Untitled Document
December 22, 2024 [GMT]
தமிழரசுக் கட்சிக்கு பேச்சாளர் நியமிக்கப்படவில்லை!
[Saturday 2024-12-21 17:00]


இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

  

13ஆவது திருத்தச் சட்டம் என்பது மீளப்பெறப்படமுடியாது என்பதை வலியுறுத்தவில்லை. அதனால் சமஸ்டி முறையான கூட்டாட்சி முறைதான் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை தரும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த தீர்வினை எட்டும் வரைக்கும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் சூழ்நிலையினை இந்தியா உருவாக்கவேண்டும். இந்தியா அதற்கான அழுத்தத்தினை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியினால் கிளின் சிறிலிங்கா என்னும் ஜனாதிபதி செயலணியானது இலங்கையினை தூய்மைப்படுத்தும் விடயமாக சொல்லப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்க்கும்போது வரவேற்கத்தக்கதாக காணப்படுகின்றது. ஊழல் மோசடிகளிலிருந்து பாதுகாத்து இலங்கையினை தூய்மைப்படுத்தும் திட்டம் என்று சொல்லப்பட்டாலும் கூட ஜனாதிபதியின் செயலாளர் தலைமை தாங்கும் 18 பேர் கொண்ட செயலணியில் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் இணைத்துக்கொள்ளாமை ஏமாற்றத்தினை தரக்கூடியதாகவுள்ளது. கிளின் சிறிலங்கா என்ற செயலணியிலேயே கிளின் இல்லாத சுத்தம் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் தொல்லியல் ஆணைக்குழு அமைக்கப்படும்போது ஒரு சிறுபான்மை பிரதிநிதியும் உள்ளடக்கப்படவில்லையென்பது கடந்த பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதில் பௌத்த துறவிகளும் இராணுவத்தினருமே உள்வாக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த கிளின் சிறிலங்கா சிறுபான்மையினத்தவர்கள் உள்வாங்கப்படாமை என்பது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கிளின் செய்வதற்காக வந்த உங்களின் குழுவிலேயே கிளின் இல்லாத நிலையுள்ளதனால் பல்லினம் சமூகம் இடம்பெறவில்லையென்றால் அது ஒரு பாரபட்சமான பக்கச்சார்பான அமைப்பாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அது தொடர்பான அமைச்சருக்கும் சுட்டிகாட்டுகின்றோம்.

மாகாணசபை, உள்ளுராட்சிசபை தேர்தல்களை நடாத்துவது குறித்து ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை வரவேற்கின்றோம். நீண்ட காலமாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாத நிலையும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2013ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்படாத நிலையும் காணப்படுகின்றது. ஜனநாயக ரீதியான மக்கள் பிரதிநிதிகளைக்கொண்டதாக மாகாணசபையும் உள்ளுராட்சி சபைகளும் இருக்கவேண்டும். ஆளுனரோ, ஆணையாளரோ அதிகாரம் செலுத்தும் சபைகளாகயிருந்தால் அது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகயிருக்கும்.

இதேபோன்று ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது 13ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 13ஆவது திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும்.

13ஆவது திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்த 13ஆவது திருத்த சட்டம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். 13ஆவது திருத்த சட்டம் இருக்கும்போதே காணிகள் அபகரிக்கப்படுகின்றன. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் வலக்கையால் வழங்கப்பட்டு இடக்கையினால் பிறித்தெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

13ஆவது திருத்த சட்டம் என்பது மீளப்பெறப்பட முடியாது என்பதை வலியுறுத்தவில்லை. அதனால் சமஸ்டி முறையான கூட்டாட்சி முறைதான் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை தரும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த தீர்வினை எட்டும் வரைக்கும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் சூழ்நிலையினை இந்தியா உருவாக்கவேண்டும். இந்தியா அதற்கான அழுத்ததினை வழங்கவேண்டும். ஒரு சர்வதேச ஒப்பந்தமாக காணப்படும் விடயத்தினை திடீரென தூக்கியெறிய முடியாத நிலையுள்ளது.

இதேநேரம் தேசிய மக்கள் சக்தி ஒரு புதிய அரசியல் யாப்பினை கொண்டுவருவதாக கூறுகின்றது.அந்த அரசியல் யாப்பு என்பது மாகாணசபையில் காணப்படும் குறைபாடுகளை அகற்றும் வகையிலும் நிலையான தீர்வொன்றை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் கூட்டாட்சி முறையினை அடிப்படையாக கொண்டு இருக்குமானால் அது வரவேற்கத்தக்கதாக அமையும்.தமிழர்கள் பூர்வீகமாக வாழும் வடகிழக்கு பிரதேசங்கள் என்பன ஒரு அலகாகசெயற்;படக்கூடிய ஒரு அரசியல் செயற்பாடும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.அவ்வாறு இல்லாது கடந்தகாலங்களில் மரபு ரீதியாகவந்த பேரினவாத அரசுகள் என்ன செயற்பாடுகளை முன்னெடுத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசுக்கும் ஏற்படும்.

கிளின் சிறிலங்கா விடயத்தில் பொருளாதார குற்றவாளிகளை மாத்திரம் கருத்தில்கொண்டதாக இருக்ககூடாது.அரசியல் ரீதியாகவும் மனித உரிமைகள் ரீதியாக தவறிழைத்தவர்களையும் தண்டிக்க கூடியதாக அது இருக்கவேண்டும். கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர்கள், அரசியல்தலைவர்கள், கல்வியியலாளர்கள் தொடர்பில் நாங்கள் அட்டவணைப்படுத்தியிருந்தோம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் சட்டவாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதுபலமாக இருக்கவேண்டும்,சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று கூறியிருந்தார். கடந்த ராஜபகஷர்களின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் என்பது மலினப்படுத்தப்பட்ட மிகவும் இழிவான நிலைக்கு தள்ளப்பட்ட சூழ்நிலை காணப்பட்டது.

கடந்த காலத்தில் நாட்டின் முக்கியஸ்தர்கள் பலர் சிலரின் அரசியல் தேவைக்காகவும் சுயதேவைக்காகவும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகளை தண்டிக்ககூடிய சூழ்நிலையினை காவல்துறை உருவாக்கவேண்டும். இல்லையென்றால் தேசிய மக்கள் சக்தியை கூட கேள்விக்கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

ஊடகப் பேச்சாளர் என்ற பணி பாராளுமன்றக் குழுவினால் தானாகத் தரப்பட்ட பணி அது. கடந்த வவுனியா கூட்டத்தின் போது ஊடகங்கள் என்னையும் சந்தித்தார்கள். முன்னாள் எம்.பி அவர்களையும் சந்தித்தார்கள். இதன்போதும் நான் ஊடகங்களுக்குத் தெளிவு படுத்தியிருந்தேன்.

ஆனால் அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது உண்மை. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியதன் பின்னர் அது முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நான் செய்கின்றேன். அது பற்றியே என்னால் கூற முடியும் மற்றைய விடயத்தை எமது மத்திய குழுவும் பாராளுமன்றக் குழுவுமே அது பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.

கட்சிக்குள் வழக்குத் தாக்கல் என்ற விடயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. கடந்த பொதுச்சபையில் தலைவர் தெரிவின் போதும் ஒரு வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. அது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள விடயம் ஆதலால் அது தொடர்பில் கருத்துச் சொல்ல முடியாது. அந்த வழக்குத் தாக்கலைத் தொடர்ந்து அதன் பின்னர் எடுக்கப்படுகின்ற முடிவுகளிலே முரண்பாடுகள் வருகின்ற போது அதனை முன்மாதிரியாகக் கொண்டு சிலரும் தமது பக்க நியாயத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை காணப்படுகின்றது.

இந்த விடயங்களைப் பொருத்த மட்டில் வழக்குத் தாக்கல் செய்வது என்பதை விட கட்சி மட்டத்திலேயே பேசி தீர்வு காண்பது உகந்ததாக இருக்கும். ஒரு சாரார் வழக்கை நாடும் போது மற்றைய சாராரும் தங்கள் மீது விரல் நீட்டப்படுவதைத் தடுக்கு முகமாக சட்டத்தை நாட வேண்டி வருகின்றது. சிலர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள் இதனால் தா தற்போதைய நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட குறைபாடுகள், வேட்பாளர் தெரிவுக்குழு செய்த குறைபாடுகள் காரணமாக வடமாகாணத்தில் எமக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் கிடைக்க வேண்டு ஐந்து ஆறு ஆசனங்கள் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இதற்கான காரணம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.

மாறி மாறி குற்றங்களை முன் வைக்காமல் சுயாதீனக் குழுவொன்றை அமைத்து வட மாகாணத்தில் ஆசனங்கள் குறைந்தமைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மாறாக என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இன்னுமொருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறிவுபூர்வமானதாகவும், நியாயமானதாகவும் இருக்காது.

வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிங்கள தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தமிழரசுக் கட்சியைப் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு மக்கள் அதிகளவிலான வாக்குகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது தமிழரசுக் கட்சி பெற்றுள்ள வாக்குடன் ஒப்பிடுகையில் கனிசமான அளவு வாக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதில் எங்கு பிழை நடந்திருக்கின்றது, எமது தீர்மானங்களில் ஏதும் தவறுள்ளதா என்பது குறித்தி சர்சைக்குரியவர்கள் நியாயங்களைச் சொல்லாமல் சுயாதீனக் குழு மூலம் இதற்கான விடயங்களைக் கண்டு அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ரஷ்ய போர்முனையில் சிக்கிய தமிழ் இளைஞர்கள் அவசர கோரிக்கை!
[Sunday 2024-12-22 05:00]

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.



அனைவரும் ஏற்றுக் கொள்ளும் புதிய யாப்பு உருவாக்கப்படவில்லை!
[Sunday 2024-12-22 05:00]

சுதந்திர இலங்கையில் அனைத்து இனக்குழுமங்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் யாப்பொன்று இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று சட்டத்தரணி லால் விஜயநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.



வாக்குறுதிகளில் இருந்து பின்வாக்குகிறது அரசாங்கம்!
[Sunday 2024-12-22 05:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதில் அரசாங்கம் பின்வாங்குவது போல் தென்படுவதாக இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் நோர்வே நாட்டுத் தூதுவர் மே-எலின் ஸ்ரெனரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.



கொழும்கு வந்தது சீன மருத்துவக் கப்பல்!
[Sunday 2024-12-22 05:00]

சீனக் கடற்படையின் மருத்துவ கப்பல் Ark Peace நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளுக்காக டிசம்பர் 22 முதல் 27 வரை கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை- வர்த்தமானி வெளியானது!
[Sunday 2024-12-22 05:00]

அனைத்து மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக குறிப்பிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



இன்று மீண்டும் டில்லிக்குப் பறக்கிறார் ரணில்!
[Sunday 2024-12-22 05:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் இந்தியா செல்லவுள்ளார். இவ்வாண்டில் ஒரு மாத கால இடைவெளிக்குள் இரண்டாவது தனிப்பட்ட விஜயமாக நாளை அவர் டில்லி செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.



புதிய ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை!
[Saturday 2024-12-21 17:00]

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறும் என குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



பிரதமர் ஹரிணியுடன் செல்வம் எம்.பி சந்திப்பு!
[Saturday 2024-12-21 17:00]

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.



செலவுக்கணக்கு சமர்ப்பிக்காதவர்கள் பட்டியல் பொலிசாரிடம்!
[Saturday 2024-12-21 17:00]

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் பல்லினத்தன்மை அவசியம்!
[Saturday 2024-12-21 17:00]

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினயும் வலியறுத்தியுள்ளார்.



ஹட்டனில் பள்ளத்தில் பஸ் பாய்ந்து 3 பேர் பலி!
[Saturday 2024-12-21 17:00]

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், இன்று பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது



செம்மணி வீதியில் முதலை!
[Saturday 2024-12-21 17:00]

யாழ் -செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. யாழ். வளைவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் பகுதியிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியில் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



முட்டை விலை வீழ்ச்சி!
[Saturday 2024-12-21 17:00]

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.



விமானப்படை விமானங்களைப் பயன்படுத்திய 15 முன்னாள் அமைச்சர்கள்!
[Saturday 2024-12-21 17:00]

கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.



தாமரைக் கோபுரம் திறந்திருக்கும் நேரம் நீடிப்பு!
[Saturday 2024-12-21 17:00]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.



ஆய்வுக்கப்பல்களுக்கான அனுமதி - தீர்மானிக்க புதிய குழு!
[Saturday 2024-12-21 06:00]

எமது நாட்டுக்குள் சர்வதேச நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ஆய்வுக்கப்பல் வருகையின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.



சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்!
[Saturday 2024-12-21 06:00]

எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



அகதிகள் படகில் இருந்த 12 பேருக்கு தடுப்புக்காவல்!
[Saturday 2024-12-21 06:00]

மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமைகொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



மண்கும்பானில் விபத்து- இளைஞன் பலி!
[Saturday 2024-12-21 06:00]

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



நோர்வே தூதுவருடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு!
[Saturday 2024-12-21 06:00]

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, நேற்று சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா