Untitled Document
November 6, 2024 [GMT]
அமைச்சர் பதவிக்கு தமிழரசு தீவிர முயற்சி!
[Wednesday 2024-11-06 05:00]


அனுரகுமார தலைமையிலான அரசிற்கு வலிந்து சென்று ஆதரவை வழங்கி அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று  ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சுரேன் குருசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனுரகுமார தலைமையிலான அரசிற்கு வலிந்து சென்று ஆதரவை வழங்கி அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சுரேன் குருசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  

யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

முக்கியமான ஒரு தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவது தமிழ் மக்களின் வாக்ககளைப் பிரிப்பதற்காகவே என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு போட்டியிடும் பல தரப்பினரும. தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக தெரியவில்லை. தங்களுடைய பதவிகளைப் பெறுவதற்காகத் தான் என்பது தெளிவாகின்றது.

ஆகவே, தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக சிந்தித்து தமிழ்த் தேசியக் கொள்கையுடன் பயணிக்கும் வடக்கு கிழக்கு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்கிற ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.அதுதான் தமிழ் மக்களின் பலமான பிரதிநிதித்துவத்தையும் எதிர்பார்க்கிற மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்றார்.

தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலோடு தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு அதன் போர்வையிலே பயணிக்கின்றவர்களை அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

கடந்த ஐனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சியோடு சேர்ந்து வாக்கு கேட்டவர்கள் இப்போது தமக்கு வாக்களிப்பது தான் தமிழ் தேசியம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தெற்கில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தங்களுடைய கட்சியினருக்கு மாத்திரம் அமைச்சு பதவிகளை வழங்குவோம் என்று கூறி வருகின்ற சூழலில் தமிழ் தரப்பிலே தேசியம் பேசிக் கொண்டிருக்கும் கட்சிகள் தாங்கள் அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் பரிசீலிப்போம் சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறோம் என கூறுகின்றனர்.

அதுவும் வேண்டாம் என்று கூறுகின்ற அரசாங்கத்திடம் வலிந்து சென்று ஒரு பிச்சை கேட்பது போல அமைச்சுப் பதவிக்காக தங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே, தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது சுயேட்சைகள் மாத்திரமல்ல தேசியம் பேசுகிறவர்களும் தெற்கில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க கூடியவர்கள் பதவி கொடுக்க விட்டாலும் முழங்காலில் நின்று கூட இந்தப் பதவிகளை பரிசீலிக்கிறோம் எதிர்பார்க்கிறோம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று கூறுகின்றனர்.

தங்கள் பதவிகளுக்காக தேசியம் பேசி ஏமாற்றுபவர்களை நிராகரித்து ஒற்றுமையாக ஒரே கூட்டணியாக போட்டியிடும் எமது கூட்டணியை ஆதரித்து பலப்படுத்துங்கள் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சசிகலா ரவிராஜ் வாகனம் மீது தாக்குதல்!
[Wednesday 2024-11-06 05:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சாவகச்சேரிப் பிரதேசத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, அவரது வாகனம் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி செதம் அடைந்தது. தமிழரசுக்கட்சியினரே அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



யுத்தத்தால் அரசியல்வாதிகளே ஆதாயம் பெற்றனர்!
[Wednesday 2024-11-06 05:00]

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேர்தல் பிரசாரங்கள் 11ஆம் திகதியுடன் ஓயும்!
[Wednesday 2024-11-06 05:00]

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



கஜேந்திரகுமாருக்கு சவால் விடுகிறார் சுமந்திரன்!
[Wednesday 2024-11-06 05:00]

தேர்தல் பிரசார மேடைகளில் எம்.ஏ.சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.



விருப்பு வாக்கு சூட்சுமத்தை புரிந்து கொள்ளுங்கள்! - என்கிறார் மனோ
[Wednesday 2024-11-06 05:00]

இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை தேடி அலைகிறார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே தாம் இழந்த சிங்கள வாக்குகளை ஈடு செய்ய, தமிழ் விருப்பு வாக்குகளை பெற்று கரையேற தவியாய் தவிக்கிறார்கள். இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.



வவுனியா பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம்!
[Wednesday 2024-11-06 05:00]

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



பிரிந்து நிற்பதால் நாங்களும் தனித்துப் போட்டி! - ஈரோஸ் கூறும் காரணம்.
[Wednesday 2024-11-06 05:00]

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த காலங்களின் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந்த நிலையில்,தற்போது தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற நிலையில் மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.இதனாலேயே இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேரடியாக போட்டியிடுவதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க தலைவரும்,ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான முனியசாமி நாகரூபன் தெரிவித்தார்.



முன்னாள் பிரதியமைச்சருக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-11-06 05:00]

2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபையில் தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி சாந்த பிரேமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.



அமைச்சரவை நடைமுறை தெரியாமல் ரணிலுடன் முட்டுகிறார் ஹரிணி!
[Wednesday 2024-11-06 05:00]

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கும் நடைமுறை தெரியாமல் இருக்கும் பிரதமர் ஹரிணி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்படுவதில் எந்த பயனும் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.



தமிழரசின் காரைநகர் கிளை மாம்பழத்திற்கு ஆதரவு!
[Tuesday 2024-11-05 16:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளை, நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு 14இற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தமிழரசுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை!
[Tuesday 2024-11-05 16:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.



மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!
[Tuesday 2024-11-05 16:00]

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.



திருகோணமலையில் வைத்தியரின் மனைவி கொடூரமாக கொலை!
[Tuesday 2024-11-05 16:00]

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில், இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை கடவுச்சீட்டு 94 ஆவது இடத்தில்!
[Tuesday 2024-11-05 16:00]

உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது.



சந்திரிகாவை கொலை செய்ய சதித் திட்டம்!
[Tuesday 2024-11-05 16:00]

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



ஈஸ்டர் தாக்குதல் வழக்கு - பூஜித, ஹேமசிறியின் விடுதலையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
[Tuesday 2024-11-05 16:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துள்ளதுடன் விசாரணையைத் தொடரவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கவும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும்!
[Tuesday 2024-11-05 16:00]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என புதிய ஜனநாயக முன்னிணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.



அனுரவின் படத்துடன் போலி நாணயத்தாள் அச்சிட்டவர் கைது!
[Tuesday 2024-11-05 16:00]

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.



சம்பள விவகாரம்- மீண்டும் மீண்டும் அனுரவை சீண்டுகிறார் ரணில்!
[Tuesday 2024-11-05 16:00]

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள உயர்வை தமது அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார உடனடியாக நாட்டுக்கு அறிக்கை விட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



தமிழ் மக்கள் பலமான கூட்டணியை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்!
[Tuesday 2024-11-05 05:00]

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா