Untitled Document
November 1, 2024 [GMT]
பொய் சொல்கிறார் பிரதமர்!
[Wednesday 2024-10-30 05:00]


அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

  

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஒரு குழுவை நியமிப்பதற்கும், அரச துறை மற்றும் சம்பள உயர்வுகளை மே 2024ல் மதிப்பீடு செய்வதற்கும் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் குழு, தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து அரச துறைப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒகஸ்ட் 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தேவையான நிதியை ஒதுக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திறைசேரி, வரவு செலவுத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் மற்றும் ஏனைய தேவையான பங்குதாரர்களின் அதிகாரிகளை இந்தக் குழு உள்ளடக்கியிருந்ததாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்திருந்த போதிலும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மாவீரர் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம்!
[Friday 2024-11-01 05:00]

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருந்தோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் தாக்குதல்களில் இருந்து எம்மையும் எம்பூமியையும் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில் பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.



தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!
[Friday 2024-11-01 05:00]

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



மாற்றம் நிகழுமா என்பது சந்தேகம்!
[Friday 2024-11-01 05:00]

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



200 டொலர் வரித்தள்ளுபடி வழங்கும் ஒன்ராறியோ அரசாங்கம்!
[Friday 2024-11-01 05:00]

ஒன்ராறியோ குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பொன்றை முதல்வர் டக் ஃபோர்டும் அமைச்சர் பெத்லென்ஃபால்வியும் அறிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஏறக்குறைய 12.5 மில்லியன் தகுதிபெறும் வரி செலுத்தியோருக்கும், 2.5 மில்லியன் குழந்தைகளுக்கும் 200 டொலர்கள் வரித் தள்ளுபடியைப் பெறுவர். இது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு சிறிய நிவாரணத்தை வழங்குகிறது.



சொகுசு வாகனங்களுக்கான எரிபொருள் விலைகளே குறைப்பு!
[Friday 2024-11-01 05:00]

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.



லொஹான் ரத்வத்த விளக்கமறியலில்!
[Friday 2024-11-01 05:00]

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி விட்டு பரப்புரையைத் தொடங்கிய வேட்பாளர்!
[Friday 2024-11-01 05:00]

வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்



மஹிந்த, சந்திரிகாவின் பாதுகாப்பை நீக்குவதற்கு ரணில் எதிர்ப்பு!
[Friday 2024-11-01 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.



100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது!
[Friday 2024-11-01 05:00]

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.



ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
[Friday 2024-11-01 05:00]

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளனர்.



பருத்தித்துறையில் கணவன், மனைவி கொலை!
[Wednesday 2024-10-30 16:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் வீட்டில் தலையில் கல்லினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
[Wednesday 2024-10-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது!
[Wednesday 2024-10-30 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தரதார உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது- திட்டமிட்டப்படி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்க வைக்க முனைகிறதா அனுர அரசு?
[Wednesday 2024-10-30 15:00]

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்



பிரதமர் ஹரிணி எங்கே அரசியலமைப்பை படித்தார்?
[Wednesday 2024-10-30 15:00]

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.



கனடாவில் குறி வைத்தவர் அமித் ஷா!
[Wednesday 2024-10-30 15:00]

சீக்கிய பிரிவினைவாதிகள் கனடாவில் குறி வைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று கனடாவின் வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மொரிசன் தெரிவித்துள்ளார்.



விமானங்களுக்கு அச்சுறுத்தல்- பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆராய்வு!
[Wednesday 2024-10-30 15:00]

இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபை நேற்று கலந்துரையாடியது.



ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!
[Wednesday 2024-10-30 15:00]

இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
[Wednesday 2024-10-30 15:00]

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மனு தள்ளுபடி!
[Wednesday 2024-10-30 15:00]

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா