Untitled Document
September 30, 2024 [GMT]
ஜெனிவா செல்கிறது சிவில் சமூக குழு!
[Monday 2024-09-30 05:00]


இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அதற்கான ஆதரவைக்கோரி உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர் இவ்வாரம் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளனர்.

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அதற்கான ஆதரவைக்கோரி உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர் இவ்வாரம் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளனர்.

  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. அவ்வறிக்கைகளில் இலங்கை தொடர்பான ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கக்கூடியவகையில் அத்தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடந்த வியாழக்கிழமை (19) பேரவையில் (பக்க அறையில்) ஆராயப்பட்டது. இதில் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுடன் இலங்கையைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் 'இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பிலான முதல் வரைபு குறித்தும், அதனை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது.

இருப்பினும் அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட முதல் வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைபு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவுடன், அதனை வாக்கெடுப்பின்றி இணையனுசரணை வழங்கி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன்படுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது.

ஆகையினால் இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியப்பாடு அதிகம் காணப்படுவதனால், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு உறுப்புநாடுகளின் ஆதரவைக்கோரி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இவ்வாரம் இலங்கையின் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர். இதன்போது அவர்கள் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



சங்கு சின்னத்திலேயே போட்டி!
[Monday 2024-09-30 17:00]

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



ஈபிடிபி கொழும்பிலும் போட்டி!
[Monday 2024-09-30 17:00]

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். தெல்லிப்பளை - மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.



தனித்துப் போட்டியிடுவோம்- தோல்வியுற்றவர்களுக்கும் சீட் இல்லை!
[Monday 2024-09-30 17:00]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் முதலாவது குழு கட்டுப்பணம் செலுத்தியது!
[Monday 2024-09-30 17:00]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.



இன்று எரிபொருள் விலை குறையும்?
[Monday 2024-09-30 17:00]

மாதாந்த விலைத் திருத்தத்தின் போது, எரிபொருள் விலை இன்று இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன



இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!
[Monday 2024-09-30 17:00]

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



யாழ், கிளிநொச்சியில் அதிக மதுபான நிலையங்கள்!-ஜனாதிபதிக்கு கடிதம்.
[Monday 2024-09-30 17:00]

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.



கைக்குண்டுகள், வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!
[Monday 2024-09-30 17:00]

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



முன்னாள் எம்.பிக்களின் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
[Monday 2024-09-30 17:00]

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது.



விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Monday 2024-09-30 17:00]

விமல் வீரவங்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



ஆதிக்கப் போக்கில் தமிழரசு - இணைய மறுக்கிறது புளொட்!
[Monday 2024-09-30 05:00]

தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.



பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்!
[Monday 2024-09-30 05:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



முடக்க நிலையை நோக்கி ஐதேக - ஐமச கூட்டணி பேச்சு!
[Monday 2024-09-30 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது.



17 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Monday 2024-09-30 05:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார்.



ஈ-விசா" மோசடி குறித்து விரைவில் விசாரணை!
[Monday 2024-09-30 05:00]

சர்ச்சைக்குரிய "ஈ-விசா" மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்க உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, நிகழ்நிலை விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீள ஆரம்பித்துள்ளது.



50 வீத ஆசன ஒதுக்கீடு கோரும் பெண்கள் குழு!
[Monday 2024-09-30 05:00]

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு இவ்வாறு கூட்டாக அறிவித்தது.



முன்னாள் விஐபிகளுக்கான பாதுகாப்பு விலக்கம்!
[Monday 2024-09-30 05:00]

பிரமுகர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டது தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.



ஜேவிபி செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார் ரில்வின் சில்வா!
[Monday 2024-09-30 05:00]

நான் சாகும்வரை ஜே.வி.பி.காரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை புதியவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா.



ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது!
[Monday 2024-09-30 05:00]

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.



அனுரவுடன் பேச கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!
[Sunday 2024-09-29 18:00]

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா