Untitled Document
October 6, 2024 [GMT]
தேர்தலுக்கு முன் புதுடெல்லிக்கு பயணம்- ஜனாதிபதி அனுர திட்டம்!
[Sunday 2024-10-06 17:00]


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

  

இதன் பிரகாரம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் டெல்லிக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார். எனினும், இறுதி திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய விஜயம் குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இரு தரப்புகளுமே விஜயம் குறித்து எவ்விதமான தகவல்களையும் இன்றளவில் வெளிப்படுத்தவில்லை.

இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான சன் ஹையான் முன்னெடுத்திருந்தார்.

மேலும், பெய்ஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையில் தாம் ஆட்சியைக் கைப்பற்றினால் நெருக்கடியின்றி நாட்டை நிர்வகிப்பதற்கு சீனாவிடமிருந்து என்ன வகையான உதவிகளை வழங்க முடியும் என சீன அதிகாரிகளிடம் அநுரகுமார திசாநாயக்க கேட்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த துணை அமைச்சர் சன் ஹையான் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்துக்கு சென்று, அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சீனாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசேட முன்மொழிவுகளையும் உறுதிமொழிகளையும் கையளித்திருந்தார். உள்நாட்டு பொருளாதார ஊக்குவிப்பின் முதல் கட்டமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாத வகையில் சீனா இலங்கைக்கு உதவ முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இரு வருடங்களுக்குள் சீனாவில் இருந்து ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடியும் என துணை அமைச்சர் சன் ஹையான் அந்த சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றாலும், இலங்கையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக ஒரு கோடி வரை அதிகரிக்க முடியும். எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களது வேண்டுகோளுக்கிணங்க சீரான பொருளாதார முன்னேற்றம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வசீனா வழங்கும் என்ற உறுதிப்பாட்டை சீன துணை அமைச்சர் வழங்கியிருந்தார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் சீன தூதுவரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயங்கள் மற்றும் புதிய பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். இதற்கு அமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் சுற்றுலாப் பருவத்தில் 30 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்த சுற்றுலா பருவத்தில் அந்த தொகையை 60 இலட்சமாக உயர்த்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் அடுத்தகட்ட ஒத்துழைப்புகளுக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் சீன நட்பு குறித்து மேற்குலகம் உள்ளிட்ட பிற நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சீனா, இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தும் மிகவும் கவனமான பயணத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ளமை வெளிப்படுகின்றது. அதேபோல் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஏனைய ஜனாதிபதிகள் போல் அநுரகுமார திசாநாயக்க மிக விரைவில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

<
  
   Bookmark and Share Seithy.com



ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு அரசிடம் கோரிக்கை!
[Sunday 2024-10-06 17:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.



அரசியில் செயற்கை சாயம் கலந்த யாழ். பிரபல அரிசி ஆலை உரிமையாளருக்கு அபராதம்!
[Sunday 2024-10-06 17:00]

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



ஆசிரியரின் வீடு, மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் தீக்கிரை!
[Sunday 2024-10-06 17:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.



அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் மஹிந்த!
[Sunday 2024-10-06 17:00]

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.



விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி மரணம்!
[Sunday 2024-10-06 17:00]

வடமராட்சி - கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள்!
[Sunday 2024-10-06 17:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த அரசாங்கத்தினால் 07 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.



உருளைக்கிழங்கு, வெங்காயத்துக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!
[Sunday 2024-10-06 17:00]

கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட இறக்குமதி வரியை அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



இன்றும் கூடிய தமிழரசின் தேர்தல் நியமனக் குழு!
[Sunday 2024-10-06 17:00]

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்றும் கூடியது.



முட்டை விலை அதிகரிப்பு!
[Sunday 2024-10-06 17:00]

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.



காலநீடிப்பு தீர்மானம் புதனன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும்!
[Sunday 2024-10-06 04:00]

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.



குச்சவெளி விவசாயிகளை சொந்த நிலத்தில் பயிரிட விடாமல் தடுக்கும் பிக்கு!
[Sunday 2024-10-06 04:00]

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.



மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டியது மிகவும் அவசியம்!
[Sunday 2024-10-06 04:00]

நாட்டின் பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பினும் நலிவுற்ற நிலையும், நிச்சயமற்ற தன்மைகளும் நிலவுவதனால், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குவேண்டியது மிகவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் வலியுறுத்தியுள்ளார்.



தமிழர் தேசத்தில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!
[Sunday 2024-10-06 04:00]

தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இன்னொரு அத்திப்பட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கப்பூது கிராமம்! Top News
[Sunday 2024-10-06 04:00]

வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட மிக பழமையானது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும்.



மீண்டும் ரணிலே தலைமை!
[Sunday 2024-10-06 04:00]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.



தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!
[Sunday 2024-10-06 04:00]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும். பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராமண்ய பீட மகாநாயக்க தேரரிடம் குறிப்பிட்டார்.



காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலர்!
[Sunday 2024-10-06 04:00]

காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.



தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக இரண்டு ஆசனங்களை பறிகொடுக்கும் தமிழ் அரசு கட்சி!
[Sunday 2024-10-06 04:00]

தமிழரசுக்கட்சியானது ஒரு தேசியபட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்ப்படுத்தப்போவதாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.



பட்டாசு கொளுத்த தடை!
[Sunday 2024-10-06 04:00]

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தமிழரசில் போட்டியிட பெண்கள் தயக்கம் - வேட்பாளர் பட்டியலை இறுதி முடியாமல் நெருக்கடி! Top News
[Saturday 2024-10-05 17:00]

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா