Untitled Document
November 28, 2024 [GMT]
ஏ-9 வீதி போக்குவரத்து தடைப்பட்டது!
[Wednesday 2024-11-27 17:00]


சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது.
வவுனியா,  நொச்சிமோட்டை  மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள்  போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com



கொட்டும் மழைக்கு மத்தியில் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி! Top News
[Wednesday 2024-11-27 19:00]

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.



மோசமான வானிலையால் 6 பேர் பலி, இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 17:00]

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



யாழ். வெள்ளத்தினால் 30 ஆயிரம் பேர் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 17:00]

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பாதுகாப்பு நிலையங்களில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 2,883 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



விமானப் பயணியின் கைப்பையை திருடிய கனடா கணக்காளர் கைது!
[Wednesday 2024-11-27 17:00]

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.



உயர்தரப்பரீட்சை குறித்து 29ஆம் திகதியே தீர்மானம்!
[Wednesday 2024-11-27 17:00]

கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.



அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு!
[Wednesday 2024-11-27 17:00]

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.



வெள்ளத்துக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி! Top News
[Wednesday 2024-11-27 17:00]

மாவீரர் தினத்தை முன்னிட்டு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.



பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்!
[Wednesday 2024-11-27 17:00]

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று காலை பாம்பு கடித்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான 20 வயதுடைய குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகினார். நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதே அவர் மரணமடைந்துள்ளார்.



இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
[Wednesday 2024-11-27 16:00]

மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.



பெங்கால் புயலால் 30 ஆம் திகதி வரை மழை கொட்டும்!
[Wednesday 2024-11-27 05:00]

வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.



இன்று மாவீரர் நாள் ! - மோசமான காலநிலைக்கும் மத்தியில் தயார் நிலையில் துயிலும் இல்லங்கள்.
[Wednesday 2024-11-27 05:00]

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களின் இன்று மாலை சுடர் ஏற்றுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். மோசமான காலநிலைக்கும் மத்தியில் துயிலுமில்லங்களில் அதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



உழவு இயந்திரத்துடன் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது!
[Wednesday 2024-11-27 05:00]

அம்பாறை - காரைதீவு பகுதியில் மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.



துயிலுமில்லத்திற்கு படகுகளில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள்!
[Wednesday 2024-11-27 05:00]

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்திற்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தால் தடைப்பட்டுள்ளன. இதனால் படகுகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! Top News
[Wednesday 2024-11-27 05:00]

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் யாழ். நகரம், நல்லூர், திருநெல்வேலி பகுதிகளில் பல இடங்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.



இரணைமடுக்குளம் திறக்கப்பட்டது! - வெள்ள ஆபத்து அதிகரிப்பு.
[Wednesday 2024-11-27 05:00]

இரணைமடு குளத்தின் 2 கதவு 1 அடியும் 2 கதவு 1/2 அடியும் நேற்றிரவு திறக்கப்பட்டுள்ளன. நீர் மட்டம் நேற்றிரவு 11 மணியளவில் 27 அடியை எட்டியது.நீர்மட்டம் அதிகரிக்கும் போது மேலும் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளிநொச்சியில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. மாங்குளம் நகரப்பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.



15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்கள் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 05:00]

சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் உள்ளனர். 6 வீடுகள் இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.



கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் அவதி!
[Wednesday 2024-11-27 05:00]

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜப்பானின் நரிட்டா, டுபாய் மற்றும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த மூன்று விமானங்களும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



கல்முனை வைத்தியசாலைக்குள் வெள்ளம்!- உதவிக்கு வர அழைப்பு.
[Wednesday 2024-11-27 05:00]

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குள் (AMH) வெள்ளம் புகுந்துள்ளது. பொதுப்பணியாளர்கள் உதவிக்கு வருமாறு சமூக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



பரீட்சைகள் 3 நாட்கள் பிற்போடப்பட்டன!
[Wednesday 2024-11-27 05:00]

நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன. அவ்வாறு பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள், அடுத்தமாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.



உருவாகிறது பெங்கால் புயல்! - எதிர்பார்க்கப்பட்டதை விட ஆபத்து அதிகம்.
[Tuesday 2024-11-26 16:00]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும். இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும் என யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா