Untitled Document
November 20, 2024 [GMT]
இனி எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்!
[Wednesday 2024-11-20 05:00]


இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

  

நேற்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்களே ஆகும் இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று நூல் எழுச்சி வருவதே எங்களுடைய நோக்கமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் படு தோல்வி கண்ட வரலாறுகள் உண்டு 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1977 ஆம் ஆண்டு வரும் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்த வரலாறுகள் இருக்கின்றது.

அதேபோன்று 2020 ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்கள் 3/2 பெரும்பான்மைக்கு மேலாக ஆட்சி அமைத்த வரலாறு இருக்கின்றது எனவே எமக்கு இது பெரும் தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் ஒரு வாய்ப்பாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

எமது இலக்கை நோக்கி லட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் எம்மை ஆதரித்த எம்மை விமர்சித்த எம்மை அள்ளி நகையாடினோர் அனைவருக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் தோல்வியில் துவள்வது போன்ற வரலாறு எம் போன்ற போராளிகளுக்கு எப்போதும் இருந்தது இல்லை தோல்வியை வெற்றியாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.

வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது திருவோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வடகிழக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேசிய அமைப்பாளர் என்கின்ற ரீதியில் அனைத்து தமிழ் மக்களுக்கும் எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலே நாங்கள் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ் தேசியம் கெட்டுப் போகும் என்பதனை சிந்தித்து அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள் அதே போன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கரையான் அரிப்பது போன்று உள்ளுக்குள் அறுத்துக் கொண்டு செல்கின்றது.

அந்த வகையில் எங்களுடைய மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் எங்களின் எதிர்காலம் சூனியம் ஆகும் எந்த மாற்று கருத்தும் இல்லை.

எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.

ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.

இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.

வட மாகாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் ஜனாதிபதி தேர்தலிலே அதிகளவான வாக்குகள் கிடைக்கப் பெற்றது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கலந்து ஜனாதிபதி தேர்தலில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் சங்கு சின்னத்திற்கு கிடைக்கப்பெற்றது இந்த பாராளுமன்ற தேர்தலில் 15க்கு மேற்பட்ட வாக்குகள் தான் அண்ணளவாக கிடைக்கப்பெற்று இருந்தது.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது சங்கு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் சங்கு சின்னத்துக்கு எதிராக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிராக பிரச்சாரங்களில் முன்முருமாக ஈடுபட்டிருந்தார்.

அவ்வாறான பல காரணங்களினால் சங்கு சின்னத்திற்கு கிடைக்க வேண்டிய ஆதரவு கணிசமான அளவு குறைந்திருக்கின்றது. மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமில்ல நாடு பூராகவும் ஏற்பட்டு இருக்கின்றது. நான் முன்னர் கூறியது போன்று மூன்று ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட 50,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை அமைதியான முறையிலே மக்கள் இந்த தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருக்கின்றார்கள் எதுவிதமான பெரிய அளவிலான பிரச்சாரங்களோ அல்லது கூட்டங்களோ அல்லது வேறு கருத்தரங்குகளோ எதுவுமே செய்யாமல் அதிக அளவு செலவுகள் கூட செய்யாமல் தேசிய மக்கள் சக்திக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள்.

அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி இந்த தேர்தலிலே வாக்களித்து இருக்கின்றார்கள் அந்த மக்களுடைய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் வீண் விரயங்கள் இல்லாமல் போயிருக்கின்றது அதை நாட்டிற்கு நல்லது அந்த வகையில் இரண்டு தமிழ் அமைச்சர்களும் மந்திரி சபையிலே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் இது ஒரு வரவேற்கத்தக்க துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு மந்திரி சபையாக நான் பார்க்கின்றேன்.

இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை போகப்போகத்தான் புரிந்து கொள்ள முடியும். அவர் கூறியதில் உண்மை இருக்கின்றதே ஏனென்றால் வடக்கிலே 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு முதல் முறையாக ஒரு தேசிய கட்சிக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கிறது.

மாத்திரமில்லாமல் வடக்கிலே இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வைத்திருக்கின்றார்கள் அதே போன்று கிழக்கில் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் அவர்கள் முன்னிலை வகித்திருக்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை வைத்திருக்கின்றது.

அந்த வகையில் நான் நினைக்கின்றேன் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கின்றது என்பது அவர்களது ஒரு பெரிய வெற்றி அந்த வெற்றியை அவர்கள் வடகிழக்கு மக்களது இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதற்காக வெற்றியை பயன்படுத்துவார்களாகியிருந்தால் அது நன்றாக இருக்கும்.

நான் நினைக்கின்றேன் அவர் நிச்சயமாக நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க கூடிய ஒரு நபராகவோ அல்லது கட்சியாகவோ இருக்காது ஏனென்றால் அவர்களும் கடந்த காலங்களிலே 71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பாரிய ஆயுத கிளர்ச்சியை நடாத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து நான் நினைக்கின்றேன் 60,000 இற்கு மேற்பட்ட அவர்களுடைய போராளிகளையும் அவர்களுடைய தலைவர் ரோகன விஜயவீரர் அவர்களையும் இழந்தவர்கள் அவர்களை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பவர்கள் அதே போன்று வடகிழக்கிலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்ல என்னுடைய எண்ணம் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்து காட்சிகளும் அது கஜேந்திரகுமார் அவர்களுடைய கட்சியாக இருக்கலாம் விக்னேஸ்வரன் உடைய கட்சியாக இருக்கலாம் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களது உரிமையை பெறவேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலே தவிர தமிழர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது கடினமானது என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றதாம்! - பாராட்டுகிறார் சீனத் தூதுவர்.
[Wednesday 2024-11-20 05:00]

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.



ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்!
[Wednesday 2024-11-20 05:00]

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர் வாரத் தொடக்க நாளான கார்த்திகை 20.11.24 புதன்கிழமை முதல் 27.11.2024 புதன்கிழமை வரை தமது மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளையும், பூசை வழிபாடுகளையும் மேற்கொள்ளுமாறு, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கேட்டுக் கொள்கின்றது.



மன்னார் வைத்தியசாலையில் தாயும் சேயும் மரணம்!
[Wednesday 2024-11-20 05:00]

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.



தமிழ்த் தேசிய வாக்குகளை என்பிபி கைப்பற்றவில்லை!
[Wednesday 2024-11-20 05:00]

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செல்லுபடியான வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.



18 அமைச்சுக்களின் செயலாளர்களில் தமிழர் ஒருவர்- முஸ்லிம்களுக்கு இடமில்லை!
[Wednesday 2024-11-20 05:00]

புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.



ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம்!
[Wednesday 2024-11-20 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலிருந்து ஐந்து ஆசனங்களை வென்றதுடன் அதில் 4 ஆசனங்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.



தாழமுக்கம் வலுவடையும்!
[Wednesday 2024-11-20 05:00]

வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை அமுல்!
[Wednesday 2024-11-20 05:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2024 கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



வெளிவிவகார செயலாளர் பதவி- அருணிக்குப் பதிலாக இன்னொரு அருணி!
[Wednesday 2024-11-20 05:00]

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தனவுக்குப் பதிலாக அருணி ரணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு அனுபவமிக்க தொழில் வல்லுனரான, ரணராஜா இலங்கையின் இராஜதந்திர சேவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் கஜேந்திரகுமார் அஞ்சலி! Top News
[Tuesday 2024-11-19 17:00]

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.



எதிர்க்கட்சியுடன் அமரப்போகும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்!
[Tuesday 2024-11-19 17:00]

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆளும் கட்சியின் 43 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அமைச்சரவையை கண்காணிக்க 10 பேர் குழு!
[Tuesday 2024-11-19 17:00]

தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. பத்து பேரைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



அமைச்சரவைப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!
[Tuesday 2024-11-19 17:00]

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



பிள்ளையான் விசாரணைக்கு அழைப்பு!
[Tuesday 2024-11-19 17:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைத்துள்ளனர்.



சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க!
[Tuesday 2024-11-19 17:00]

ஆளுங் கட்சியின் பாராளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சபாநாயகராக சிரேஷ்ட உறுப்பினர் நிஹால் கலபத்தியை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது



ஜனாதிபதி அநுர மாயாஜால வித்தைக்காரர்!
[Tuesday 2024-11-19 17:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாக பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



தமிழரசின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திடம் இருந்து மீளப்பெற வேண்டும்!
[Tuesday 2024-11-19 17:00]

இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய புதிய அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தை சகலரும் அறிவீர்கள். இது தவிர புதிய அமைச்சரவையிலும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று எமது தமிழரசுக் கட்சியில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கடந்த 2024 ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.



முன்னாள் இராணுவச் சிப்பாயிடம் இருந்து மீட்கப்பட்டது புலிகளின் துப்பாக்கியா?
[Tuesday 2024-11-19 17:00]

கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!
[Tuesday 2024-11-19 17:00]

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளதை அடுத்து, ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற உத்தரவு!
[Tuesday 2024-11-19 05:00]

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா