Untitled Document
October 23, 2024 [GMT]
அறுகம்பை அச்சுறுத்தல் - பொலிஸ் கூறுவது என்ன?
[Wednesday 2024-10-23 18:00]


இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் இன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் இன்று தெரிவித்துள்ளது.

  

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, சறுக்கல் உட்பட்ட பொழுதுபோக்கு செயற்பாடுகள் காரணமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் அறுகம் பே மற்றும் பொத்துவில் மிகவும் விருப்பமான விடுமுறை இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"அவற்றில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, ஏராளமான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம் விரிகுடாவிற்கு வருகை தந்துள்ளனர், இதன் விளைவாக அப்பகுதியில் ஒரு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்பகுதி தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சமீப காலங்களில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது, ”என்று அவர் கூறினார்.

பூர்வாங்க நடவடிக்கையாக பொலிஸார் ஏற்கனவே வீதித் தடைகளை அமைத்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வழமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF), கடற்படை, இராணுவம் மற்றும் அரச புலனாய்வு சேவைகள் (SIS) ஆகியவற்றின் ஈடுபாட்டுடன், அருகம் விரிகுடாவில் தற்போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை DIG தல்துவ உறுதிப்படுத்தினார்.

இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அறுகம்பே பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பயண ஆலோசனையை வழங்கியதை அடுத்து, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கடந்த வாரம் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் 'சினகோக்' (யூத வழிபாட்டுத் தலம்) ஒன்றை நிறுவியதை தெரியப்படுத்தினார்.

பெர்னாண்டோ, கடந்த வாரம் அருகம் விரிகுடாவில் ஹீப்ரு மொழியில் பலகைகள் கொண்ட பல ஹீப்ரு பதிவுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் தோன்றியதாக செய்திகள் பரவியதாக தனது எக்ஸ் இல் கூறினார்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலால் இஸ்ரேலியர்கள் மீது விரோதம் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகவே, “சினகொக்” பகுதியில் பொலிஸார் மற்றும் பிரதான வீதிகளில் STF படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

வழிபாட்டுத்தல படங்களைப் பகிர்ந்த சமூக ஆர்வலர், இது சுவர்கள் அல்லது கதவுகள் அல்லாத மின்விசிறிகள், தகரம் மற்றும் தாள் கூரையுடன் கூடிய கட்டிடம் எனவும் ஒரு மசூதியை அண்டிய பாதையில் அமைந்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், இரண்டு பொலிஸார் கட்டிடத்திற்குள் இருந்ததாகவும், ஒருவர் கண்காணிப்பு கோபுரத்தின் மீதும் இருப்பதாகவும், பலஸ்தீனத்தைப் பற்றி விசனப்படும் உள்ளூர்வாசிகள் அந்த பகுதியில் இஸ்ரேலின் இருப்பு குறித்து அதிருப்தியாக இருப்பதாகவும் கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



அறுகம்பையில் தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



ரஷ்யா, பிரித்தானியாவும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
[Wednesday 2024-10-23 18:00]

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பிரஜைகள் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இஸ்ரேலியர்களை வெளியேற உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.



ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2024-10-23 18:00]

அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.



சிறிரெலோ உதயராசாவின் வேட்புமனுவை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2024-10-23 18:00]

2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.



ரணிலின் விசாரணை அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!
[Wednesday 2024-10-23 18:00]

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டவை என்பதால் இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறும் வரை நாங்கள் மெளனிக்க போவதில்லை” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தபால்பெட்டி வேட்பாளர் மரணம்!
[Wednesday 2024-10-23 18:00]

நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் வேட்பாளரே உயிரிழந்துள்ளார்.



மானிப்பாயில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
[Wednesday 2024-10-23 18:00]

யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.



அரசாங்கம் கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது!
[Wednesday 2024-10-23 18:00]

அல்விஸ் அறிக்கையை ஏற்க முடியாது என்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த குழுவின் தலைவராக பதவி வகித்த நீதியரசர் (ஓய்வுநிலை) அல்விஸ் 2006 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களை இரத்து செய்ய முடியுமா ? எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.



யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கமாட்டேன்!
[Wednesday 2024-10-23 04:00]

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வன்னி வேட்பு மனு நிராகரிப்பு வழக்கு- இன்று தீர்ப்பு!
[Wednesday 2024-10-23 04:00]

வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) சார்பில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்த வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.



ஆணைக்குழுக்கள் குறித்து ரணில் இன்று விசேட அறிக்கை!
[Wednesday 2024-10-23 04:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.



ரஷ்யாவில் சிக்கியுள்ள இராணுவத்தினர் - கைவிரிக்கிறது அரசாங்கம்!
[Wednesday 2024-10-23 04:00]

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம். அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இணைந்துள்ளதால் இராஜதந்திர ரீதியில் இவ்விடயத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.



தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும்!
[Wednesday 2024-10-23 04:00]

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியிப் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.



சுவரொட்டி வழக்கு - வவுனியாவில் ஸ்ரீரங்கா பேட்டி!
[Wednesday 2024-10-23 04:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, நேற்று வவுனியாவில், ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.



நீதியரசர்கள் குழுவின் அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டதா?
[Wednesday 2024-10-23 04:00]

ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் விசாரணை அறிக்கையை அரசியல் நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டது என எவ்வாறு தெரிவிக்க முடியும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.



கட்டுநாயக்கவில் சிக்கிய ஐஸ், குஷ்!
[Wednesday 2024-10-23 04:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருளின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



மீனவர் பிரச்சினை - ஜனாதிபதியின் செயலாளருடன் இந்தியத் தூதுவர் பேச்சு!
[Wednesday 2024-10-23 04:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.



சீனத் தூதரக அதிகாரியும் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு!
[Wednesday 2024-10-23 04:00]

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.



அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது!
[Tuesday 2024-10-22 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா