Untitled Document
November 29, 2024 [GMT]
தேராவில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
[Friday 2024-11-29 05:00]


முல்லைத்தீவு , தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை   புதன்கிழமை  கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ,  தேராவில் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

முல்லைத்தீவு , தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதன்கிழமை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , தேராவில் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

  

கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரிடம் இருந்து 1 கிராம் 0.1 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி உதயசாந்த தலைமையில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்கள் குழுவினர் , கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் ) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



500 கிலோ போதைப் பொருளுடன் 2 படகுகள் சிக்கின! Top News
[Friday 2024-11-29 17:00]

இலங்கை - இந்திய கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையால் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் அவற்றிலிருந்து 500 கிலோ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ஆட்சிக்காலம் முடிய முன் காணிகள் விடுவிக்கப்படும்!
[Friday 2024-11-29 17:00]

வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார்.



வெள்ளை வான் ஊடக சந்திப்பு வழக்கு -ராஜித விடுதலை!
[Friday 2024-11-29 17:00]

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



யாழ். மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு! Top News
[Friday 2024-11-29 17:00]

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் 79 பாதுகாப்பு நிலையங்களில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,342 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



இருவரையும் கைவிட்டார் சட்டமா அதிபர்!
[Friday 2024-11-29 17:00]

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.



காற்று மாசு அதிகரிப்பு!
[Friday 2024-11-29 17:00]

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையுடன் ஏற்பட்டுள்ள இருள் சூழந்த நிலை குறித்து விளக்கமளித்து அவர் இதனை தெரிவித்தார்.



பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை!
[Friday 2024-11-29 17:00]

ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கான சம்பிரதாய பிரியாவிடை நிகழ்வு இன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. அதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்தனர்.



எம்.பிக்களின் ஓய்வூதியம், சலுகைகளும் பறிபோகும்!
[Friday 2024-11-29 17:00]

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.



அனர்த்தங்களால் உயிரிழந்தோர் தொகை 13 ஆக அதிகரிப்பு!
[Friday 2024-11-29 17:00]

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாகவும், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை!
[Friday 2024-11-29 17:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.



நவாலியில் மாவீரர் நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டது!
[Friday 2024-11-29 05:00]

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவுச்சின்னம் நேற்றுமுன்தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.



வடமேற்காக நகரும் தாழமுக்கம்- வடக்கில் மழை தொடரும்!
[Friday 2024-11-29 05:00]

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அலைபேசியால் அதிகரிக்கும் எயிட்ஸ் நோய்!
[Friday 2024-11-29 05:00]

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்!
[Friday 2024-11-29 05:00]

விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார்.



விடுதலைப் புலிகளைப் போற்றுவது முன்நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறையாக அமையாது!
[Friday 2024-11-29 05:00]

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.



நினைவுகூரும் உரிமைக்கான உத்தரவாதம் அவசியம்!
[Friday 2024-11-29 05:00]

புதிய அரசாங்கம் நினைவேந்தலிற்கான உரிமைக்கு இடமளித்திருப்பது நல்லிணக்கச் செயற்பாட்டின் எதிர்காலம் குறித்து சமூகங்களுக்கிடையிலான எதிர்பார்ப்புக்களை வலுவடையச் செய்துள்ளது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.



மாணவர்கள் பலியான சம்பவம்- மத்ரசா அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் கைது!
[Friday 2024-11-29 05:00]

அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் மத்ரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.



கிளிநொச்சியில் சங்கிலி அறுத்தவர் சிக்கினார்!
[Friday 2024-11-29 05:00]

திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம்நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.



நெடுந்தீவில் இருந்து 3 நோயாளிகள் ஹெலி மூலம் யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பு!
[Friday 2024-11-29 05:00]

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



உயர்தர பரீட்சை டிசம்பர் 3 வரை ஒத்திவைப்பு! - புதிய அட்டவணை வெளியானது.
[Thursday 2024-11-28 16:00]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா