Untitled Document
November 25, 2024 [GMT]
தாழமுக்கம் மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில்!
[Monday 2024-11-25 07:00]


தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  

இன்று அதிகாலை 02.30 மணியளவில், இந்த அமைப்பு மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் தென்கிழக்கில் நிலைகொண்டுள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் பயணிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகங்களுடன் கனமாக இருக்கலாம். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் வடமேல் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 35-45 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



வடக்கு, கிழக்கை நோக்கி நகரப் போகும் புயல்!
[Monday 2024-11-25 07:00]

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.



திருகோணமலை மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு! Top News
[Monday 2024-11-25 07:00]

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர்- ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.



புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டுமாம்!
[Monday 2024-11-25 07:00]

உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.



பொருளாதார மீட்சியை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்!
[Monday 2024-11-25 07:00]

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். நாட்டின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



தீவகத்தில் மாவீரர் நினைவேந்தல்! Top News
[Monday 2024-11-25 07:00]

யாழ் - தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நினைவேந்தப்பட்டனர். மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய நேற்று யாழ் தீவகம் வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத் தூவியில் மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர்



வெள்ள நீரை வெளியேற்றக் கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்!
[Monday 2024-11-25 07:00]

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.



8 மில்லியன் ரூபா பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது!
[Monday 2024-11-25 07:00]

8 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க திமிங்கல வாந்தியை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்கள் பொலிஸ் சுற்றிவளைப்பின் போது அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கிலோகிராம் அம்பர்கிரிஸ் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இது திமிங்கலங்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த பொருளாகும்.



தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுநடத்த தயார்!
[Sunday 2024-11-24 18:00]

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்கள் கூட்டணி இனி தனித்துப் போட்டியிடாது!
[Sunday 2024-11-24 18:00]

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் விவகாரம்தான் மிகப் பெரிய காரணம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்தார்.



458 கிலோ ஐஸ், ஹெரோயினுடன் சிக்கிய இலங்கை படகு!
[Sunday 2024-11-24 18:00]

சுமார் 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார்124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளையும் ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகு, 5 சந்தேகநபர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



மாகாண சபை தேர்தலுக்கான சட்ட சிக்கலை தீர்ப்போம்!
[Sunday 2024-11-24 18:00]

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



ரெலோவின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறு விந்தன் கடிதம்!
[Sunday 2024-11-24 18:00]

ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம் கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.



நாளை உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
[Sunday 2024-11-24 18:00]

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.



பேராறு வான்கதவுகள் திறப்பு - வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை!
[Sunday 2024-11-24 18:00]

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.



12 ஆற்றுப் படுகைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
[Sunday 2024-11-24 18:00]

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கஞ்சாவுடன் சிக்கிய முதியவர்!
[Sunday 2024-11-24 18:00]

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த வருடம் மின்கட்டண திருத்தம் இல்லை!
[Sunday 2024-11-24 17:00]

இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைமைக்கு காரணம் என ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.



இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான முன்மொழிவு- கனேடிய நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
[Sunday 2024-11-24 04:00]

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை!
[Sunday 2024-11-24 04:00]

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச் செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த் தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டு விடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



மோடி- ரணில் உடன்பாட்டை அனுர நடைமுறைப்படுத்த வேண்டும்!
[Sunday 2024-11-24 04:00]

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா