Untitled Document
November 1, 2024 [GMT]
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்க வைக்க முனைகிறதா அனுர அரசு?
[Wednesday 2024-10-30 15:00]


பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

  

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்க விரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை,மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது - பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது.

பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க நீங்கள் மறக்க முடியாது.

இலங்கை இந்த சர்வதேசசட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோஇல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால் ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது.

பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள் துஸ்பிரயோகங்களையும் தண்;டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன. அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது,

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா?

  
   Bookmark and Share Seithy.com



மாவீரர் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம்!
[Friday 2024-11-01 05:00]

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருந்தோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் தாக்குதல்களில் இருந்து எம்மையும் எம்பூமியையும் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில் பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.



தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!
[Friday 2024-11-01 05:00]

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



மாற்றம் நிகழுமா என்பது சந்தேகம்!
[Friday 2024-11-01 05:00]

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



200 டொலர் வரித்தள்ளுபடி வழங்கும் ஒன்ராறியோ அரசாங்கம்!
[Friday 2024-11-01 05:00]

ஒன்ராறியோ குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பொன்றை முதல்வர் டக் ஃபோர்டும் அமைச்சர் பெத்லென்ஃபால்வியும் அறிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஏறக்குறைய 12.5 மில்லியன் தகுதிபெறும் வரி செலுத்தியோருக்கும், 2.5 மில்லியன் குழந்தைகளுக்கும் 200 டொலர்கள் வரித் தள்ளுபடியைப் பெறுவர். இது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு சிறிய நிவாரணத்தை வழங்குகிறது.



சொகுசு வாகனங்களுக்கான எரிபொருள் விலைகளே குறைப்பு!
[Friday 2024-11-01 05:00]

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.



லொஹான் ரத்வத்த விளக்கமறியலில்!
[Friday 2024-11-01 05:00]

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி விட்டு பரப்புரையைத் தொடங்கிய வேட்பாளர்!
[Friday 2024-11-01 05:00]

வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்



மஹிந்த, சந்திரிகாவின் பாதுகாப்பை நீக்குவதற்கு ரணில் எதிர்ப்பு!
[Friday 2024-11-01 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.



100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது!
[Friday 2024-11-01 05:00]

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.



ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
[Friday 2024-11-01 05:00]

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளனர்.



பருத்தித்துறையில் கணவன், மனைவி கொலை!
[Wednesday 2024-10-30 16:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் வீட்டில் தலையில் கல்லினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
[Wednesday 2024-10-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது!
[Wednesday 2024-10-30 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தரதார உயர்தர பரீட்சை பிற்போடப்படமாட்டாது- திட்டமிட்டப்படி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பிரதமர் ஹரிணி எங்கே அரசியலமைப்பை படித்தார்?
[Wednesday 2024-10-30 15:00]

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.



கனடாவில் குறி வைத்தவர் அமித் ஷா!
[Wednesday 2024-10-30 15:00]

சீக்கிய பிரிவினைவாதிகள் கனடாவில் குறி வைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று கனடாவின் வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மொரிசன் தெரிவித்துள்ளார்.



விமானங்களுக்கு அச்சுறுத்தல்- பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆராய்வு!
[Wednesday 2024-10-30 15:00]

இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபை நேற்று கலந்துரையாடியது.



ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!
[Wednesday 2024-10-30 15:00]

இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
[Wednesday 2024-10-30 15:00]

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான மனு தள்ளுபடி!
[Wednesday 2024-10-30 15:00]

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அறுகம்குடாவை வைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி!
[Wednesday 2024-10-30 05:00]

அறுகம்குடா சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா