Untitled Document
November 28, 2024 [GMT]
ரணிலின் பாதையில் அனுர அரசு!
[Thursday 2024-11-28 05:00]


அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

  

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரேமதாச, பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது என்றார்.

தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய பிரேமதாச, மின்சார விலை மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணிபுரிவதை தனது கட்சி ஆதரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

வெளிப்படைத் தன்மையின்மை காணப்படுவதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் இயலாமையை விமர்சித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



கண்ணீரில் கரைந்த மாவீரர் துயிலும் இல்லங்கள்! Top News
[Thursday 2024-11-28 05:00]

தாயகத்தில் நேற்று மாவீரர் நாளை முன்னிட்டு துயிலுமில்லங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்களின் தொகுப்பு.



கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில் பொலிஸ் கெடுபிடி! - கஜேந்திரகுமாருடன் முறுகல். Top News
[Thursday 2024-11-28 05:00]

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.



விசுவமடுவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை!
[Thursday 2024-11-28 05:00]

முல்லைத்தீவு - விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் நேற்று சிறுத்தை ஒன்று உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த புலியை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.



திருகோணமலைக்கு அப்பால் தாழமுக்கம்!
[Thursday 2024-11-28 05:00]

சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.



துயிலுமில்லத்தில் மகனுக்கு சுடர் ஏற்றி விட்டுத் திரும்பிய தந்தை மரணம்!
[Thursday 2024-11-28 05:00]

முல்லைத்தீவில் மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் முள்ளியவளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ஆலயப் பூசகரை கட்டி வைத்து கொள்ளை! - சிக்கினார் பெண்.
[Thursday 2024-11-28 05:00]

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம்யாழ்.கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று முற்பகலில் இடம்பெற்றுள்ளது.



இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு! Top News
[Thursday 2024-11-28 05:00]

வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு- 4 பேரைத் தேடும் பணி தொடர்கிறது!
[Thursday 2024-11-28 05:00]

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை நான்கு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.



நிவாரண, மீட்புப் பணிகளில் கடற்படை, விமானப்படை!
[Thursday 2024-11-28 05:00]

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன.



கொட்டும் மழைக்கு மத்தியில் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி! Top News
[Wednesday 2024-11-27 19:00]

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.



மோசமான வானிலையால் 6 பேர் பலி, இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 17:00]

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



யாழ். வெள்ளத்தினால் 30 ஆயிரம் பேர் பாதிப்பு!
[Wednesday 2024-11-27 17:00]

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பாதுகாப்பு நிலையங்களில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 2,883 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



விமானப் பயணியின் கைப்பையை திருடிய கனடா கணக்காளர் கைது!
[Wednesday 2024-11-27 17:00]

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.



உயர்தரப்பரீட்சை குறித்து 29ஆம் திகதியே தீர்மானம்!
[Wednesday 2024-11-27 17:00]

கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.



அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு!
[Wednesday 2024-11-27 17:00]

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.



வெள்ளத்துக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி! Top News
[Wednesday 2024-11-27 17:00]

மாவீரர் தினத்தை முன்னிட்டு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.



ஏ-9 வீதி போக்குவரத்து தடைப்பட்டது!
[Wednesday 2024-11-27 17:00]

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.



பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்!
[Wednesday 2024-11-27 17:00]

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று காலை பாம்பு கடித்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான 20 வயதுடைய குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகினார். நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதே அவர் மரணமடைந்துள்ளார்.



இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
[Wednesday 2024-11-27 16:00]

மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.



பெங்கால் புயலால் 30 ஆம் திகதி வரை மழை கொட்டும்!
[Wednesday 2024-11-27 05:00]

வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா