Untitled Document
September 29, 2024 [GMT]
அரசியலமைப்பு சபைக்கு விஜித ஹேரத், ஹரிணி!
[Sunday 2024-09-29 18:00]


அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  

மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடரும்.

இதன்படி, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 9ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் சாகர காரியவசம் மற்றும் மூன்று சிவில் உறுப்பின்ர்கள் அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

  
   Bookmark and Share Seithy.com



அனுரவுடன் பேச கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!
[Sunday 2024-09-29 18:00]

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.



சங்கு சின்னத்தை கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கடிதம்!
[Sunday 2024-09-29 18:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.



தமிழரசின் தீர்மானத்திற்கு செவ்வாயன்று பதில்!
[Sunday 2024-09-29 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.



புலமைப்பரிசில் பரீட்சை - நிபுணர் குழுவின் பரிந்துரை வெளியானது!
[Sunday 2024-09-29 18:00]

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



நாட்டை விட்டு ஓடவில்லை என்கிறார் கமல் குணரத்ன!
[Sunday 2024-09-29 18:00]

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



ரைஸ், கொத்து விலை 40 ரூபாவால் குறைப்பு!
[Sunday 2024-09-29 18:00]

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!
[Sunday 2024-09-29 18:00]

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவுகளுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



வெதுப்பகப் பொருட்களின் விலை குறையாது!
[Sunday 2024-09-29 18:00]

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் திருத்தப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.



பிரமுகர்களுக்கான பாதுகாப்பு - நாளை கலந்துரையாடல்‘
[Sunday 2024-09-29 17:00]

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.



சிறுவர் தினத்தன்று வவுனியாவில் போராட்டத்துக்கு அழைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.



வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!
[Saturday 2024-09-28 17:00]

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படுகிறது.



இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறேன் - அறிவித்தார் விக்கி!
[Saturday 2024-09-28 17:00]

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.



சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாது!
[Saturday 2024-09-28 17:00]

சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



குமார வெல்கம காலமானார்!
[Saturday 2024-09-28 17:00]

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். காலமாகும் போது அவருக்கு வயது 74 ஆகும்.



பாடசாலை நிகழ்வுகளுக்கு பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது! - பறந்தது உத்தரவு.
[Saturday 2024-09-28 17:00]

பாடசாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.



அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடிவு!
[Saturday 2024-09-28 17:00]

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தையில் விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அரலிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.



7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!
[Saturday 2024-09-28 17:00]

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



லெபனானில் இலங்கையர்கள் பாதுகாப்பான நிலையில்!
[Saturday 2024-09-28 17:00]

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.



முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக்குழு!
[Saturday 2024-09-28 17:00]

பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். இவ்வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இராணுவத்தினரால் வாழ்வாதாரம் பாதிப்பு!
[Saturday 2024-09-28 06:00]

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா