Untitled Document
November 26, 2024 [GMT]
தேசியப் பட்டியல் ஆசனம் தராவிட்டால் உயிரை மாய்ப்பேன்!
[Tuesday 2024-11-26 16:00]


 தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.

  

“நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றேன். எனவே, என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிக்க வேண்டும். நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன், அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். என்னை சபைக்கு நியமிக்காவிட்டால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” என அமரசேன ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் மூலம் தங்களை நியமிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருவதால், கட்சித் தலைவர் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளார்.

கட்சித் தலைவரின் வாக்குறுதியின்படி தனக்கும் தேசியப் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் தெரிவித்துள்ளார்.

“கண்டியில் இருந்து தேர்தலில் என்னை போட்டியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன், கட்சித் தலைமை என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பதாக உறுதியளித்தது. எனவே, தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவதற்கு நான் தகுதியானவன்” என சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



உருவாகிறது பெங்கால் புயல்! - எதிர்பார்க்கப்பட்டதை விட ஆபத்து அதிகம்.
[Tuesday 2024-11-26 16:00]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும். இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும் என யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்தநாள்! Top News
[Tuesday 2024-11-26 16:00]

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் வல்வெட்டிதுறையில் உள்ள அவரது இல்லம் அமைந்திருந்த இடத்தில் இன்று வெகு விமர்சையாக சிவாஜிலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.



போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை!
[Tuesday 2024-11-26 16:00]

உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய வவுனியா மாணவன்!
[Tuesday 2024-11-26 16:00]

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.



பாதுக்கவில் 86 கிலோ போதைப் பொருட்கள் சிக்கின!
[Tuesday 2024-11-26 16:00]

பாதுக்க-வட்டரெக்க பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 57 கிலோ ஐஸ் போதைப்பொருளும் 29 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை மற்றும் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை!
[Tuesday 2024-11-26 16:00]

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்க பிடியாணை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மட்டக்களப்பில் ஒருவரை வெள்ளம் இழுத்துச் சென்றது!
[Tuesday 2024-11-26 16:00]

மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளார். வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் நிலையில்; அதனை கடந்து செல்ல முற்பட்ட போதே குறித்த நபரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்



யாழ். வந்த பேருந்து விபத்து- அதிர்ச்சியில் பெண் மரணம்!
[Tuesday 2024-11-26 16:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த பேரூந்து ஒன்று மதவாச்சி, பூனாவ பகுதியில் வீதியை விட்டு விலகியதால் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.



உடுப்பிட்டியிலும் குடிமனைகளுக்குள் புகுந்த முதலை!
[Tuesday 2024-11-26 16:00]

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் குடிமனைப் பகுதிக்குள் நுழைந்த முதலை ஒன்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கடும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் உடுப்பிட்டி 15ஆம் கட்டைப் பகுதியில் நடமாடிய முதலையை பொதுமக்கள் பிடித்துள்ளனர்.



வடக்கு, கிழக்கை அச்சுறுத்தும் புயல்! - இப்போதைய நிலை என்ன?
[Tuesday 2024-11-26 04:00]

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு மற்றும் பாதிப்புகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபராஜா நேற்றிரவு வெளியிட்டுள்ள பதிவு-



வாகனம் மீது சாய்ந்தது மரம்!
[Tuesday 2024-11-26 04:00]

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.



பிரான்ஸ் சென்ற இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பு! Top News
[Tuesday 2024-11-26 04:00]

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.



மன்னிப்புக் கோரினார் அர்ச்சுனா!
[Tuesday 2024-11-26 04:00]

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.



உயர்தரப் பரீட்சைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!
[Tuesday 2024-11-26 04:00]

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.



வட்டுவாகல் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!
[Tuesday 2024-11-26 04:00]

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்கின்றனர். விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.



சீன கம்யூனிஸ்ட் கட்சி உயர்மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!
[Tuesday 2024-11-26 04:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனத் தூதுக்குழு நேற்றுஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது.



பஸ் மீது கல்வீச்சு!
[Tuesday 2024-11-26 04:00]

பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



புலமைப்பரிசில் பரீட்சை குறித்த கல்வி அமைச்சின் நிலைப்பாடு!
[Tuesday 2024-11-26 04:00]

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



பிடியாணையில் இருந்து தப்பினார் டக்ளஸ்!
[Tuesday 2024-11-26 04:00]

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பிடிவிறாந்தில் இருந்து விடுவிக்கப்பட்டு வழக்கு ஜனாதிபதி மாதம் பிற்போடப்பட்டுள்ளது.



வடக்கு, கிழக்கை நோக்கி நகரப் போகும் புயல்!
[Monday 2024-11-25 07:00]

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா