Untitled Document
October 1, 2024 [GMT]
ஒற்றுமையாக போட்டியிட முயற்சி!- இந்தியத் தூதுவருக்கு வாக்குறுதி.
[Tuesday 2024-10-01 05:00]


தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

  

குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்துப் போட்டி!
[Tuesday 2024-10-01 05:00]

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.



ராஜபக்ஷர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்! - சவால் விடுகிறார் சாகர.
[Tuesday 2024-10-01 05:00]

எதிர்க்கட்சியில் இருக்கும் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசியலில் சற்று பின்னடைந்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



நள்ளிரவில் எரிபொருள் விலை குறைப்பு!
[Tuesday 2024-10-01 05:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.



பளையில் 104 கிலோ கஞ்சா சிக்கியது!
[Tuesday 2024-10-01 05:00]

கிளிநொச்சி -பளைப் பகுதியில் 104 கிலோ கிராம் கஞ்சாவை இராணுவ புலனாய்வு பிரிவினர், மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.



கிழக்கின் 6 பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள்!
[Tuesday 2024-10-01 05:00]

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனவே தமிழர்களின் விகிதாசார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு கரம் கூப்பி அழைக்கின்றோம் என ஈ.பி.ஆர். எல்.எப். கட்சியின் சிரேஸ் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல் விடுத்துள்ளார்.



அரியநேத்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொடுங்கள்!
[Tuesday 2024-10-01 05:00]

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்பொதுக்கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியபட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் ஜனநாயகபோராளிகள்கட்சியின் செயலாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.



லெபனான், சிரியாவுக்குச் செல்ல வேண்டாம்!
[Tuesday 2024-10-01 05:00]

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.



அனுரவின் தீர்மானத்தை இடைநிறுத்தியது ஆணைக்குழு!
[Tuesday 2024-10-01 05:00]

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.



ஆட்சி மாறியும் சூடு குறையவில்லை!
[Tuesday 2024-10-01 05:00]

ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. டி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.



சங்கு சின்னத்திலேயே போட்டி!
[Monday 2024-09-30 17:00]

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



ஈபிடிபி கொழும்பிலும் போட்டி!
[Monday 2024-09-30 17:00]

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். தெல்லிப்பளை - மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.



தனித்துப் போட்டியிடுவோம்- தோல்வியுற்றவர்களுக்கும் சீட் இல்லை!
[Monday 2024-09-30 17:00]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் முதலாவது குழு கட்டுப்பணம் செலுத்தியது!
[Monday 2024-09-30 17:00]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.



இன்று எரிபொருள் விலை குறையும்?
[Monday 2024-09-30 17:00]

மாதாந்த விலைத் திருத்தத்தின் போது, எரிபொருள் விலை இன்று இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன



இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!
[Monday 2024-09-30 17:00]

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



யாழ், கிளிநொச்சியில் அதிக மதுபான நிலையங்கள்!-ஜனாதிபதிக்கு கடிதம்.
[Monday 2024-09-30 17:00]

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.



கைக்குண்டுகள், வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!
[Monday 2024-09-30 17:00]

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



முன்னாள் எம்.பிக்களின் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
[Monday 2024-09-30 17:00]

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது.



விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Monday 2024-09-30 17:00]

விமல் வீரவங்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



ஆதிக்கப் போக்கில் தமிழரசு - இணைய மறுக்கிறது புளொட்!
[Monday 2024-09-30 05:00]

தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா