Untitled Document
November 22, 2024 [GMT]
சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே!
[Thursday 2024-11-21 15:00]



தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

  

சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அதன் தேசியம், சுயநிர்ணய உரிமை,சமஸ்டி தீர்வு எனும் தமிழர் அரசியல் மையக்கருத்தியலை 2009ம் ஆண்டுக்குப் பின்னரும் சயனைட் குப்பி போல் நெஞ்சில் /மனதில் சுமந்த அரசியல் வாழ்வை தமதாக்கிக் கொண்டோருக்கு தேர்தல் முடிவுகள் முள்ளிவாய்க்கால் வலியை கொடுத்துள்ளது.

போர்க்காலத்தில் பல்வேறு விதமான காட்டிக் கொடுப்புகளினால் அடைந்த தோல்விகள், பின்னடைவுகள், வீழ்ச்சிகள் என்பவற்றை சந்தித்தபோதும் மாவீரர் வாரமும் தமிழ் தேசிய நாளும் புத்தெழுச்சியை தந்தன. சவால்களை வென்று பயணிக்கும் திசை காட்டின என்பதிலே நம்பிக்கை வைத்து இவ்வருட மாவீரர் வாரத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதுவே எம் தேச எழுச்சியை மீள நிலை நிறுத்தும் ஏற்றும் சுடர் உள்ளங்களை புதுப்பிக்கும்.

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. தற்போதைய ஜனாதிபதியும் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வேட மக்கள் விடுதலை முன்னணியினரும் நடைபெற்று முடிந்த இரு தேர்தல் பிரச்சார காலங்களிலும் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்து விட்டனர்.எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை.

நல்லாட்சி காலத்தில் நாடாளுமன்ற கட்சிகளின் பங்களிப்போடு (தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்போடும்) தயாரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியையும் பௌத்த முன்னுரிமை கொண்ட அரசியல் யாப்பு முன்மொழிவினை மக்கள் கருத்தறிவு தேர்வு மூலம் நடைமுறையாக்குவதே இவர்களின் நோக்கம். இவ் வரைவு தமிழர்களின் அரசியல் தீர்வு அபிலாசைகளை மூழ்கடித்துவிடும். இதுவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக அமைந்துவிடும்.

இதனை கலந்துரையாட நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் போது தற்போது 3/2 பெரும்பான்மை கொண்டுள்ள சிங்கள தேசத்தின் திசை காட்டி வடக்கு கிழக்கு இணைய விடாத வகையிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத வகையிலும் அரசியல் சட்டமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளே தற்போது தென்படுகின்றன.இதற்கு தமிழ் தேசமாக ஜனநாயக ரீதியில் எம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த திரட்சி கொள்ளல் வேண்டும்.

இந்நிலையில் தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை,சமஸ்டி தீர்வு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து வாக்கு கேட்டவர்களும் அதற்கு வாக்களித்தவர்களும், தேசிய தலைவருக்கு சிலை வைப்போம் என்றவர்களும் கடந்த கால போலி வேசங்களை களைந்து தமிழருக்கு எதிரான அரசியல் துரோக செயல்களை கைவிட்டு; தெற்கின் அரசியல் அரசியலுக்கு விலை போகாது தமிழர் அரசியல் சார்பு எடுக்க வேண்டும். அதற்கான மன மருந்துக் காலமும் மனம் திருந்தும் காலமே தற்போதைய மாவீரர் வாரம்.

அதேபோன்று எமது சமூகத்தின் இன்னும் ஒரு பிரிவினர் அரசியல் வழி தவறி தமிழர் தேசத்தின் எழுச்சி நாட்களை எல்லாம் (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் தியாக தினம், மாவீரர் வாரம்) வருடம் ஒரு தடவை வரும் தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை நாட்களாக்கினர். அதற்கு அப்பால் ஆன அரசியல் பயணத்தை தவிர்த்துக் கொண்டவர்களும் உண்டு. வேறு பலர் திருவிழா கால வியாபாரிகள் போல உழைத்தவர்கள் உண்டு. இதுவும் அரசியல் துரோகமே. இவர்களும் மாவீரர் காட்டிய மற்றும் பயணித்த திசை நோக்க வேண்டும்.

அது மட்டுமல்ல தமிழர் தேச எழுச்சி நாட்கள் எமக்கு முன் நிறுத்தம் அரசியல் வழிதடத்தை சரியான வகையில் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துத்துவதில் கடந்த 15 வருடங்களாக தோல்வி கண்டுள்ளோம் என்பதை அரசியல் களச்சூழ்நிலையும் தேர்தல் முடிவுகளும் எமக்கு உணர்த்துகின்றன. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு கூறல் வேண்டும்.

ஆயுத யுத்தத்தை காணாதவர்களும் ஈர்த்த வழி சுமக்காதவர்களின் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சுகபோக கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களும் தமிழர் வரலாற்றை படிக்கவும் அதனின்று கற்றுக் கொள்ள ஆர்வமற்றவர்களும் தெற்கின் மாற்றத்தின் கவர்ச்சிக்குள் அடித்த செல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் மாவீரர் வாரம் எம் அரசியலுக்குள் உள்ளிழுக்கும் எனவும் நம்புகின்றோம். அரசியலுக்குள் நின்று நிலைப்பதற்கான வேலைத்திட்டங்களை தொடரத்தவரின் அது மாவீரருக்கும் தேசத்திற்கும் இழைக்கும் அரசியல் குற்றமாகும்.

தேசிய மக்கள் சக்தியினர் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளையும் தமதாக்கியே 3/2 தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இவர்கள் சிங்கள பௌத்த கருத்தியலையும் பெரும்பான்மை தேசிய வாதத்தையும் உடைத்து வெளியேறப் போவதில்லை. காரணம் முந்தைய ஆட்சியாளர்களைப் போல தசாப்தங்களை தாண்டியும் ஆட்சி தன் கையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதுவே இவர்களின் அரசியல் எதிர்பார்ப்புமாகும். இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வு என்பது எட்டா கனியே. இனி எவரும் தீபாவளிக்கு, பொங்கலுக்கு, புதுவருசத்துக்கு தீர்வு கிடைக்கும் என எம்மை ஏமாற்றவும் முடியாது.

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் உயிர் தியாக நாள் மாவீரன் வாரம் போன்ற தமிழர் தேச எழுச்சி நாட்களை பொலிசாரின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் நீதிமன்ற தடை உத்தரவுகள் குண்டர்களின் தாக்குதல் போன்றவற்றிற்கு முகம் கொடுத்தும் எழுச்சியோடு நினைவு கூர்ந்தோம்.

அதேபோன்று இவ்வருடமும் மாவீரர் நாளை எழுச்சியின் நாளாக்குவோம். தமிழ் தேசத்தை திரட்சி கொள்ளச் செய்வோம். அரசியல் நீக்கம் செய்து கொண்டவர்கள் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கவும், அரசியல் துரோகப் பாதையில் பயணித்தவர்கள் தமிழர்கள் தாயக தேசிய தலைவரின் திசை காட்டி பக்கம் திரும்பவும்,போட்டி அரசியலை தவிர்த்து குறுகிய அரசியலை நலன்களை கைவிட்டு தேச அரசியலுக்காக மாவீரர் வாரத்தில் உறுதியேற்றல் வேண்டும். அத்கைய தீர்மானத்தோடு மாவீரர் நாளில் சுடரேற்றுவோம். அது தேசத்தின் சுடராக அமையட்டும்.அதுவே மாவீரருக்கு நாம் செய்யும் கௌரவமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழரசு நாடாளுமன்றக் குழு இந்தியத் தூதுவருடன் சந்திப்பு! Top News
[Friday 2024-11-22 04:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.



500 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின!
[Friday 2024-11-22 04:00]

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக சிலரை கைது செய்ய நடவடிக்கை!
[Friday 2024-11-22 04:00]

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றுமுன்தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்திய இழுவைப்படகுகளை தடை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்! Top News
[Friday 2024-11-22 04:00]

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



175 புது முகங்களுடன் நாடாளுமன்றம் பட்டபாடு!
[Friday 2024-11-22 04:00]

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பாராளுமன்றத்தில் 175 வரையிலான எம்.பி.க்கள் புது முகங்களாகவே உள்ளனர்.



வெடிபொருள் வெடித்து மீனவர்கள் காயம்!
[Friday 2024-11-22 04:00]

மன்னார் -சௌத்பார் கடற்பரப்பில் நேற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது, அது வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



முன்னைய அரசின் கொள்கையை பின்பற்றுவது மக்களின் ஆணைக்கு எதிரானது!
[Friday 2024-11-22 04:00]

கடந்த அரசாங்கத்தின் மக்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக கூறுவதானது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



அரசியலுக்கு விடை கொடுத்தார் விஜயதாச!
[Friday 2024-11-22 04:00]

முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



காசோலை மோசடி வழக்கில் டக்ளசுக்கு பிடியாணை!
[Friday 2024-11-22 04:00]

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.



ரவியின் ஆசனத்தால் சிதறும் சிலின்டர் கூட்டணி!
[Friday 2024-11-22 04:00]

இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட பயன்படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) எரிவாயு சின்ன வேட்பாளருக்கு தேசியப் பட்டியல் இடம் வழங்குவதற்கு தேர்தல் உடன்பாடு இருந்ததாக அதன் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கூற்றுக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.



இனவாதம், மதவாதம் தலையெடுக்க இடமளியேன்! - ஜனாதிபதி அறிவிப்பு.
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார்.



29 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு!
[Thursday 2024-11-21 16:00]

29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.



தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!
[Thursday 2024-11-21 16:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.



மல்லாவி விபத்தில் இரு இளைஞர்கள் பலி- ஒருவர் படுகாயம்!
[Thursday 2024-11-21 16:00]

முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



சபாநாயகராக அசோக சப்புமல் ரன்வல தெரிவு!
[Thursday 2024-11-21 16:00]

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சப்புமல் ரன்வல இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.



எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை ஆக்கிரமித்த அர்ச்சுனாவின் கோமாளிக் கூத்து!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது. இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.



ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இந்தியா துணைபோக கூடாது!
[Thursday 2024-11-21 16:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.



வடக்கில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லை!
[Thursday 2024-11-21 16:00]

நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்!
[Thursday 2024-11-21 16:00]

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.



வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகிறதாம்- நாமல் கவலை!
[Thursday 2024-11-21 04:00]

வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கவலை வெளியிட்டுள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா