வெளியானதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுவதா? - நாளை தீர்மானம்.
[Friday 2024-09-27 05:00]

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்தினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர்.



புதிய வரலாற்றை எழுதியுள்ளனர் இலங்கை மக்கள்!
[Friday 2024-09-27 05:00]

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகள் இலங்கை இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உதவும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார்.



முதல் கோணல் என்கிறார் கம்மன்பில!
[Friday 2024-09-27 05:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது நியமனம் மக்களின் நம்பிக்கையை உடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



நள்ளிரவு பழைய முறைக்கு மாறியது விசா!
[Friday 2024-09-27 05:00]

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



கட்டுநாயக்கவில் சிக்கிய கஞ்சா - பிரித்தானியர் கைது!
[Friday 2024-09-27 05:00]

43 கோடி 64 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



எதிர்க்கட்சிகளை ஒரே சின்னத்தில் போட்டியிட வைக்க ரணில் முயற்சி!
[Friday 2024-09-27 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.



அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சொகுசு வாகனங்கள்!
[Friday 2024-09-27 05:00]

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



மாபெரும் கூட்டணி - திலித் ஜெயவீர கூறுகிறார்!
[Friday 2024-09-27 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி மாபெரும் கூட்டணியை உருவாக்கப் போவதாக சர்வஜன சக்தி கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். சர்வஜன சக்தி கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



குருசாமி விலகினார் - புதிய செயலாளராக பரணிதரன்!
[Friday 2024-09-27 05:00]

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.



நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Thursday 2024-09-26 16:00]

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றையதினம் யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.



தவறாக வழிநடத்திய இராணுவப் புலனாய்வு பிரிவு! - ஷானி சந்தேகம்.
[Thursday 2024-09-26 16:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.



மோட்டார் சைக்கிள் மீது மோதி பேருந்து - முதியவர் படுகாயம்!
[Thursday 2024-09-26 16:00]

வட்டுக்கோட்டை அராலி பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆதாரங்களை முன்வைக்காத அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!
[Thursday 2024-09-26 16:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.



85 எம்.பிக்களின் பென்சன் கனவு போச்சு!
[Thursday 2024-09-26 16:00]

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 எம்.பி.க்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.



மன்னாரில் தியாகி திலீபன் நினைவேந்தல்! Top News
[Thursday 2024-09-26 16:00]

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மத தலைவர்கள்,சமூக செயற்பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.



பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரிய!
[Thursday 2024-09-26 16:00]

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்!
[Thursday 2024-09-26 16:00]

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



மனோ அணியை சந்தித்த இந்தியத் தூதுவர்!
[Thursday 2024-09-26 16:00]

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.



பாராளுமன்றத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியது!
[Thursday 2024-09-26 15:00]

பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.



தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நாள் இன்று!
[Thursday 2024-09-26 05:00]

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு அவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10.45 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா