Untitled Document
December 25, 2024 [GMT]
இறக்குமதி செய்தும் அரிசி விநியோகத்தில் சிக்கல்- ஒப்புக் கொள்கிறது அரசாங்கம்!
[Tuesday 2024-12-24 16:00]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதனை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதனை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் இன்னமும் சந்தையில் அரிசிக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

70ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. சதொச மற்றும் அரச பல்நோக்குக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தனியார் துறையினருக்கும் அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசு எதிர்பார்த்த தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், அரிசியை விநியோக்கும் முறையில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. அரச தலையீட்டுடன் விரைவாக அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அரிசியை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியார் துறையில் அரசாங்கத்தால் நேரடியான சில தலையீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது.

இறக்குமதிக்கான கால எல்லை ஜனவரி 10வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதயில் எதிர்பார்த்த அளவான அரிசி சந்தையில் கிடைக்கப்பெறும். மக்களுக்கு உரிய முறையில் அரிசியை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதும் அவசியமாகும். இந்த இரண்டையும் கையாளும் நோக்கில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமையும்.” என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கிளீன் ஸ்ரீலங்கா பற்றி கதைக்க எதிர்க்கட்சிக்கு அருகதையில்லை!
[Wednesday 2024-12-25 05:00]

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு சிறுபான்மை பிரதிநிதியொருவரின் பெயரைக் கூட பரிந்துரைக்காத ஐக்கிய மக்கள் சக்திக்கு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் சிறுபான்மையினர் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு தகுதியில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



வளமான நாட்டை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்!
[Wednesday 2024-12-25 05:00]

வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு 101 துப்பாக்கிச் சூடுகளில் 60 பேர் பலி!
[Wednesday 2024-12-25 05:00]

2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.



புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
[Wednesday 2024-12-25 05:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.



நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்!
[Wednesday 2024-12-25 05:00]

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம். நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள நத்தார்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்களை வெளியேற்ற உடன் தடை விதியுங்கள்!- ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்.
[Wednesday 2024-12-25 05:00]

“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல காரணங்களை சொல்லி வெளியேற்ற முயல்கிறார்கள். ஏற்கனவே நிர்க்கதி நிலையில் வசிக்கும் மக்களை வெளியே போக சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்?”



மஹிந்தவுக்கு ஐ.எஸ் அச்சுறுத்தல் என்பது பொய்!
[Wednesday 2024-12-25 05:00]

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் அச்சமில்லாமல் செல்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்கு கோடி கணக்கில் அரசு செலவு செய்ய வேண்டிய தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.



மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கம் - பழிவாங்கும் செயல்!
[Wednesday 2024-12-25 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு அரசியல் பழிவாங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



தலைமன்னாரில் கைதான 17 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2024-12-25 05:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை!
[Wednesday 2024-12-25 05:00]

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.



இனப்படுகொலைக்கான நீதிக்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!
[Tuesday 2024-12-24 16:00]

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியில் நீதி தேடவேண்டிய தேவை இருப்பதால் அது தொடர்பில் ஈழத் தமிழ் புலம் பெயர் பிரமுகர்கள் ஒன்றுபட்டு கூட்டாக செயற்பட வேண்டிய தேவை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடாவில் தெரிவித்துள்ளார்.



வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது!
[Tuesday 2024-12-24 16:00]

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.



தலைமன்னாரில் 17 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2024-12-24 16:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.



மதுபானக் கடைகளை மூடக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-12-24 16:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.



மாவை என்னை வளர்க்கவுமில்லை, அவரது மார்பில் நான் பாயவும் இல்லை!
[Tuesday 2024-12-24 16:00]

கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



மீண்டும் வெளிமாவட்டம் செல்ல வேண்டி வரும்! - யாழ். ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த ஆளுநர்.
[Tuesday 2024-12-24 16:00]

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தெரிவித்துள்ளார்.



மோடியின் மௌனத்துக்கு தமிழ் கட்சிகளின் அழுத்தம் இன்மையே காரணம்!
[Tuesday 2024-12-24 16:00]

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கடந்தவாரம் புதுடில்லியில் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தொடர்பில் மௌனம் சாதித்தமை இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமிருந்தும் நெருக்குதல்கள் இல்லாததன் விளைவு என்றுை இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் கூறியிருக்கிறார்.



மகிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது!
[Tuesday 2024-12-24 16:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



வாழைக்குலையுடன் சந்தைக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2024-12-24 16:00]

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.



உள்ளூராட்சித் தேர்தல் சட்டத் திருத்தத்தை விரைவுபடுத்த உத்தரவு!
[Tuesday 2024-12-24 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யாமல் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை தீர்மானிப்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே சட்டத்திருத்த பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா