Untitled Document
December 26, 2024 [GMT]
சேதன உர இறக்குமதி மோசடி குறித்து விசாரணை!
[Thursday 2024-12-26 05:00]


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதிலும் நடைபெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதி விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதிலும் நடைபெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதி விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

  

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். அந்த விசாரணைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றோம்.

தேசிய கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில், சீனவிலிருந்து இறக்குமதி செயப்பட்ட உரத்துக்கான பரிவர்த்தனையில் விவசாய அமைச்சும், விவசாய இராஜாங்க அமைச்சும், கொழும்பு வணிக உரங்கள் லிமிடெட் மற்றும் சிலோன் உர நிறுவனம் ஆகியன தமது கடமையைச் சரியாக ஆற்றவில்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் 2021 ஆம் ஆண்டில் தோல்வியடைந்த இயற்கை விவசாயத் திட்டத்திற்கு அப்போதைய அரசாங்கம் மிகப்பெரிய தொகையைச் செலவிட்டுள்ளது. அந்த அரசாங்கம் குறித்த திட்டத்துக்காக 60 பில்லியனை ரூபாவை செலவிட்டதாகக் கூறப்படுகிறது. நாங்கள் அதையும் விசாரிக்கவுள்ளோம்.

கடந்த காலத்தில் நடந்த மோசடிகள் பற்றிய விவரங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான கோப்புகளை நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கோப்புக்கள் ஒவ்வொன்றும் விசாரிக்கப்படும்.

அந்த நேரத்தில் இலங்கை அசேதன விவசாயத்தை தடை செய்து இயற்கை விவசாய முறைமையை திடீரென்று தீர்மானம் எடுத்து நாடியது. இருப்பினும், விவசாயிகளால் அம்முறையை உடனடியாக ஏற்றக்கொள்ள முடியாமையின் காரணமாக விளைச்சல் குறைவடைந்ததோடு இறுதியில் விவசாயிகளிடையே அமைதியின்மையை ஏற்பட்டமை அனைவரும் அறிந்த விடயம் என்றார்.

முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இயற்கை விவசாயத்தினை நாடுவதாக ஒரேநாளில் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டில் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் குரூப் லிமிடெட்டிலிருந்து இலங்கை உயிர்ச் சேதன உரத்தை கொள்வனவு செய்தது.

இருப்பினும், கையிருப்பின் மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அரசாங்கம் குறித்த உரத்தினை நாட்டுக்குள் கொண்டுவருதற்கு மறுத்துவிட்டது. குறித்த நிறுவனம் அக்குற்றச்சாட்டை மறுத்ததோடு இறக்குமதி செய்யப்பட்ட உரத்துக்கான கொடுப்பனவை வழங்குமாறும் கடுமையாக வலியுறுத்தியது.

இந்த விடயம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே வணிக ரீதியான தகராறிற்கு வழிவகுத்தது. இனால் அரசாங்கம் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்க வேண்டும்!
[Thursday 2024-12-26 16:00]

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மோதிக் கொண்ட அர்ச்சுனாவும் தம்பிராசாவும்!
[Thursday 2024-12-26 16:00]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.



கண்ணீருடன் அனுசரிக்கப்பட்ட சுனாமிப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Thursday 2024-12-26 16:00]

சுனாமி பேரலைக்குப் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.



யாழ். இளைஞன் வவுனியா விபத்தில் பலி!
[Thursday 2024-12-26 16:00]

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.



தமிழரசுக் கட்சியை சீரழிக்க சுமந்திரன் தரப்பு சதி வலை!
[Thursday 2024-12-26 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.



சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல்போன தந்தை, மகன், மருமகன் சடலங்களாக மீட்பு!
[Thursday 2024-12-26 16:00]

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இன்று மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மீண்டும் வேகமெடுக்கும் எலிக்காய்ச்சல்!
[Thursday 2024-12-26 16:00]

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சுற்றுலாப் பயணிகள் வருகை - 2 மில்லியனை தாண்டியது!
[Thursday 2024-12-26 16:00]

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



24 மணி நேரத்தில் 9000 சாரதிகள் அகப்பட்டனர்!
[Thursday 2024-12-26 16:00]

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இடைநிறுத்தப்பட்ட திட்டங்களால் 381 கோடி ரூபா நட்டம்!
[Thursday 2024-12-26 16:00]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாகாண சபை நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக வேலைத்திட்டம் உள்ளிட்ட 32 வேலைத்திட்டங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.



மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! Top News
[Thursday 2024-12-26 05:00]

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்19ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.



நாடெங்கும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட யாழ். கொள்ளைக் கும்பல் கண்டியில் சிக்கியது!
[Thursday 2024-12-26 05:00]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கிளிநொச்சியில் கோர விபத்தில் குழந்தை பலி!- தாய், தந்தை உள்ளிட்ட 3 பேர் காயம்.
[Thursday 2024-12-26 05:00]

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.



கச்சதீவு குறித்து இந்தியாவுடன் பேசும் அவசியம் இல்லை!
[Thursday 2024-12-26 05:00]

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.



எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!
[Thursday 2024-12-26 05:00]

2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.



விஜேவீரவின் குடும்பத்தை பராமரிக்க ஜேவிபியா பணம் கொடுத்தது?
[Thursday 2024-12-26 05:00]

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மரணத்துக்கு பின்னர் அவரது குடும்பத்தார் கடற்படை முகாமிலேயே பராமரிக்கப்பட்டனர். அதற்கு மக்களின் வரிப்பணமே செலவிடப்பட்டது. அது தவறில்லை என்றால் ஜனாதிபதி நிதியத்திலிருந்து சட்ட ரீதியாக உதவிப் பணம் பெற்றது எவ்வாறு தவறாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வியெழுப்பினார்.



நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்!
[Thursday 2024-12-26 05:00]

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் முழுமையாக வெளியிட வேண்டும். உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!
[Thursday 2024-12-26 05:00]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



குடும்பம் மீது தாக்குதல்- இருவர் வைத்தியசாலையில்!
[Thursday 2024-12-26 05:00]

இணுவில் பகுதியில், குடும்பமொன்றின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆலயம் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.



பிரிக்ஸ் அமைப்பின் 9 புதிய நாடுகள்- இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு!
[Wednesday 2024-12-25 20:00]

லேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா