Untitled Document
November 17, 2024 [GMT]
தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கின்ற ஏனையவர்களோடும் சேர்ந்து பயணிக்கத் தயார்!
[Sunday 2024-11-17 17:00]


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

  

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதில் வரப்போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது வரப்போகின்ற முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும் இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டுக்கு இத்தனை வருடங்களாக தமிழ் மக்கள் ஆணை வழங்கி வந்திருக்கின்ற நிலையில் அந்த ஆணையை இனவாதம் என்று சொல்லி கொச்சைப்படுத்துகின்ற வகையில் ரில்வின் சில்வா பேசியுள்ளார்.

உண்மையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்ற நிலையில் அந்தத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இனவாத நிலைப்பாடாக கொச்சைப்படுத்தி இன்றைக்குத் தேர்தல் முறையில் உள்ள ஒரு சில முறைகளால் எண்ணிக்கையில் ஒரு சில ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற என்று சொல்கின்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஆபத்து என்பதை எமது மக்கள் உணர வேண்டும்.

அந்த வகையில்தான் தேர்தல் காலத்திலும் நாம் எமது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தோம். அதாவது இந்த அரசு தேர்தல் முடிந்த கையோடு 2015 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னோம்.

அந்த ஒற்றையாட்சி ஏக்கிய ராஜ்ஜியவை நிராகரித்து எங்களுடைய மக்களின் ஆணையைக் காட்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சொல்லியிருந்தோம்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வினை எட்டுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

அந்தச் செயற்பாடுகளோடு ஒத்துப்போவதற்குத் தயாராக இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் செயற்பட நாங்கள் தயாராகவும் இருக்கின்றோம். விசேடமாக ஒற்றையாட்சி அரசமைப்பின் ஏக்கிய ராஜ்ஜிய என்ற இடைக்கால அறிக்கையை வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகம் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமைதியான முறையிலும் ஐனநாயக முறையிலும் வெளிப்படுத்துவதற்கும் அதனைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் வெளிப்படுத்தி எங்களது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அந்த நிலைப்பாட்டோடு ஒன்றிணைந்து போவதற்கு இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் இணைந்து இந்த விடயங்களைக் கையாளுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த விடயத்தில் எம்மோடு இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு அறைகூவலும் விடுக்கின்றோம்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயத்தை தமிழ் மக்கள் நிராகரிப்பார்களாக இருந்தால் அதுவே அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதோடு தேசிய மக்கள் சக்தி அரசு ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி பாதையைக் கைவிட்டு சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தக்கூடிய புதிய மேடையொன்றை உருவாக்கும். அந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

ஏனென்றால், இன்றைக்கு இலங்கை அரசு சர்வதேச மட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை. ஆனால், இலங்கையில் இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாத வரை அந்த உதவிகள் கிடைக்காது. ஆகவே அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் அந்த அழுத்தங்களை சரியான வகையில் கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியத்தோடு தாங்கள் பயணிக்கின்றதாக சொல்லக்கூடிய ஏனையவர்களோடும் சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, நல்லாட்சி காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டுவரப் போவதாகவும் இந்த நேரத்தில் தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாள்வார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில்,

"அவர் கூறுகின்றதை போன்று இந்த அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற விடயமல்ல. இன்றைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

ஆகையினால் அந்த வரைபுக்கு எதிராக அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்பு முரணானது என்ற பலமான ஒரு செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபை தயாரிப்பதற்கும் அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப்போகின்றோம்.

அதற்குத் தமிழ் அரசுக் கட்சியாக இருக்கலாம் ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம். அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிறிதரன் தெரிவு!
[Sunday 2024-11-17 17:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



தமிழரசின் தேசியப் பட்டியல் சத்தியலிங்கத்துக்கு!
[Sunday 2024-11-17 17:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும்!
[Sunday 2024-11-17 17:00]

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.



சர்வஜன பலயவின் தேசியப்பட்டியல் -திலித் ஜயவீர தெரிவு!
[Sunday 2024-11-17 17:00]

சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கான பிரதிநிதியாக அதன் தலைவர் திலித் ஜயவீரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் எந்த ஆசனத்தையும் பெறத் தவறிய போதிலும், கட்சி ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்று, இந்தப் பரிந்துரையைச் செய்ய அனுமதித்தது.



பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை!
[Sunday 2024-11-17 17:00]

செவ்வாய்க்கிழமைநள்ளிரவு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.



பரீட்சை நிலையங்களுக்குள் அலைபேசிகளுக்கு தடை!
[Sunday 2024-11-17 17:00]

இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.



21 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு!
[Sunday 2024-11-17 17:00]

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், 21 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆவர். இதற்மைய அவர்களில் ஆககூடுதலாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் இருந்து 655,289 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.



கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்!
[Sunday 2024-11-17 17:00]

கள்ளிக்குளம் பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த அனர்த்தம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ஆசிரியைகளால் தாக்கப்பட்ட மாணவி மரணம்!
[Sunday 2024-11-17 16:00]

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.



உரத்தோடும் உறுதியோடும் தமிழ்த் தேசியப் பயணம் தொடரும்!
[Sunday 2024-11-17 05:00]

வலிமை மிகு வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.



இனி ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது!
[Sunday 2024-11-17 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.



புதிய சபாநாயகராக பிமல் ரத்நாயக்க?
[Sunday 2024-11-17 05:00]

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கேட்கிறார் நடராஜ்!
[Sunday 2024-11-17 05:00]

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்து உதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் அந்த கட்சியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



வடக்கு, கிழக்கில் ஏழரை இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை!
[Sunday 2024-11-17 05:00]

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை!
[Sunday 2024-11-17 05:00]

வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.



தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு?- தமிழரசின் முடிவு இன்று.
[Sunday 2024-11-17 05:00]

2024 பொதுத் தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான, குறித்த அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருமாறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை இலட்சம் வாக்குகளை இழந்த சஜித்!
[Sunday 2024-11-17 05:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.



196 எம்.பிக்களின் பெயர்களுடன் வெளியானது விசேட வர்த்தமானி!
[Sunday 2024-11-17 05:00]

10 ஆவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.



செலவுக்கணக்கு வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! - எச்சரிக்கிறது ஆணைக்குழு.
[Sunday 2024-11-17 05:00]

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஒற்றையாட்சிக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்!
[Saturday 2024-11-16 17:00]

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஈபிடிபி மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா