Untitled Document
November 24, 2024 [GMT]
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான முன்மொழிவு- கனேடிய நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
[Sunday 2024-11-24 04:00]


இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் தமிழர்கள் 636 பேர் கையெழுத்திட்டிருக்கும் ஈ-5058 இலக்க முன்மொழிவையே பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென், கடந்த வாரம் (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் தமது பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் 75 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இனவழிப்புக்கு முகங்கொடுத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 'புலம்பெயர்ந்தோரின் வீடாக' கனடா திகழ்வதாகவும், இலங்கை அரசினால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி '1956 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்திலிருந்து 2009 மேமாதம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட 'இனவழிப்பு' யுத்தம் வரை தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன்கூடிய இனப்படுகொலை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கிறது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், சுதந்திர தமிழீழ உருவாக்கம் தொடர்பில் இலங்கைவாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை!
[Sunday 2024-11-24 04:00]

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச் செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த் தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டு விடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



மோடி- ரணில் உடன்பாட்டை அனுர நடைமுறைப்படுத்த வேண்டும்!
[Sunday 2024-11-24 04:00]

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.



மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது!
[Sunday 2024-11-24 04:00]

எமது மண்ணையும், மக்களையும் ஆழ நேசித்து, இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காக தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை, காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மன்னாரில் 2000 குடும்பங்கள் மழையினால் பாதிப்பு!
[Sunday 2024-11-24 04:00]

மன்னார் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



வீடுகளை விட்டு விலக மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்!
[Sunday 2024-11-24 04:00]

முன்னாள் எம்.பிக்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன



தேசியப் பட்டியல் நியமனம்- முரண்பாடு இல்லை!
[Sunday 2024-11-24 04:00]

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர், தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



வாகன இறக்குமதி- வருமானத்தை விட கையிருப்பு முக்கியம்!
[Sunday 2024-11-24 04:00]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.



பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த தடை!
[Sunday 2024-11-24 04:00]

உயர்தரப் பரீட்சையின் போது உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.



முல்லைத்தீவில் வயலுக்குச் சென்றவர் உயிரிழப்பு!
[Sunday 2024-11-24 04:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுக்காலை உயிரிழந்துள்ளார்.



துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!
[Saturday 2024-11-23 17:00]

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க ,நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக, மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை ஏடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.



சுண்டிக்குளத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! Top News
[Saturday 2024-11-23 17:00]

சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.



மூன்றாவது கட்ட கடனுக்கான தடை நீங்கியது!
[Saturday 2024-11-23 17:00]

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3ஆவது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளது.



அடுத்த வருடத் தொடக்கத்தில் உள்ளூராட்சித் தேர்தல்!
[Saturday 2024-11-23 17:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



யாழ். நகர வீதியில் முதலை!
[Saturday 2024-11-23 17:00]

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில், மூத்தநயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று இன்று உயிருடன் பிடிபட்டது. வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.



பஸ் விபத்தில் படுகாயம் அடைந்த யாழ். மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்!
[Saturday 2024-11-23 17:00]

கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் போது, பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்திருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



சிலிண்டரிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கேட்கிறது சுதந்திரக் கட்சி!
[Saturday 2024-11-23 17:00]

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.



யாழ். பெண் சட்டத்தரணி வீட்டில் திருட்டு - பணிப்பெண்ணும், மற்றொருவரும் கைது!
[Saturday 2024-11-23 17:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள்!
[Saturday 2024-11-23 17:00]

எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார்.



ஏழரைக் கோடி ரூபா கொள்ளையடித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் பதுங்கல்!
[Saturday 2024-11-23 17:00]

மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தடை செய்வோம் என்றவர்கள் முதல் அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு அனுமதி!
[Saturday 2024-11-23 05:00]

இனவாத அரசியலுக்கு இனி இடமளிக்கப் போவதில்லை என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1971இல் மாகாணசபை முறைமையூடாக வடக்கு , கிழக்கிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டது. எவ்வாறிருப்பினும் 53 ஆண்டுகளின் பின்னர் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு இனவாத அரசியலுக்கு இடமில்லை என நிலைப்பாடுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா