Untitled Document
December 27, 2024 [GMT]
24 மணி நேரத்தில் 9000 சாரதிகள் அகப்பட்டனர்!
[Thursday 2024-12-26 16:00]


போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  

பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை பொலிஸ் கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பித்தது.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகிய இலக்குடன், கடமையாற்றும் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான இம்முயற்சி பண்டிகைக் காலம் முழுவதும் தொடரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப் போக்குவரத்திற்கு மேலதிகமாக ஏனைய வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்துவதற்காக நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது!
[Friday 2024-12-27 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.



கிளிநொச்சி ஊடகவியலாளரைக் கடத்த முயற்சி!- தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.
[Friday 2024-12-27 05:00]

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர்.



கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தடை!
[Friday 2024-12-27 05:00]

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.



திருகோணமலைக் கடலில் மிதந்த இந்திய விமானப்படையின் ட்ரோன்!
[Friday 2024-12-27 05:00]

திருகோணமலை கடலில் மிதந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவர்கள் மீட்டு வந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இந்த சிறிய ரக விமானம் இருந்துள்ளது. ​​இது இலக்கு ஆளில்லா விமானம் (Target drone) என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.



மகிந்தவுக்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்- நீதிமன்றம் செல்கிறது மொட்டு!
[Friday 2024-12-27 05:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.



போதை சாரதிகளின் லைசன்ஸ் இடைநிறுத்தப்படும்!
[Friday 2024-12-27 05:00]

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து ​செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி விமான நிலையத்தில் கைது!
[Friday 2024-12-27 05:00]

நிதி மோசடி செய்து விட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியே இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர். அவர்கள் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டி!
[Friday 2024-12-27 05:00]

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.



தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Friday 2024-12-27 05:00]

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டது.



கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்க வேண்டும்!
[Thursday 2024-12-26 16:00]

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மோதிக் கொண்ட அர்ச்சுனாவும் தம்பிராசாவும்!
[Thursday 2024-12-26 16:00]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.



கண்ணீருடன் அனுசரிக்கப்பட்ட சுனாமிப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Thursday 2024-12-26 16:00]

சுனாமி பேரலைக்குப் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.



யாழ். இளைஞன் வவுனியா விபத்தில் பலி!
[Thursday 2024-12-26 16:00]

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.



தமிழரசுக் கட்சியை சீரழிக்க சுமந்திரன் தரப்பு சதி வலை!
[Thursday 2024-12-26 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.



சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல்போன தந்தை, மகன், மருமகன் சடலங்களாக மீட்பு!
[Thursday 2024-12-26 16:00]

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இன்று மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மீண்டும் வேகமெடுக்கும் எலிக்காய்ச்சல்!
[Thursday 2024-12-26 16:00]

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சுற்றுலாப் பயணிகள் வருகை - 2 மில்லியனை தாண்டியது!
[Thursday 2024-12-26 16:00]

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இடைநிறுத்தப்பட்ட திட்டங்களால் 381 கோடி ரூபா நட்டம்!
[Thursday 2024-12-26 16:00]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாகாண சபை நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக வேலைத்திட்டம் உள்ளிட்ட 32 வேலைத்திட்டங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.



மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! Top News
[Thursday 2024-12-26 05:00]

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்19ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.



நாடெங்கும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட யாழ். கொள்ளைக் கும்பல் கண்டியில் சிக்கியது!
[Thursday 2024-12-26 05:00]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா