Untitled Document
October 5, 2024 [GMT]
தென்னிலங்கை தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலையாகும்!
[Saturday 2024-10-05 06:00]


ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

  

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்துள்ளமை தமிழ் அரசியற்பரப்பில் புதிய திருப்பம்.

கடும்போக்கு சிங்கள – பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தி தெற்கில் வெல்லக் கூடியவராக கணிக்கப்படும் பேரினவாதத்தின் முகவர் வென்றுவிடக் கூடாதென்ற அச்ச நிலையானது பிறிதொரு பேரினவாதத்தின் முகவரிற்கு வாக்களிப்பதற்கு மக்களை வழிநடத்தியிருப்பதும் வெள்ளிடைமலை.

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியத்தை மக்களின் இருப்புக்கானதாக மாற்றியமைப்பதற்கு உளச்சுத்தியோடு முனைந்து விடாத தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை மக்களின் வாழ்வியலில் இருந்து அகற்றி, கட்சிகளின் தேர்தல் கால கோசங்களாக மாற்றியமைத்துள்ளன. தேர்தலில் போட்டியிடுவதையே இலக்காகக் கொண்ட இவர்களின் இயலாமைகள், தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையினை தகர்த்தெறிவதிலும் மக்களின் உயிர்வாழ்தலுக்கு அவசியமற்றதொன்றாக தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதிலும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சிறிலங்கா அரச இயந்திரத்திற்கு பெருமளவு துணைபுரிந்துள்ளன.

புதியவற்றை உள்ளீர்த்து முற்போக்குக் கருத்தியலாய்ப் பரிணமிக்கட்டும் தமிழ்த் தேசியம் !

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும்.

தமிழ் அரசியலானது முன்நகர முடியாமைக்கு அகவயமான முற்போக்கு மாற்றங்களை காலத்திற்குக் காலம் மேற்கொள்ளத் தவறியமையும், எம்மிடையே நிலவும் சில போதாமைகளுமே காரணம். அவ்வாறிருக்கையில் மக்கள் மத்தியில் நிலவும் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை நோக்கி முன்வைக்கின்றோம்.

சமூக, பொருண்மிய, அரசியல், கல்வி, பண்பாடு, சூழலியல் தளங்களிலிருந்து தமிழ்த் தேசியத்தில் முற்போக்கான, ஆழமான, பரந்த பார்வை கொண்ட செயற்பாட்டாளர்களை, துறைசார் வல்லுனர்களை வேட்பாளர்களாக முன்நிறுத்த முன்வர வேண்டும்.

இதுவரை காலமும் இரண்டு தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் தேர்தல் அரசியலிற்கு ஓய்வு கொடுத்து மக்கள் அரசியற் தளத்தில் செயற்பட வேண்டும்.

40 - 50 சதவீதத்திற்குக் குறையாமல் இளைவர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம் முற்போக்கானதாக நிலைமாற்றம் கொள்வதற்கு பெண்கள், சிறுவர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரை பிரதிநிதித்துவம் செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பளித்தல் கட்டாயக் கடமையாகும்.

வேட்பாளர் தெரிவின் போது உணர்ச்சி நிலையிலிருந்து மட்டும் அணுகுபவர்கள் தவிர்க்கப்பட்டு, தமிழ்த் தேசியத்தை உணர்வுடன் கூடிய அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க கூடியவர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் தேர்தலில் தோற்றவர்களிற்கு வாய்ப்பளித்தல் மக்களாணைக்கு எதிரானதாகும். மேலும் கட்சி உறுப்பினர்கள் என்று பாராமல், கற்றறிந்த செயற்பாட்டாளர்களிற்கு வாய்ப்பளிப்பதற்கு முன்வர வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை அகவயமான முற்போக்கு மாற்றங்களை நோக்கித் தூண்டுவதும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலுமே உண்மையான மாற்றம் தமிழ்த் தேசியப் பரப்பில் தங்கியுள்ளது. இளையோருக்கான பிரதிநிதித்துவம் வழங்குவதில் தனியே வாக்குகளைத் திரட்டக் கூடியவர், கவர்ச்சிகர – பிரமுகர் அரசியல் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல் அல்லது கற்றறிந்தவர் என்று தமிழ்த் தேசிய விடுதலைக்கு அப்பால் சிந்திக்க கூடிய கொழும்பு மைய மேட்டுக்குடி அரசியற் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டவர்களை முன்னிறுத்துதல் என்பவவும் பழைய குருடி கதவைத் திற என்பதற்குச் சமனானது.

கிழக்கில் தமிழர் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் காத்திடுவோம் !

தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஏற்கனவே இல்லாமற் போய்விட்ட அம்பாறை மற்றும் இல்லாமற் போகக் கூடிய திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ்த் தேசியக் கட்சிகள் கட்சி வேறுபாடுகள் கடந்து போட்டித் தவிர்ப்பு, விட்டுக் கொடுத்தல் அல்லது இணைந்து போட்டியிடக் கூடிய பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தையாவது காத்திட முன்வர வேண்டுகின்றோம்.

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது. இதுபோன்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள் சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இது தாயகத்தில் நிலவும் உரிமைசார் போராட்டங்கள் ஒவ்வொன்றினையும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலிற்குட்பட்டு ஒரு நாடு – ஒரு தேசம் நீரோட்டத்தினுள் வலிந்து இழுத்துச் செல்லும் நுண் அரசியலாகும்.

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் போட்டியிடத் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முயல்வதென்பது தாயக நில ஒருமைப்பாட்டிற்கு அப்பாலானது என்பதோடு, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காகவேயன்றி வெறெதற்குமல்ல. இந்த முயற்சி தாயகத்திற்கு வெளியிலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைசார் நட்பு சக்திகளை நாம் இழப்பதற்கு வழிகோலும் என்பதனையும் எச்சரிக்கையுடன் பதிவு செய்கின்றோம்.

தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்!

தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் குடிமக்கள் அமைப்புக்கள் (Civil Society) மற்றும் சில அரசியல் கட்சிகளால் கூட்டாக இணைந்து நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுதல், கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மீள மேற்கொள்வதைத் தவிர்த்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே நிறுத்தப்பட்டார்.

தமிழ்ப் பொது வேட்பாளரிற்கு அவரை முன்நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கு அப்பால் பல குடிமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தேசத்திரட்சிக்காக பணியாற்றின என்பதோடு, மக்களும் தமிழர் தேசம் என்ற அடிப்படையிலே தங்கள் வாக்குகளை அளித்தார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது.

பொது வேட்பாளரிற்காக வழங்கப்படும் கட்சிச் சின்னம் அடுத்து வரும் சில தேர்தல்களிற்கு பயன்படுத்தக் கூடாது எனும் குடிமக்கள் அமைப்புக்களின் அறம் சார் நிபந்தனைகளை அரசியற்கட்சிகள் எவையும் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் சுயேட்சையாக வேட்பாளர் களமிறக்கப்பட்டார் என்பது அறியக்கூடியதாகவுள்ளது.

எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்பட்ட தரப்புக்களில் குடிமக்கள் சமூகங்களினதும் (Civil Society) ஏனைய கட்சிகளினதும் உடன்பாடுகள் ஏதுமின்றி தங்களிற்கிருந்த அறம்சார் கடப்பாட்டினை மீறி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் கூட்டணியொன்று தேர்தல் ஆணைக்குழுவில் பொது வேட்பாளரின் சின்னத்தினைக் கோரிப் பெற்றுள்ளது.

குடிமக்கள் சமூகங்களின் கூட்டிணைவிற்குள் (Civil Society) செயற்படும் சிலர் தங்கள் சிந்தனைகளோடு குடிமக்கள் சமூகத்தினரை நகர்த்திச் செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. தொடர்ந்தும் மக்களை மடையர்கள் என்றெண்ணிச் செயலாற்றும் இதுபோன்ற அறம் பிழைத்தவர்களை மக்கள் நாங்கள் தோலுரித்தல் அவசியமாகும்.

தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளதோடு, தொடர்ந்தும் மக்களையும் உழைத்த தரப்புக்களையும் ஏமாற்ற முயலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

இது போன்ற தமிழ்த் தேசியப் போலிகள் மக்களிடையே தமிழர் தேசத்திரட்சியின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தையும் தகர்த்தெறிந்து தென்னிலங்கைக் கட்சிகளை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் முயன்று கொண்டிருக்கின்றன.

சில தமிழ்த் தேசியப் போலிகள் அரச தலைவர் தேர்தலில் ஒரு பக்கம் தென்னிலங்கைக் கட்சிகளுடன் இருட்டு ஒப்பந்தமும், மறுபக்கம் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக பொது வேட்பாளர் தரப்புடன் இணைந்து கொண்டிருந்தமையினையும் யாரும் அறியாமலில்லை. அதற்காக உழைக்காத தரப்புக்கள் அரசியல் சூழ்ச்சிகளினால் இன்று பொது வேட்பாளரின் சின்னத்தைக் கைப்பற்றுவதனூடாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாணை பெற பகற்கனவு காணுகின்றன. பொது வேட்பாளரின் சின்னம் தற்பொழுது அவரை நிறுத்திய தரப்புக்களுடையதல்ல, வேறு கட்சிகளினுடையது என்பதனை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

புதிய அரசியற் பண்பாட்டினால் மேலேழட்டும் தமிழர் தேசம் !

தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம். தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று; அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலிற்கு துணை போன தமிழ் அரசியற் கட்சிகளே!

நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலினால் இதுவரைகாலமும் விளைந்ததொன்று.

அகவயமாக முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களிற்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம்என்று கூறப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழரசில் போட்டியிட பெண்கள் தயக்கம் - வேட்பாளர் பட்டியலை இறுதி முடியாமல் நெருக்கடி! Top News
[Saturday 2024-10-05 17:00]

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.



அரச புலனாய்வு பணிப்பாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் சுரேஸ் சாலே!
[Saturday 2024-10-05 17:00]

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட “சைக்கிள்” வேட்பாளர்கள் கையெழுத்து! Top News
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.



122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!
[Saturday 2024-10-05 17:00]

நேற்று வரை 122 சுயேச்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



நாங்களும் தனித்துப் போட்டி - வரிசை கட்டுகிறது ஈரோஸ்!
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



குத்துவிளக்கு கூட்டணியும் வவுனியாவில் ஆலோசனை!
[Saturday 2024-10-05 17:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி முதலான முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



யாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சலினால் யுவதி மரணம்!
[Saturday 2024-10-05 17:00]

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.



இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது!
[Saturday 2024-10-05 17:00]

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.



அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம்!
[Saturday 2024-10-05 16:00]

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



ஜெய்சங்கர் வருகையால் 50 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Saturday 2024-10-05 16:00]

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.



13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரினார் ஜெய்சங்கர்!
[Saturday 2024-10-05 06:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தம், மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் சீலாரத்ன தேரர்!
[Saturday 2024-10-05 06:00]

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுன தனது வேட்புமனுவினை வெள்ளிக்கிழமை தாக்கல்செய்துள்ளது.



ஹரிணி, ரணில், சஜித்தையும் சந்தித்தார் ஜெய்சங்கர்! Top News
[Saturday 2024-10-05 06:00]

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் நேற்று பிற்பகல் உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



சாள்சை மீண்டும் இழுத்து வந்தார் சுமந்திரன்! - வன்னியில் தமிழரசின் வங்குரோத்து நிலை.
[Saturday 2024-10-05 06:00]

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



நீர்வேலியில் மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம்! Top News
[Saturday 2024-10-05 06:00]

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.



மாமுனையில் விபத்து - இருவர் படுகாயம்!
[Saturday 2024-10-05 06:00]

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை இறக்கச் சந்தியில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
[Saturday 2024-10-05 06:00]

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



சுதந்திரக் கட்சியின் நிமல் அணி சிலிண்டரில் போட்டி!
[Saturday 2024-10-05 06:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினர் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்! Top News
[Friday 2024-10-04 16:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.



இந்தியாவுக்கே முதல் பயணம்!
[Friday 2024-10-04 16:00]

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா