Untitled Document
December 28, 2024 [GMT]
காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் மரணம்!
[Friday 2024-12-27 16:00]


நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

  

கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24 ஆம் திகதி முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை (26) பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



யுஎன்எச்சிஆர் அலுவலகத்தை மூடக் கூடாது!- 50 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.
[Saturday 2024-12-28 05:00]

பிராந்தியத்தில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் வருகை தொடர்பான பிரச்சினை, மீண்டும் மீண்டும் நிகழ்வதாக இருக்கும். ஆகவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரக அலுவலகத்தை (யுஎன்எச்சிஆர்) முழு அதிகாரத்துடன் தொடரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்து 50 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளன.



13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா பேசாவிட்டால் பெரும் மகிழ்ச்சி!
[Saturday 2024-12-28 05:00]

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளரை தாக்கியதாக இருவர் கைது!
[Saturday 2024-12-28 05:00]

கிளிநொச்சியில் வியாழக்கிழமை மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



காடுகளில் இராணுவம் முகாம் அமைக்கலாம் - மேய்ச்சல் தரைக்கு மட்டும் அனுமதியில்லையா?
[Saturday 2024-12-28 05:00]

வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.



மன்மோகன் மறைவுக்கு ஜனாதிபதி அனுர இரங்கல்!
[Saturday 2024-12-28 05:00]

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகவும் ஊக்கமாகவும் விளங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!
[Saturday 2024-12-28 05:00]

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.



160 கோடி ரூபாவை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்!
[Saturday 2024-12-28 05:00]

பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.



சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி!
[Saturday 2024-12-28 05:00]

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.



குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்!
[Saturday 2024-12-28 05:00]

அரசியல் மேடைகளில் குறிப்பிடப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்க உத்தேசித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.



வெடுக்குநாறி மலையில் நிம்மதியாக வழிபட விடுங்கள்!
[Saturday 2024-12-28 05:00]

வவுனியா வடக்கு - ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.



பொதுச்சபையின் அனுமதியின்றி மாவையை நீக்க முடியாது!
[Friday 2024-12-27 16:00]

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.



மாவையை நீக்க யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!
[Friday 2024-12-27 16:00]

மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பைச் செய்தபின்னர் எந்தவொரு அனுமதியையும் யாரிடமும் பெற வேண்டுமென்று யாப்பில் கூறப்படவில்லை என்று தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆயுதப்படைகளை அழைத்தார் ஜனாதிபதி அனுர!
[Friday 2024-12-27 16:00]

நாடளாவிய ரீதியில், அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
[Friday 2024-12-27 16:00]

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



பிரான்ஸ் சென்ற இலங்கைப் பெண் விமானத்திற்குள் மரணம்!
[Friday 2024-12-27 16:00]

பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இலங்கைப் பெண்ணொருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.



முப்படைகள் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களிடம் தகவல் கோரப்படுகிறது!
[Friday 2024-12-27 16:00]

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.



பஸ் சில்லுக் கழன்று பட்டாவில் மோதியது!
[Friday 2024-12-27 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி, இன்று காலை சென்ற பஸ், இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், அருகில் சென்ற பட்டாரக வாகனம் விபத்துக்குள்ளானது.



மன்மோகன் சிங் உடலுக்கு ரணில் அஞ்சலி!
[Friday 2024-12-27 16:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.



3 மாதக் குழந்தை மரணம்!
[Friday 2024-12-27 16:00]

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது!
[Friday 2024-12-27 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா