Untitled Document
October 18, 2024 [GMT]
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!
[Friday 2024-10-18 16:00]

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய பொலிஸார் மூலம் கைப்பற்றப்பட்டது.

'டாக்சி அபே' எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹில்டன் ஹோட்டலின் வாகனம் நிறுத்துமிடத்தில், 'டபிள்யூபி சி 24-0430' என்ற எண் கொண்ட கறுப்பு நிற பி. எம்.டபிள்யூ. கார் சந்தேகத்திற்கிடமான முறையில் தரித்து நிற்பதாக கிடைத்த தகவலின்படி, கடந்த 10ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றிய காமினி அபேரத்ன, ஹில்டன் ஹோட்டலில் சில காலமாக தங்கியிருந்ததாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இந்த கார் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காமினி அபேரத்ன வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்த போதிலும், சுகயீனமுற்றிருப்பதால் பின்னர் வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான பயணத்தடையை பெற்றுக்கொள்ளவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



நீயுமா அனுர?
[Friday 2024-10-18 16:00]

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார்.



தியாகி பொன்.சிவகுமாரன் சிலை முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சுயேட்சைக் குழு! Top News
[Friday 2024-10-18 16:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழு 13 இன் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.



தம்பலகாமம் கைகலப்பில் காயமடைந்தவர் மரணம்!
[Friday 2024-10-18 16:00]

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.



மின்சாரக் கட்டணத்தை 45 வீதம் குறைக்க முடியும்!
[Friday 2024-10-18 16:00]

இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை என ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.



உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது!
[Friday 2024-10-18 16:00]

உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சர்வதேச நாணய நிதியத்துடன் ஏன் பேச்சு நடத்தவில்லை?
[Friday 2024-10-18 16:00]

“ஏன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிச்சுமையை குறைக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.



வன்னியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!
[Friday 2024-10-18 16:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்காக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



கட்டுப்பாட்டு விலையை தாண்டியது அரிசி! - செயற்கைத் தட்டுப்பாடு.
[Friday 2024-10-18 16:00]

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால், சந்தையில் நாட்டு அரிசியின் விலை அதிகரித்துள்ளது. நெல் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக, சங்கத்தின் தலைவர் ரஞ்சித் தெரிவித்தார்.



கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தால் பயணம் செய்ய 3 நாட்களுக்குத் தடை!
[Friday 2024-10-18 16:00]

கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.



விசாரணை அறிக்கை விளையாட்டுப் பொம்மை அல்ல!
[Friday 2024-10-18 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



வேட்பாளர்கள் செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு!
[Friday 2024-10-18 05:00]

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேற்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் 2023 இல 03 எனும் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 03ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட முடியுமான செலவு எல்லைகள் திர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



தமிழ் மக்கள் தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும்!
[Friday 2024-10-18 05:00]

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும்!
[Friday 2024-10-18 05:00]

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



தேசியப்பட்டியல் ஆசனம் கேட்கிறார் தமிதா!
[Friday 2024-10-18 05:00]

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகையும் அரகலய செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன, அக்கட்சியிடம் இருந்து தேசிய பட்டியல் ரீதியிலான இடத்தை கோரியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிடம் இருந்து ஒரு தேசிய பட்டியல் இடத்தை கோரியதாக அபேரத்ன கூறினார். எனது கோரிக்கைக்கு கட்சித் தலைமை இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



தபால் மூலம் வாக்களிக்க ஏழரை இலட்சம் பேர் விண்ணப்பம்!
[Friday 2024-10-18 05:00]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சங்கு கூட்டணிக்கு வியாழேந்திரன் ஆதரவு!
[Friday 2024-10-18 05:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்! - அங்கஜன் அறிக்கை.
[Friday 2024-10-18 05:00]

கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.



பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள்!
[Friday 2024-10-18 05:00]

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவித்துள்ளது.பெறப்பட்ட புகார்களில் 181 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 76 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!
[Friday 2024-10-18 05:00]

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.



முன்னணி 10 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!
[Thursday 2024-10-17 18:00]

தமிழருடைய ஆதரவோடு ஒற்றையாட்சி அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட்டதாக வரப்போகும் வரலாற்றுத் தவறைத் தடுக்க, வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் எனவும், அதுவே தமது இலக்கு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா