Untitled Document
November 27, 2024 [GMT]
பெங்கால் புயலால் 30 ஆம் திகதி வரை மழை கொட்டும்!
[Wednesday 2024-11-27 05:00]



வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக  மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

  

இது இன்று காலை புயலாக (Fengal) மாற்றம் பெறும். இது தற்போது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கன மழை 30ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

அம்பாறை மாவட்டத்திற்கு இன்று முதல் மழை படிப்படியாக குறைவடையும். வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மிகக் கனமழை தொடரும்.

வடக்கு மாகாணத்தின் முத்தையன் கட்டு, வவுனிக்குளம் உட்பட்ட மிகப்பெரிய குளங்கள் அனைத்தும் வான் பாயத் தொடங்கியுள்ளன. இரணைமடுவின் வான் கதவுகளும் திறக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்திலும் உன்னிச்சை உட்பட்ட பெரிய குளங்கள் வான் முந்தெனியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை தொடர்ச்சியாக மிகக் கன மழை கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே....

புயல் எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. அதனால் கனமழையும் நீடிக்கும்.

1. மிகக் கனமழை கிடைத்துள்ளது. தொடர்ந்தும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. புயலின் நகரும் வேகம் மிகவும் மந்தமாக காணப்படுகின்றது.

3. அனேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து குளங்களும் வான் பாயத் தொடங்கியுள்ளன.

4. கடல் அலைகளின் உயரம் அதிகரித்து உள்ளது. பல பிரதேசங்களில் வெள்ளநீர் கடலுக்கு செல்ல முடியாதவாறு கடல் மட்டம் உயர்வாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உறவுகளே...

தொடர்ச்சியாக அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் படி செயற்பட்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வோம்.

- நாகமுத்து பிரதீபராஜா -

  
   Bookmark and Share Seithy.com



இன்று மாவீரர் நாள் ! - மோசமான காலநிலைக்கும் மத்தியில் தயார் நிலையில் துயிலும் இல்லங்கள்.
[Wednesday 2024-11-27 05:00]

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களின் இன்று மாலை சுடர் ஏற்றுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். மோசமான காலநிலைக்கும் மத்தியில் துயிலுமில்லங்களில் அதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



உழவு இயந்திரத்துடன் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது!
[Wednesday 2024-11-27 05:00]

அம்பாறை - காரைதீவு பகுதியில் மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.



துயிலுமில்லத்திற்கு படகுகளில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள்!
[Wednesday 2024-11-27 05:00]

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்திற்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தால் தடைப்பட்டுள்ளன. இதனால் படகுகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! Top News
[Wednesday 2024-11-27 05:00]

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் யாழ். நகரம், நல்லூர், திருநெல்வேலி பகுதிகளில் பல இடங்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.



இரணைமடுக்குளம் திறக்கப்பட்டது! - வெள்ள ஆபத்து அதிகரிப்பு.
[Wednesday 2024-11-27 05:00]

இரணைமடு குளத்தின் 2 கதவு 1 அடியும் 2 கதவு 1/2 அடியும் நேற்றிரவு திறக்கப்பட்டுள்ளன. நீர் மட்டம் நேற்றிரவு 11 மணியளவில் 27 அடியை எட்டியது.நீர்மட்டம் அதிகரிக்கும் போது மேலும் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளிநொச்சியில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. மாங்குளம் நகரப்பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.



15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்கள் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 05:00]

சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் உள்ளனர். 6 வீடுகள் இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.



கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் அவதி!
[Wednesday 2024-11-27 05:00]

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜப்பானின் நரிட்டா, டுபாய் மற்றும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த மூன்று விமானங்களும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



கல்முனை வைத்தியசாலைக்குள் வெள்ளம்!- உதவிக்கு வர அழைப்பு.
[Wednesday 2024-11-27 05:00]

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குள் (AMH) வெள்ளம் புகுந்துள்ளது. பொதுப்பணியாளர்கள் உதவிக்கு வருமாறு சமூக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



பரீட்சைகள் 3 நாட்கள் பிற்போடப்பட்டன!
[Wednesday 2024-11-27 05:00]

நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன. அவ்வாறு பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள், அடுத்தமாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.



உருவாகிறது பெங்கால் புயல்! - எதிர்பார்க்கப்பட்டதை விட ஆபத்து அதிகம்.
[Tuesday 2024-11-26 16:00]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும். இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும் என யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்தநாள்! Top News
[Tuesday 2024-11-26 16:00]

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் வல்வெட்டிதுறையில் உள்ள அவரது இல்லம் அமைந்திருந்த இடத்தில் இன்று வெகு விமர்சையாக சிவாஜிலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.



போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை!
[Tuesday 2024-11-26 16:00]

உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய வவுனியா மாணவன்!
[Tuesday 2024-11-26 16:00]

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.



பாதுக்கவில் 86 கிலோ போதைப் பொருட்கள் சிக்கின!
[Tuesday 2024-11-26 16:00]

பாதுக்க-வட்டரெக்க பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 57 கிலோ ஐஸ் போதைப்பொருளும் 29 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை மற்றும் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



தேசியப் பட்டியல் ஆசனம் தராவிட்டால் உயிரை மாய்ப்பேன்!
[Tuesday 2024-11-26 16:00]

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.



அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை!
[Tuesday 2024-11-26 16:00]

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்க பிடியாணை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மட்டக்களப்பில் ஒருவரை வெள்ளம் இழுத்துச் சென்றது!
[Tuesday 2024-11-26 16:00]

மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளார். வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் நிலையில்; அதனை கடந்து செல்ல முற்பட்ட போதே குறித்த நபரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்



யாழ். வந்த பேருந்து விபத்து- அதிர்ச்சியில் பெண் மரணம்!
[Tuesday 2024-11-26 16:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த பேரூந்து ஒன்று மதவாச்சி, பூனாவ பகுதியில் வீதியை விட்டு விலகியதால் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.



உடுப்பிட்டியிலும் குடிமனைகளுக்குள் புகுந்த முதலை!
[Tuesday 2024-11-26 16:00]

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் குடிமனைப் பகுதிக்குள் நுழைந்த முதலை ஒன்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கடும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் உடுப்பிட்டி 15ஆம் கட்டைப் பகுதியில் நடமாடிய முதலையை பொதுமக்கள் பிடித்துள்ளனர்.



வடக்கு, கிழக்கை அச்சுறுத்தும் புயல்! - இப்போதைய நிலை என்ன?
[Tuesday 2024-11-26 04:00]

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு மற்றும் பாதிப்புகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபராஜா நேற்றிரவு வெளியிட்டுள்ள பதிவு-


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா