Untitled Document
November 24, 2024 [GMT]
12 ஆற்றுப் படுகைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
[Sunday 2024-11-24 18:00]


வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்

1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை

2. கலா ஓயா ஆற்றுப்படுகை

3. கனகராயன் ஆற்றுப்படுகை

4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை

5. மா ஓயா ஆற்றுப்படுகை

6. யான் ஓயா ஆற்றுப்படுகை

7. மகாவலி ஆற்றுப்படுகை

8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை

9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை

10. கலோயா ஆற்றுப்படுகை

11, ஹடோயா ஆற்றுப்படுகை

12. வில ஓயா ஆற்றுப்படுகை

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுநடத்த தயார்!
[Sunday 2024-11-24 18:00]

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்கள் கூட்டணி இனி தனித்துப் போட்டியிடாது!
[Sunday 2024-11-24 18:00]

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் விவகாரம்தான் மிகப் பெரிய காரணம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்தார்.



458 கிலோ ஐஸ், ஹெரோயினுடன் சிக்கிய இலங்கை படகு!
[Sunday 2024-11-24 18:00]

சுமார் 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார்124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளையும் ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகு, 5 சந்தேகநபர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



மாகாண சபை தேர்தலுக்கான சட்ட சிக்கலை தீர்ப்போம்!
[Sunday 2024-11-24 18:00]

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



ரெலோவின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறு விந்தன் கடிதம்!
[Sunday 2024-11-24 18:00]

ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம் கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.



நாளை உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
[Sunday 2024-11-24 18:00]

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.



பேராறு வான்கதவுகள் திறப்பு - வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை!
[Sunday 2024-11-24 18:00]

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.



கஞ்சாவுடன் சிக்கிய முதியவர்!
[Sunday 2024-11-24 18:00]

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த வருடம் மின்கட்டண திருத்தம் இல்லை!
[Sunday 2024-11-24 17:00]

இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைமைக்கு காரணம் என ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.



இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான முன்மொழிவு- கனேடிய நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
[Sunday 2024-11-24 04:00]

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை!
[Sunday 2024-11-24 04:00]

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச் செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த் தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டு விடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



மோடி- ரணில் உடன்பாட்டை அனுர நடைமுறைப்படுத்த வேண்டும்!
[Sunday 2024-11-24 04:00]

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.



மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது!
[Sunday 2024-11-24 04:00]

எமது மண்ணையும், மக்களையும் ஆழ நேசித்து, இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காக தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை, காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மன்னாரில் 2000 குடும்பங்கள் மழையினால் பாதிப்பு!
[Sunday 2024-11-24 04:00]

மன்னார் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



வீடுகளை விட்டு விலக மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்!
[Sunday 2024-11-24 04:00]

முன்னாள் எம்.பிக்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன



தேசியப் பட்டியல் நியமனம்- முரண்பாடு இல்லை!
[Sunday 2024-11-24 04:00]

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர், தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



வாகன இறக்குமதி- வருமானத்தை விட கையிருப்பு முக்கியம்!
[Sunday 2024-11-24 04:00]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.



பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த தடை!
[Sunday 2024-11-24 04:00]

உயர்தரப் பரீட்சையின் போது உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.



முல்லைத்தீவில் வயலுக்குச் சென்றவர் உயிரிழப்பு!
[Sunday 2024-11-24 04:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுக்காலை உயிரிழந்துள்ளார்.



துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!
[Saturday 2024-11-23 17:00]

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க ,நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக, மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை ஏடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா